For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாய் த‌மிழ்ப் பெண்க‌ள் ச‌ங்க‌ம் ந‌ட‌த்திய‌ தீப‌த் திருவிழா

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் தீபத்திருவிழாக் கொண்டாட்டம் 11.11.11 அன்று துபாய் பெண்க‌ள் க‌ல்லூரியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர் நடிகை ரேகா, நிறுவனர், தலைவர் திருமதி. பிருந்தா குமார் மற்றும் தற்போதைய கமிட்டி உறுப்பினர்கள் குத்து விளக்கேற்ற தமிழ் தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது.

விழாவிற்கு தலைமை விருந்தினராக இந்திய‌ க‌ன்ச‌ல் ஜென‌ர‌ல் சஞ்சய் வர்மா, சிறப்பு விருந்தினர்களாக ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும நிறுவன மேலாண்மை இய‌க்குந‌ர் சையத் எம். ஸ‌லாஹுதின், நடிகை ரேகா, ஐசிடபுள்யூசி கன்வீனர் மற்றும் சாத்தி எனும் ம‌ன‌வ‌ள‌ர்ச்சி குன்றியோருக்கான‌ அமைப்பின் தலைவர் கே. குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொலைக்காட்சிக‌ளில் காமெடி நிக‌ழ்ச்சிகள் நடத்தி வரும் ந‌கைச்சுவைப் பேச்சாள‌ர் தேவ‌கோட்டை ராம‌நாத‌னின் க‌லக்க‌ல் காமெடி அர‌ங்கை அதிர‌ வைத்த‌து. கீழ‌க்க‌ரை தாசிம்பீவி ம‌க‌ளிர் க‌ல்லூரி முத‌ல்வ‌ர் முனைவ‌ர் சுமையா தாவூது துபாய் த‌மிழ்ப் பெண்க‌ள் சங்கம் மேற்கொண்டு வ‌ரும் ச‌மூக‌ ந‌லப் ப‌ணிக‌ளைப் பாராட்டினார்.

விழாவில் துபாய் தமிழ்ப் பெண்கள் சங்கத்தின் சார்பில் சாத்தி(Society for awareness and advocacy for holistic inclusion) என்ற அமைப்பிற்கு ந‌ன்கொடை வழங்கப்பட்டது.

ப‌ர‌த‌நாட்டிய‌க் க‌லைஞ‌ர் ந‌ல‌ச் சங்கத்தின‌ர் 'காவ்ய பாரதம்' என்ற தலைப்பில் அன்றும், இன்றும் பெண்களின் நிலை எப்படி இருந்தது, இருக்கிறது என்பது குறித்து நாட்டியம் ஆடினர்.

குழந்தைகளின் தீபாவளி நடனம், பூமிக்குப் பஞ்சபூதங்களின் அவசியம், பல்வேறு நடனவகைகளின் கலப்பு, பரதேசம் போகிறேன் நாடகம், மியூசிக் மெட்லியில் அன்றும் இன்றும், குறள் சொல்லும் நேரத்தில் வந்த கதை, பேஷன் ஷோ ஆகிய நிகழ்ச்சிகள் அருமையாக இருந்தது.

நிகழ்ச்சிக்கு முத‌ன்மை அணுச‌ர‌னை வழங்கிய விஷன் ஆர்ட் குரூப் ஆப் கம்பெனீஸ்- துபாய், எஸ்எஸ்பிடிஎல் குரூப்-சென்னை மற்றும் அன்புடன் ஆதரவு தந்த அனைத்து அணுச‌ர‌ணையாள‌ர்க‌ளுக்கும் நன்றி கூற விழா இனிதே நிறைவடைந்தது.

English summary
Tamil ladies association, Dubai had celebrated Deepa thiruvizha on 11-11-11 in HCT Dubai women's college. Actress Rekha was one of the special guests. Kilakarai TBAK college for women principal Sumaya Dawood praised the ladies association for its service to the society.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X