• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெல்லையின் சனீஸ்வரர் கோவில்- மதுநாத சுவாமி திருக்கோவில்

By Staff
|

நெல்லை மாவட்டத்தில் அமைக்கபெற்று உள்ள சனீஸ்வரருக்கு என்று தனி சன்னதி அருள்மிகு மதுநாத சுவாமி திருக்கோவில் ஆகும். இக்கோவிலானது இலத்தூர் கிராமத்தில் அமைந்துள்ளது.

கோவில் உள்ள மூலவரான மதுநாத சுவாமி மற்றும் அறம் வளர்த்த நாயகி அம்மன், சிவனுக்கு பிரம்ம தோசம் நீங்க செய்த அன்னபூரணி ஆகியோர் மற்றும் இலத்தூர் கிராமத்திற்கான சிறப்பு பற்றிய செய்திகள் உள்ளே உள்ளது.

கோவில் முன் முகப்பில் உள்ள தெப்ப குளம் பற்றிய செய்தியும் உள்ளது. பொது மக்கள் வேண்டுகோள் உள்ளே உள்ளது.

அருள்மிகு மதுநாத சுவாமி உடனுறை அருள்மிகு அறம் வளர்த்த நாயகி திருக்கோவில் இலத்தூர். இக்கோவிலுள் அமைந்துள்ள அருள்மிகு சனீஸ்வர பகவானுக்கு வரும் 26ம் தேதி (சனிக்கிழமை) சனிப் பெயர்ச்சி மாலை 3 மணி 37 நிமிடங்களுக்கு (சிம்மராசியில் இருந்து கன்னிராசிக்கு) சனிபகவான் மாறுகிறார்.

காலை லட்சார்ச்சனை – புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது.

இப்பூவூலகில் பிறந்த உயிர்களைனைத்தும் ஒவ்வொருவரும் தாம் செய்த பாவ புண்ணியங்களுக்குத் தகுந்தவாறு பல பிறவிகள் எடுத்து முடிவில் இறைவனை அடைய வேண்டும் என்பதே பொரியோர்கள் நமக்கு வகுத்துக் கொடுத்த வழி முறையாகும்.

மேற்கண்ட பிறவி பெருங்கடலைக் கடப்பதற்குறிய வழிமுறைகள் தவம், தியானம், யாகம், தொன்று. பிறருக்கு உதவும் நற்குணங்கள் மற்றும் கூட்டு பிராத்தனை தெய்வ வழிப்பாட்டினால் இறைவன் அருளைப் பெற எளிதான வழியாகும்.

இதுவே பிறவிப் பெருங்கடலைக் கடப்பதற்குரிய எளிய வழிமுறையாகும். இதை கருத்தில் கொண்டு உலகம் நன்மை பெறவும், மனித நேயமும், அறமும், அன்பும் வளர்தோங்கவும் இலத்தூர் அருள்மிகு அறம் வளர்த்த நாயகி உடனுறை மதுநாத சுவாமி திருக்கோவிலில் வீற்றிருந்து அருள்பாவித்து வரும் கலையூக கடவுள் நெல்லையில் கிடைத்த ஒரு திருநாள்ளாறு என்று புகழப்படும் அருள்மிகு சனீஸ்வர பகவானுக்கு,

காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை கணபதி ஹோமமும் நவக்கிரக ஹோமமும் நடைபெற உள்ளது.

நெல்லை திருநள்ளாறு என்று புகழப்படுகிறது இலத்தூர் கிராமம். அந்த கிராமம் பெயர் வர சில காரணம் பின் வருமாறு:

புளிய இலையின் அடியிலிருந்து தேன் வழிந்து லிங்கம் கட்டிப் பட்டமையால் அந்த லிங்கம் உள்ள ஊர் 'இலைத்தூர்' என்றும் அது நாளடைவில் பெயர் மங்கி இலத்தூர் என்று ஆனது என முன்னோர்கள் தெரிவிக்கின்றனர்.

லிங்கம் உடைய கோவிலே மது நாத சுவாமி திருக்கோவில் என பெயர் பெற்றது. மது நாத லிங்கத்திற்கு தேனீசுவரர் என்று மற்றொரு பெயர் உண்டு. இவ்வூரை சுற்றி இலவங்காடு அதிகமாக இருந்ததால் இலவங்காடு என்ற பெயர் பெற்றது. பின்னர் 'இலத்தூர்' என மாறிற்று.

அரிகேசர பராக்கிரம பாண்டியன் கல் வெட்டில் குறிக்கப்பட்டுள்ள ஊர்களில் 'இலத்தூர்' இடம் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

இந்த கிராமம் நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுகாவில் இருந்து 6 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. தென்காசியில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தும் கிழக்கே மதுரை தேசிய நெடுஞ்சாலையும், இவ்வூறுக்கு மேற்கே கணக்கப்பிள்ளை வலசையும், வடக்கே அச்சன்புதூரும், தெற்கே குத்துக்கல்வலசையும் கொண்ட எல்லையில் அமைந்துள்ளது.

திருக்கோவிலில் அமைந்துள்ள மதுநாத சுவாமி, அறம் வளர்த்த நாயகி கோவில் மிக பழமை வாய்ந்தது. இக்கோவில் கிழக்குத் திசை நோக்கி அமைந்துள்ளது.

வரலாறு :- தேனீசுவரர் (மதுநாதர்)

முன்னோரு காலத்தில் உலக முதல்வனாகிய சிவபெருமானுக்கும், உலக நாயகியாம் பார்வதிக்கும் திருக்கைலாயத்தில் திருமணம் நடைபெற்றது.

அந்த நல்ல வேலையில் மாமுனிவார்களும், தேவர்களும், கிருடர்களும், கிம்புருவரும், கந்தவரும், மானிடரும் திருகைலாயத்திற்கு விரைந்து வந்து திருமணத்தை காண வடதிசையில் வந்து குவிந்தனர். இதனால் வடதிசை தாழ்ந்தது. தென்திசை உயர்ந்து பூமி நிலை குலைந்தது.

இதனை அறிந்த சிவபெருமான் மாமுனிவர்களில் முதல்வரும் கும்பமுனி என்று போற்றப்படும் அகத்திய மாமுனியான அகத்தியரை அழைத்து தென்திசை சென்று பூமியைச் சமப்படுத்த வேண்டினார்.

அகத்தியர் இறை ஆணையை சிரமேல் கொண்டு தென்திசை நோக்கி சென்று மாலை வேளையில் அனுமன் ஆற்றில் முழ்கி அதன் அருகில் இருந்த புளியமர நிழலில் மணலால் சிவலிங்கம் செய்து பூஜை செய்தார்.

அந்த நேரத்தில் புளியமரக் கிளையில் கூடு கட்டியிருந்த தேன் கூட்டில் இருந்து தேன் புளிய இலை வழியாக சொட்டு சொட்டாக வடிந்தது.

அகத்திய மாமுனிவர் உருவாக்கிய மணல் லிங்கத்தில் தேன் கலந்து லிங்கம் இறுகியது. பூஜை முடித்துக் கவனித்த அகத்தியர் மதுநாதா என்று அழைத்து பேரானந்தம் கொண்டார்.

திருக் கோவிலில் அமைந்துள்ள மதுநாத சுவாமி, அறம் வளர்த்த நாயகி கோவில் மிக பழமை வாய்ந்தது. இக்கோவில் கிழக்குத் திசை நோக்கி அமைந்துள்ளது.

வரலாறு: அறம் வளர்த்தாள் தமிழ் மண்ணில் சுமார் 555 ஆண்டுகளுக்கு முன்னாள் கன்னியாகுமரி மாவட்டம் தேரூர் என்னும் சிற்றூர் கிராமத்தைச் சேர்ந்த மாராயக்குட்டி பிள்ளை பள்ளியறை நாச்சியார் தம்பதியருக்கு பெண்ணாக பிறந்தார்.

மாராயக்குட்டி தம்பதியினர் வேளாண்மை செய்து இறைவனை வேண்டி பிராத்தனை செய்ததன் பலனாக பிறந்த அறம் வளர்த்த நாயகியை தனது தெய்விக பணியில் ஈடுபட செய்தனர்.

அறம் வளர்த்தாள் தனது பெற்றோர்களுடன் அடிக்கடி சுசீந்தரம் கோவிலுக்கு செல்வது வழக்கம். ஆண்டவனிடம் கொண்ட ஆழமான பக்தியில் தன்னை மறந்த நிலையில் ஆளானார். இதனை அறிந்த பெற்றோர்கள் மன வேதனை அடைந்தனர்.

சுசீந்தரம் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பெற்றோர் சொல் கேட்டு கோவிலுக்கு செல்வதை நிறுத்தி கொண்டாள் அறம் வளர்த்தாள். இருந்தாலும் தனது வீட்டின் இருந்து கொண்டே சுசீந்தரம் கோபுரத்தில் இறைவனைத் தரிசித்தாள்.

அறம் வளர்த்த நாயகி நாளடைவில் எல்லாம் துறந்த நிலையில் தன்னை மாற்றி கொண்டாள். இதை அறிந்த பெற்றோர் சுசீந்தரம் அழைத்து சென்றனர்.

அங்கு சென்று மனம் நெகிழ்ந்து பிராத்தனை செய்தனர். அப்போது தன்னுடன் வந்த தனது மகளை காணாமல் கதிகலங்கி நின்ற பெற்றோருக்கு ஒரு அசாரி ஒலித்தது. அதில் அறம் வளர்த்தாளை 'யாம் ஆட்கொண்டோம்' இதை கேட்ட தம்பதியினர் பரவசம் அடைந்து தனக்கு மகளாக பிறந்தது உமா தேவி என்று அறிந்து பெருமிதம் கொண்டனர்.

வரலாறு: அன்னபூரணி

படைத்தல் தொழிலை செய்பவர் பிரம்மன், காத்தல் தொழிலை செய்பவர் விஷ்ணு!. அழித்தல் தொழிலை செய்பவர் சிவபெருமான். இதில் பிரம்மாவுக்கும், சிவனுக்கும் ஐந்து தலைகள் உண்டு.

பிரம்மா தனக்கு ஐந்து தலை இருந்து படைத்தல் தொழிலை செய்வதால் தான் உயர்ந்தவன் என்ற கர்வம் கொண்டார். இதை அறிந்த சிவபெருமான் பிரம்மாவின் ஒரு தலையை எடுத்தார்.

இதனால் சிவபெருமானுக்கு பெரும் பசி ஏற்பட்டு பிரம்மகத்தி தோசம் ஏற்பட்டது. இதனை போக்க அன்னை பராசக்தியிடம் பிச்சை கேட்டு திருவோடு ஏந்தி முறையிட்டார். தோசத்தை நீக்க அன்னை பராசக்தி அருள்மிகு அன்னபூரணியாக வடிவெடுத்த அவருக்கு அன்னம் அளித்தாள். பிரம்மகத்தி தோசம் நீங்கியது.

வரலாறு: சனீசுவரர்

சூரியனின் முதல் மனைவி பெயர் சஞ்சிகை. இவர்களுக்கு பிறந்த குழந்தைகள் வைசுதமன், எமன் என்ற ஆண் குழந்தைகளையும், யமுனை என்ற பெண் குழந்தையை பெற்றெடுத்தாள்.

நாளடைவில் சூரியனின் வெப்பத்தைத் தாங்க முடியாத சஞ்சிகை தனது நிழலையே 'சாயா தேவி' என படைத்து தனது கணவருடன் வாழ்ந்து அவரை விட்டு நீங்காமல் இருக்கும்மாறு கூறிவிட்டு தனது தந்தையின் வீட்டுக்கு சென்றாள். சஞ்சிகையின் பெற்றோரான துவட்டா கோபம் கொண்டார்.

தன் பெற்றோர் கூட செல்ல முடியாமலும் தனது கணவருடனும் செல்ல முடியாமல் வட திசை துருவத்திற்கு சென்று குதிரை வடிவம் எடுத்துக் கொண்டு தனது கணவரான சூரியனை நோக்கி கடும் தவம் செய்தாள். சூரியனுடன் வாழ்ந்து வரும் சாயாதேவிக்கு சாவர்ணி என்னும் மனுவையும், சனியையும் பத்திரை என்ற பெண்ணையும் பெற்றெடுத்தாள்.

சாயா தேவி தனது சகோதரியான சஞ்சிகையின் குழந்தைகளை மிகவும் கொடுமை படுத்தி வந்தாள். இதில் சாயாதேவியின் மகனான யமன் கோபம் கொண்டு அவளைக் காலால் உதைக்க முன் வந்தான். இதில் ஆத்திரம் கொண்ட சாயாதேவி யமனுக்கு கால் முறியும்படி சாபமிட்டாள்.

இதை அறிந்த சூரியன் யமன் குணமடைய வரமளித்தார். இதுவரை தன்னுடன் வாழ்ந்தது சஞ்சிகை அல்ல தன்னுடன் வாழ்வது சஞ்சிகையின் நிழல் சாயாதேவி என்பது அறிந்து தனது மனைவியான சஞ்சிகை தேடி கானகம் அடைந்தார். மீண்டும் அழைத்து வந்து குடும்பம் இருவரும் நடத்தினார்.

பின் மனுவை மன்னராகவும், யமனைக் காலனாகவும், யமுனையை நதியாகவும், சனியைக் கிரகங்களுள் ஒன்றாகவும் இருக்குமாறு செய்தார்.

யமன் தனது இரண்டாம் தாயின் மகனான சனியின் மீது கொண்ட கோபத்தால் சனியை அடித்தான். அதனால் சனியின் கால் நொண்டியாயிற்று. தட்ச யாகத்தில் தனது ஒரு கண்ணை இழந்தார் சனி.

சனி காசி சென்று விஸ்வநாதரை வழிபட்டுத் தன் பதவிக்கு வேண்டிய வலிமையைச் சனி பெற்றார்.

சனிக்கு 'மந்தன்' 'சனைச்சரன்' என்ற இரு பெயர்கள் உண்டு. சனைச்சரன் என்பதே கால போக்கில் சனீசுவரன் ஆனது.

வரலாறு: சனீசுவரர் அம்சங்கள்

இவருடைய கிரகலிங்கம் அலி. கிரக வடிவம் குறியர். கிரக மொழி அன்னைய மொழி. கிரக நிறம் கருப்பு நிறம். கிரக சாதி சூத்திரன். கிரக குணம் குருரர்;. கிரகப் பணி வாதப் பணி. கிரகத் திசை கிரக ரத்தினம் நீலக்கல். கிரக தானியம் எள். கிரக மலா; கருக்குவளை மலர். கிரக மரம் வன்னி மரம். கிரக வாகனம் காகம். கிரக சுவை கைப்பு. கிரக உலோகம் இரும்பு. கிரகங்கள் இராசிகளில் சஞ்சாரிக்கும் காலம் இரண்டரை வருடங்கள். கிரகத் தேவதை எமன் (திருமுக்தி) கிரக ஆடை கருப்பு பட்டு. கிரக தளம் திருநாள்ளாறு மற்றும் இலத்தூர் மதுநாத சுவாமி சன்னதி ஆகும். கிரக ஆசனம் வீல்

தெப்பக்குளம்:

கோவிலுக்கு முன்னால் தெப்பக்குளம் அமைந்துள்ளது. இது செவ்வக வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 80 அடி அகலமும் நூற்றி இருபது அடி நீளம் உள்ளது. குளத்திற்குள் செல்ல மூன்று பாதைகள் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் குளித்து விட்டு கோவிலுக்கு செல்ல் படித்துறை வசதிகள கொண்டது. (படிக்கட்டு கல்) 18 படிகள் கொண்ட படித்துறை ஆகும். தெப்பக்குளத்தை சுற்றி மதில்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.

சிறப்புடைய மதுநாதரை தரிசித்து அருள் பெறுவோம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X