For Daily Alerts
Just In
தம்மாமில் நடந்த 'இஸ்லாம் ஓர் அறிமுகம்' நிகழ்ச்சி
தம்மாம்: தம்மாம் கலாச்சார மையம் சார்பாக இஸ்லாம் ஓர் அறிமுகம் நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந் நிகழ்ச்சியை பொறியாளர் ஷபியுல்லாஹ் கான் துவக்கி வைத்து வரவேற்புரை நிகழ்த்தினார்.
அதைத் தொடர்ந்து தம்மாம் கலாச்சார மையத்தின் மவ்லவி மன்ஸுர் மதனி இஸ்லாம் ஓர் அறிமுகம் என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார்.
அதன் பிறகு மாற்று மதத்தினருக்கான கேள்வி-பதில் நிகழ்ச்சி நடந்தது. இஸ்லாம் குறித்த பிற மதத்தினரின் கேள்விக்கு பொறியாளர் ஜக்கரிய்யா மற்றும் மவ்லவி மன்ஸுர் மதனி ஆகியோர் பதிலளித்தனர்.
தம்மாம் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் மவ்லவி அப்துல் அஜீஸ் மதனி நன்றியுரையை வழங்கினார்.