தமிழகம்- நிமி.க்கு 2 குழந்தைகள் பிறப்பு!
Subscribe to Oneindia Tamil

தேனி மாவட்டம் குடும்ப நல செயலகம் சார்பில் மக்கள் தொகை பிரச்சனைகளும், குடும்ப நலத்திட்டமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
மருத்துவ கல்லூரி டீன் ஜெயந்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் முத்துவீரன், சுகாதாரத்துறை துணை இயக்குநர் செல்லத்துரை, மருத்துவர்கள் உள்பட பலர் பேசினர்.
இதில் தெரிவிக்கப்பட்ட தகவல்கள்:
நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு, கேரளாவும் முதலிடத்தில் உள்ளன.
தமிழகத்தில் மட்டும் ஆண்டுக்கு 10.65 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. அதாவது ஒரு மாதத்தில் 88,750 குழந்தைகளும், வாரத்திற்கு 20,500 குழந்தைகளும், ஒரு நாளில் 2,900 குழந்தைகளும், ஒரு மணி நேரத்தில் 120 குழந்தைகளும், நிமிடத்திற்கு 2 குழந்தைகளும் பிறக்கின்றன.
மக்கள் தொகை அதிகரிக்க கல்வியறிவின்மையே முக்கிய காரணமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications