எங்கனம் நுழைந்தாய் நெஞ்சுக்குள்?
Subscribe to Oneindia Tamil

விளங்கவில்லை ...
எங்கனம் நுழைந்தாய் நெஞ்சுக்குள் ??
கரும்பாறை மனதில் சவ்வூடு பரவலாய்
கசிந்துருகும் நின் காதல் சுகமா? சுமையா?
சுகமான சுமையா? இல்லை சுமையாகிவிட்ட சுகமா?
சுகம் எனில் பிரிவினில் ரத்த நாளங்களில்
உன் நினைவு முடிச்சுகள் முட்டி மோதி
சுமையாய் ஆனது ஏன்???
சுமை எனில் உன் காதல் கொண்ட முகம்
நெஞ்சுக்குள் வந்து புரியாத சுகம் தருவதேன்?
எங்கனம் நுழைந்தாய் நெஞ்சுக்குள்???
உன்னை உள்ளத்தில் சுமந்ததால் சுகமா
சுகமான சுமையே...உன்னை மனதில்
சுகமாய் என்றும் சுமப்பேன் --நீ எனை
சுமை என்று வேறு சுகம் நாடி சென்ற போதிலும் .....












Click it and Unblock the Notifications