காஞ்சி பல்கலைக்கழகத்தில் இணைய வழி ஜோதிட பயிற்சி

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்: ஏனாத்தூரில் காஞ்சிமடம் சார்பில் நடத்தப்படும் பல்கலைக்கழக்கத்தில் ஆன்லைன் மூலம் ஜோதிட பயிற்சி வழங்கப்பட உள்ளது.

காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் உள்ள ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி விஷ்வ மஹா வித்யாலயா பல்கலைக்கழகத்தில் விரைவில் துவக்கபட உள்ள இந்த 'சான்றிதழ் வகுப்பு' முழுக்க முழுக்க இணைய வழி மூலமாகவே நடத்தப்படும்.

இப்படிப்புக்கான பாடத்திட்டத்தை மைசூர் மற்றும் ஒஸ்மானியா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் வடிவமைத்துள்ளனர்.

பல்கலைக்கழக துணைவேந்தர் வி.சிவக்குமார் இத்தகவலை காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: ஏற்கனவே சந்திரசேகரேந்திர பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் மூலம் இலவச சமஸ்கிருதப் பயிற்சி மற்றும் வரலாற்று, கலாச்சார தொடர்புடைய பாடங்களை நடத்தி வருகிறோம்.

தற்போது ஜோதிடப் பயிற்சியை ஆன்லைன் மூலம் விரைவில் தொடங்க உள்ளோம்.

சந்திரேசேகரேந்திர பல்கலைக்கழகம் ஜோதிடம், சிற்ப சாஸ்திரம் உள்ளிட்ட படிப்புகளுக்காக மெக்சிகோவில் உள்ள கொரிமா பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்து செயல்பட உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+