For Daily Alerts
Just In
குற்றாலம் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

தமிழகத்தில் கேரள மாநிலத்தை ஓட்டி அமைந்துள்ள பகுதிகளில் ஓணம் பண்டிகையை ஓட்டி அத்தப்பூ கோலமிடுவது வழக்கம்.
அதேபோல, குற்றாலம் பராசக்தி மகளிர் கல்லூரியில் பயிலும் கேரள மாநிலத்தை சேர்ந்த மாணவிகள் இணைந்து அத்தப்பூ கோலமிட்டனர். மேலும் கேரள பாரம்பரிய உடை அணிந்து நடனம் ஆடினர்.
விழாவை கல்லூரி முதல்வர் சசிகலா குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
தாவரவியல் பேராசிரியை மதுரம், பேராசிரியைகள் வேலம்மாள், கிருஷ்ணம்மாள், மணி்மேகலை, கல்யாணி, மாருதி மற்றும் ஏராளமான மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.