For Quick Alerts
For Daily Alerts
Just In

பெங்களூர் தமிழ்ச் சங்கம் தாக்கு: அரபு தமிழர் அமைப்பு கண்டனம்

துபாயில் உள்ள அமீரக தமிழர்கள் அமைப்பின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவர் அமுதரசன் தலைமையில் நடைபெற்றது. பெங்களூர் தமிழ்ச் சங்கம், பத்திரிகை அலுவலகம் உள்ளிட்ட தமிழ் நிறுவனங்கள் மற்றும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய கன்னட வெறியர்களுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து அமுதரசன் கூறுகையில், ''ஒகேனக்கல் குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட அமைப்புகளில் செயல்பாடு கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இந்த நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், தமிழக அரசு கர்நாடகாவுக்கு வழங்கும் அனைத்து உதவிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டும்''என்றார்.
Comments
Story first published: Thursday, April 3, 2008, 12:13 [IST]