இங்கிலாந்திலேயே ஆரோக்கியமானதாக இந்தியரின் ஹோட்டல் தேர்வு

Subscribe to Oneindia Tamil

Indali Lounge
லண்டன்: இந்தாலி லவுஞ்ச் என்ற பெயரில் லண்டனில் இயங்கி வரும் இந்தியர் நடத்தும் ஹோட்டல், இங்கிலாந்திலேயே மிகவும் ஆரோக்கியமான ஹோட்டலாக தேர்வு பெற்றுள்ளது.

பிபிசி நிறுவனம் இந்தத் தேர்வை நடத்தி அறிவித்துள்ளது.

இந்தாலி ஹோட்டலின் சிறப்பம்சம் என்னவென்றால் இங்கு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் கிரீம், வெண்ணை, நெய் போன்றவை சேர்க்கப்பட மாட்டாது. மேலும், நார்ச்சத்து அதிகம் கொண்ட உணவுப் பொருட்கள்தான் பெருமளவில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக உண்பதற்கு சிறந்த, உடலுக்கு ஆரோக்கியமான ஹோட்டலாக இதை பிபிசியின் உணவு சானல் தேர்வு செய்துள்ளது.

இதுகுறித்து பிபிசி கூறுகையில், லண்டன் இந்தாலி லவுஞ்ச், இங்கிலாந்திலேயே மிகவும் ஆரோக்கியமான உணவுகளை அளிக்கும் ஒரே ஹோட்டலாக விளங்குகிறது. உடம்பில் நார்ச்சத்து அதிகம் சேரும் வகையிலும், ஸ்டார்ச் குறைவாக கிடைக்கும் வகையிலுமான உணவுகளையே இங்கு பரிமாறுகிறார்கள்.

மேலும், உணவுப் பொருட்களில் உள்ள சத்துப் பொருட்கள் வீணாகிப் போய் விடக் கூடாது என்ற கூடுதல் கவனமும் இங்குள்ள சமையல் கலைஞர்கள் எடுத்துக் கொள்வது வாடிக்கையாளர் நலன் பேணுவதில் அவர்கள் காட்டும் அக்கறையை வெளிப்படுத்துகிறது.

சாப்பாடு மட்டும் சாப்பிட்டு போகும் இடமாக இல்லாமல், நமது உடல் நலனுக்கு உகந்த இடமாகவும் இந்த ஹோட்டல் விளங்குவது பாராட்டுக்குரியது என்று புகழாரம் சூட்டியுள்ளது பிபிசி உணவு சேனல்.

டாக்டர் கர்தார் லால்வானி என்ற சீக்கியர்தான் இந்த ஹோட்டலை கடந்த ஆண்டு லண்டன் பார்க்கர் தெருவில் தொடங்கினார். இவர் மருத்துவத் துறையில் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவு வகைகளைக் கொண்ட ஹோட்டலைத் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்தாலி லவுஞ்சைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+