For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாயில் மீலாத் குவிஸ் போட்டி: கலக்கிய குட்டீஸ்

By Siva
Google Oneindia Tamil News

Dubai
துபாய்: துபாய் ஈமான் அமைப்பு மீலாத் பெருவிழாவினை முன்னிட்டு 5 முதல் 12 வயது வரையிலான மாணவ, மாணவியருக்கு இஸ்லாமிய வினா விடை மற்றும் கிராஅத் போட்டியை 04.01.2013 அன்று மாலை ஸ்டார் சர்வதேச பள்ளியில் நடத்தியது.

நிகழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம். ஸலாஹுத்தீன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி முன்னிலை வகித்தார். துணைப் பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா வரவேற்புரை நிகழ்த்தினார்.

அல்ஹாஜ் செய்ய‌து எம். ஸ‌லாஹுத்தீன் த‌ன‌து த‌லைமையுரையில், குழ‌ந்தைக‌ளின் த‌னித்திற‌ன்க‌ளை மேம்ப‌டுத்த‌ உத‌வும் இது போன்ற‌ போட்டிக‌ளை தொட‌ர்ந்து ந‌ட‌த்திட‌ கேட்டுக் கொண்டார். மேலும் ந‌ம‌து தாய்மொழியாம் த‌மிழ் மொழியினை ப‌ள்ளியில் ப‌யில‌ வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பெற்றோர்க‌ள் த‌ங்க‌ள‌து க‌ட‌மையினை உண‌ர்ந்து அவ‌ர்க‌ளுக்கு தாய்மொழியினை க‌ற்றுக் கொடுக்க‌ வேண்டும் என்றார். தொட‌ர்ந்து த‌ன‌து சொற்பொழிவினிடையே குழ‌ந்தைக‌ளிட‌ம் கேள்விக‌ளைக் கேட்டு உட‌ன‌டி ப‌ரிசுக‌ளை வ‌ழ‌ங்கி உற்சாக‌ப்ப‌டுத்திய‌து குழ‌ந்தைக‌ளிடையே பெருத்த‌ வ‌ர‌வேற்பைப் பெற்ற‌து.

உணர்வாய் உன்னை பயிற்சியாளர் தஞ்சை ஜலாலுதீன், துபாய் கிரஸென்ட் ஆங்கிலப் பள்ளி முதல்வர் முஹம்மது கலீஃபுல்லாஹ் நடுவர்களாக இருந்து நிகழ்ச்சியை சிறப்புற நடத்தினர். ஜெயா தொலைக்காட்சியின் முன்னால் செய்தி வாசிப்பாளர் ரஃபீக் சுலைமான் குழந்தைகளின் திறன்களை ஊக்கப்படுத்துவது குறித்து விளக்கவுரை வழங்கினார்.

வெற்றி பெற்றவர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத் நன்றியுரை நிகழ்த்தினார்.

விழாக்குழு செயலாளர் கீழை ஹமீது யாசின் தலைமையிலான குழுவில் ஃபைஜுர் ரஹ்மான், மதுக்கூர் ஹிதாயத்துல்லா, முஹைதீன், சாதிக் பாட்சா, ஜமால், காதர், முபாரக் அலி, முஸ்தபா, சலாஹுதீன், ஹபீபுல்லாஹ், ஜாபர் சித்திக், மணல்மேல்குடி அம்ஜத் கான் உள்ளிட்ட நிர்வாக்குழு உறுப்பினர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை சிறப்புற செய்திருந்தனர்.

English summary
Dubai IMAN conducted islamic quiz for the children at Star international school on january 4.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X