For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

600 ஆண்டு கால மதுரை வரலாற்றைக் கூறும் காவல் கோட்டம் நூலுக்கு சாகித்ய அகாடெமி விருது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Venkatesan
டெல்லி: தமிழகத்தை சேர்ந்த கவிஞர் சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம்' என்ற நாவலுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது. இந்த நாவல் கூடல் நகரான மதுரையின் 600 ஆண்டுகால வரலாற்று பின்னணியை கொண்டு, எழுதப்பட்டதாகும்.

இந்த ஆண்டிற்கான சாகித்யா அகாடெமி விருதுகளை புதுடெல்லியில் சாகித்ய அகாடமியின் தலைவர் சுனில் கங்கோபத்யா நேற்று அறிவித்தார். இதில் தமிழகத்தை சேர்ந்த கவிஞர் சு.வெங்கடேசன் எழுதிய காவல்கோட்டம்' என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்துள்ளது.

600 ஆண்டுகால வரலாறு

இந்த நாவல் மதுரையின் 600 ஆண்டுகால வரலாற்றை அழகிய சொற்கலோடு, வாழ்வியலோடு சித்தரிக்கிறது. வரலாற்றை பின்னணியை சித்தரிக்கும் வித்தியாசமான நாவலாக இது அமைந்துள்ளது.

விருது பெற்ற சு.வெங்கடேசன் (வயது 41) தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆவார். இவருக்கு கமலா என்ற மனைவியும், யாழினி, தமிழினி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இவர் ஓட்டை இல்லாத புல்லாங்குழல் (1989), திசையெல்லாம் சூரியன்(1990), பாசி வெளிச்சத்தில்(1997), ஆதிபுதிர்(1998) ஆகிய கவிதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார். மேலும் கலாசாரத்தின் அரசியல்(2001), ஆட்சி தமிழ் ஒரு வரலாற்று பார்வை (2003), கருப்பு கேட்கிறான் கெடா எங்கே? (2004), மனிதர்கள், நாடுகள், உலகங்கள் (2002), சமயம் கடந்த தமிழ் (2006) ஆகிய ஆய்வு நூல்கள் கட்டுரைத்தொகுப்புகளையும் எழுதியுள்ளார்.

ஒரு லட்சம் காசோலை

விருதுக்குரியவர்களை 23 இந்திய மொழிகள் பேசும் (மொழிக்கு 3 பேர் வீதம்) 69 உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் தேர்ந்தெடுத்தனர். இந்த குழுவில் தமிழகத்தை சேர்ந்த தமிழ்நாடன், கே.செல்லப்பன், குறிஞ்சி வேலன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். விருது பெற்றவர்களுக்கு கேடயமும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படுகிறது. இதற்கான விழா வருகிற 2012-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந் தேதி புதுடெல்லியில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சாகித்ய அகாடமி செய்துள்ளது. இந்த ஆண்டு 8 கவிதைகள், 7 நாவல்கள், 3 சிறுகதைகளுக்கு சாகித்ய அகடாமி விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அரவான் படம்

காவல் கோட்டம் நாவலில் உள்ளவற்றை அடிப்படையாக வைத்துத்தான் இயக்குநர் வசந்தபாலன் தனது அரவான் படத்தை எடுத்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். முழுக்க முழுக்க இந்த நூலில் கூறப்பட்டுள்ள தகவல்களை வைத்துத்தான் இப்படத்தின் கதை, கதாபாத்திரங்கள், அக்கால உடையலங்காரம் உள்ளிட்டவற்றை அவர் எடுத்துக் கையாண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamil writer Su. Venkatesan, who has captured the 600-year-old history of Madurai till 1920 in his debut novel ‘Kaval Kottam’, won the Sahitya Akademi award for the year 2011. The novel begins with Malik Kafur’s southern campaign, the subsequent take over of the city by Vijayanagar kings and finally the British. The novel deals with the unique security system prevailed in Madurai Fort before it was demolished by the British for the purpose of expanding the city.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X