For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

10ல் 2 குழந்தைகளுக்கு உயர்இரத்த அழுத்தம்- ஓர் அதிர்ச்சி அறிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: இரத்த அழுத்தம்லாம் பெரியவங்களுக்குத் தான் வரும் என்ற காலம் மலையேறி விட்டது. உணவுப்பழக்க, வழக்கங்கள் மற்றும் வாழ்க்கைமுறையின் காரணமாக தற்போது சிறு குழந்தைகளுக்கும் இரத்த அழுத்தம் ஏற்படுவதாக அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று வெளியாகியுள்ளது.

சென்னை மருத்துவமனை ஒன்று மேற்கொண்ட மருத்துவ முகாமில், சிபிஎஸ்ஸி பள்ளி ஒன்றில் பயிலும் 8 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளில் 17.4 % பேருக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதாக கண்டறியப்பட்டது.

சிலிம் அண்ட் பிட்...

சிலிம் அண்ட் பிட்...

உலக சுகாதார தினத்தை ஒட்டி, டயாபடிஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மாணவர்கலிடையே சிக்கென்று ஆரோக்கியமாக இருப்பது எப்படி என்பதை விளக்க மருத்துவ முகாம் ஒன்றை நடத்தினார்களாம்.

பாய்ஸ் தான் பர்ஸ்ட்...

பாய்ஸ் தான் பர்ஸ்ட்...

1898 மாணவர்களை வைத்து நடத்தப்பட்ட இந்த சோதனையில் மாணவர்களுக்கு 18.7%-ம், மாணவிகளுக்கு 15.7%-ம் உயர் இரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டதாம்.

குண்டு தான் காரணம்...

குண்டு தான் காரணம்...

மாணவர்களின் உடல் பருமன் தான் இதற்கு முக்கிய காரணம் என இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன்

வயசுகூடுனா, இரத்த அழுத்தமும் கூட...

வயசுகூடுனா, இரத்த அழுத்தமும் கூட...

8முதல் 10 வயது வரை, 11 முதல் 13 வயது வரை மற்றும் 14 முதல் 17 வயது வரை என மூன்று பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வயதுக்கு தக்க இரத்த அழுத்தமும் கூடுவது கண்டறியப்பட்டுள்ளதாம்.

பாரம்பரியமும் ஒரு காரணம்...

பாரம்பரியமும் ஒரு காரணம்...

இதே போன்றதொரு ஆய்வை டெல்லியில் மேற்கொண்ட போது கிடைத்த முடிவிலும் உடல் பருமன் மற்றும் பாரம்பரியமே குழந்தைகளின் உயர் இரத்த அழுத்தத்திற்கு காரணம் என்று கண்டறியப் பட்டுள்ளது குரிப்பிடத்தக்கது.

குணமாக்க வழி...

குணமாக்க வழி...

ஆரம்ப காலத்தில் கண்டறியப்பட்ட உயர் இரத்த அழுத்த பாதிப்புள்ள மாணவர்களில் சிலருக்கு உடற்பயிற்சி மூலமும், சிலருக்கு காலம் முழுவதும் மருந்து சாப்பிடும் நிலையுமே குணமாக்க ஒரே வழியாம்.

English summary
Hypertension isn't an adult disease anymore. An increasing number of school students are being diagnosed with high blood pressure. A Chennai-based hospital found 17.4% of CBSE school students between eight and 17 years have high blood pressure
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X