For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நள்ளிரவு கொண்டாட்டம் நலமாய் முடியனுமா?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

New year party
தீபாவளி, பொங்கல் திருநாள், உள்ளிட்ட பாரம்பரியம் மிக்க பண்டிகைகளின் வரிசையில் புத்தாண்டு கொண்டாட்டமும் இடம் பெற்றுவிட்டது. புத்தாண்டு பிறக்கும் நாளன்று நள்ளிரவில் உற்றார் உறவினர்களுடன் கூடி மிகப்பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்து, ஆடி, பாடி, உண்டு மகிழ்வது என்பது இன்றைக்கு நகரங்களில் மிகப்பெரிய பேஷனாகிவிட்டது. தவிர மிகப்பெரிய நிறுவனங்களும் தங்களின் வியாபார யுக்திக்காக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்கின்றன. வகைவகையான உணவுகள், உற்சாக பானங்கள், ஆடல் பாடல், வான வேடிக்கை என கொண்டாட்டங்கள் களை கட்டும். எண்ணற்ற இளைய தலைமுறையினர் இந்த கொண்டாட்டத்தை விரும்புகின்றனர்.

2012 ம் ஆண்டு பிறக்க இன்னும் சில தினங்களே உள்ளன. ஏராளமானோர் விருந்து விழாவிற்கு ரெடி செய்ய தொடங்கியிருப்பார்கள். நீங்கள் விருந்திற்குப் போகிறீர்களா? அப்படியெனில் இதை படியுங்கள்

இரவு நேர கொண்டாட்டம்

புத்தாண்டு கொண்டாட்டங்கள் என்பது பெரும்பாலும் இரவில் தொடங்கி விடிய விடிய நீடிக்கும். எனவே இந்த பார்ட்டிக்கு பசியோடு போய் அமரவேண்டாம். பசியோடு போய் ஆட்டம் போட்டால் அப்புறம் அங்குள்ள சுவையான உணவு வகைகள் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டு விடும் ஜாக்கிரதை. எனவே பார்ட்டிக்கு செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக பழங்கள் அல்லது காய்கறிகளையாவது சாப்பிட்டு செல்வது நலம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். அப்பொழுதுதான் அங்குள்ள உணவுகளையோ, உற்சாக பானங்களையோ ஒரு கை பார்க்க முடியும்.

கலந்து கட்டி சாப்பிட வேண்டாம்

புத்தாண்டு பார்டிக்கான மரபுப்படி அங்கு சைவம், அசைவம் என வகை வகையான உணவுகள் வைக்கப்பட்டிருக்கும். புதிதாக பார்ட்டிக்கு போகிறவர்களுக்கு அங்குள்ள உணவுகளில் எதை சாப்பிடுவது, எதை தவிர்ப்பது என்ற குழப்பத்தில் எண்ணற்றவைகளை அள்ளிப்போட்டு உண்ணத் தொடங்கி விடுவார்கள். இது வயிற்றுக்கோளாறில் கொண்டுபோய் விட்டு விடும். ஏனெனில் நள்ளிரவு நேரத்தில் அதிக கலோரி நிறைந்த கொழுப்பு சத்துள்ள உணவுகளை உண்டுவிட்டு ஜீரணமாகாமல் அவஸ்தைப்பட நேரிடும்.

எனவே வயிற்றுக்கு எது ஒத்துக்கொள்ளுமே அவற்றை மட்டுமே உண்ணுங்கள். காய்கறிகள், சாலட், பழங்கள் போன்றவைகளை சாப்பிட்டால் வயிற்றுக்கு என்றுமே பாதகமில்லை.

மது விருந்தில் ஜாக்கிரதை

முதல்முறையாக மதுபானம் அருந்துபவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு பழக்கமில்லாதவைகளை அருந்தவேண்டாம் என்பது மருத்துவர்களின் அறிவுரை. குறைந்த அளவு ஆல்கஹால் கொண்டதும் மிதமான உற்சாகத்தை தரக்கூடிய பீர்,ஷாம்பெய்ன், போன்றவைகளை மட்டுமே அருந்துவது பார்ட்டியில் பாதகமின்றி பங்கேற்க ஏதுவாகும் என்பது உணவியலாளர்களின் அறிவுரை. கண்டிப்பாக காக்டெய்லை தவிர்த்து விடுங்கள்.

உற்சாகமாக ஆடி மகிழுங்கள்

புத்தாண்டு பார்ட்டிக்கு போவது உற்சாகமாக ஆடி பாடத்தானே தவிர வெறுமனே அமர்ந்து கொண்டிருப்பதற்காக மட்டுமல்ல. எனவே நண்பர்களுடன் இணைந்து நன்றாக உற்சாகமாக ஆடி மகிழுங்கள். குளிர் காற்று ஊடுருவ விடிய விடிய ஆடிய ஆட்டம் உடம்பில் உள்ள கெட்டவைகளை எல்லாம் கரைத்து கழுவிவிடும். அதே சமயம், பட்டாசு, வானவேடிக்கைகளை கொளுத்தும் போது ஜாக்கிரதையாக கையாளவேண்டும்.

வயிற்றை சுத்தம் செய்யுங்கள்

பார்டியில் நன்றாக உண்டாகிவிட்டது. மதுபானங்களையும் பருகியாகிவிட்டது எனில் அதே உற்சாகத்துடன் நட்புக்கும் உறவுக்கும் விடை கொடுத்துவிட்டு அமைதியாக வீட்டுக்கு திரும்பிவிட வேண்டும். வீட்டுக்கு வந்த உடன் அரைடம்ளர் வெதுவெதுப்பான நீரில் சில சொட்டுக்கள் புதினா ஆயில் விட்டு நன்றாக கலக்கி குடித்துவிட வயிறு லேசாகிவிடும்.

அளவிற்கதிகமான மதுபானம் குடித்துவிட்டது போன்று உணர்பவர்கள், ஒரு டம்ளர் அளவிற்கு தக்காளியை சாறு எடுத்து பருக ஆல்கஹால் ஆபத்து போயே போச்சு. பார்ட்டி கொண்டாட்டங்களுக்குப் போகிறவர்கள் மறக்காமல் இவற்றை நினைவில் கொள்ள வேண்டும் என்பது உணவியலாளர்களின் ஆலோசனையாகும்.

English summary
It is traditional for many families, as well as for many companies and business organizations to arrange special New Year’s Eve Parties, with various meals and drinks, dance and fireworks. Most people love and enjoy such parties, however sometimes we do not feel good either during the party, or after the party due to improper eating or drinking too much of alcohol. German specialists created a list of recommendations for those who is going to spend the New Year’s night partying and eating with friends or family.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X