அமீரகத்தில் அண்ணா நூற்றாண்டு நிறைவுவிழா-தமிழரங்கம்
Subscribe to Oneindia Tamil
கடந்த 10.12.09 அன்று துபாயில் நடைபெற்ற அமீரகத் தமிழர்கள் அமைப்பின் செயற்குழுகூட்டத்தில், அமைப்பின் 8ம் ஆண்டு விழாவினையும், அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவினையும் வருகிற 12.02.2010 அன்று “தமிழரங்கம்-2010" என்று கொண்டாடுவதென தீர்மானிக்கப்பட்டது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் கனிமொழி எம்.பி, பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, நாகை நாடளுமன்ற
உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன் ஆகியோரை அழைப்பதென முடிவெடுக்கப்பட்டது.
பிரபல திரை நட்சத்திரங்களின் நடன நிகழ்ச்சிகளும், பின்னனி பாடகர்கள் பங்குபெறும் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறும் என அவ்வமைப்பின் தலைவர் அமுதரசன் தெரிவித்தார்.
மேலும் விபரங்கட்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சலீமை (050-4557513) தொடர்பு கொள்ளவும்.












Click it and Unblock the Notifications