For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சபரிமலை குறித்த தகவல்களை அறிய இணையதளம் தொடக்கம்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சபரி்மலை குறித்த எல்லா விபரங்களையும் பொதுமக்கள் உடனுக்குடன் அறிய கேரள போலீசார் இணையதளம் தொடங்கியுள்ளனர்.

இந்த இணையதள தொடக்க விழா சன்னிதானத்தில் நேற்று மாலை நடந்தது. கேரள உள்துறை அமைச்சர் கொடியேறி பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

இணையதள முகவரி www.keralapolice.gov.in இந்த இணையதளத்தில் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களின் தோரய எண்ணிக்கை, வாகன பார்கிங் வசதி, காலநிலை, காணாமல் போனவர்கள் விபரம், பூஜை நேரங்கள், அவசர சிகிச்சை உள்பட எல்லா தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.

ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் தகவல்கள் இடம்பெறும். இது தவிர எஸ்எம்எஸ் மூலமும் பக்தர்கள் இந்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம். கேரளாவில் இருந்து 537252 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி தகவல்களை பெறலாம்.

English summary
Kerala police has launched new website for Sabarimalai devottees. This website will help the devottees to know about Sabarimalai. It contains all details regarding the pilgrimage. Information on this site will be seen in Tamil, Kannada, Malayalam, English and Hindi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X