For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் விருந்தில் இந்திய துணை கன்சல் ஜெனரல், வேலூர் எம்.பி.

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சியில் இந்திய துணை கன்சல் ஜெனரல் மதுரையைச் சேர்ந்த அசோக் பாபு, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. உள்ளிட்டோர் 23.07.2013 அன்று கலந்து கொண்டனர்.

ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி விருந்தினர்களை வரவேற்றார். ஈமான் அமைப்பு மேற்கொண்டு வரும் இஃப்தார் பணிகளை இந்திய துணை கன்சல் ஜெனரல் அசோக் பாபுவிடம் விவரித்தார். இஃப்தார் நிகழ்ச்சியில் அவர் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

இஃப்தார் நிகழ்ச்சியில் தமிழகத்து சுவையான நோன்புக் கஞ்சியினை இன, மதம், மொழி வேறுபாடில்லாது தினமும் 3000க்கும் மேற்பட்ட நோன்பாளிகளுக்கு வழங்கும் விதத்தை அவர் பாராட்டினார். சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக இஃப்தார் நிகழ்ச்சி நடைபெறுவதாக குறிப்பிட்டார்.

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான் ஈமான் அமைப்பின் இஃப்தார் துவங்கிய விதம் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை மனோராமா நியூஸ் மலையாள செய்திச் சேனலுக்கு பேட்டியாக வழங்கினார். துணைப் பொதுச் செயலாளர் ஏ. முஹம்மது தாஹா இஃப்தார் வழங்கப்படும் இடங்களைப் பார்வையிட அழைத்துச் சென்றார். நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர் முதுவை ஹிதாயத், விழாக் குழு செயலாளர் கீழை ஹமீது யாசின் உள்ளிட்ட நிர்வாகிகள், புரவலர் புதுக்கோட்டை ஷர்புதீன், மனிதவள மேம்பாட்டுத்துறை மேலாளர் கம்பம் சையது அபுதாஹிர், ஜெயா டிவியின் முன்னாள் செய்தி வாசிப்பாளர் புதுக்கோட்டை ரஃபீக், ஈடிஏ ஜீனத் துணைப் பொது மேலாளர் மஹ்மூது சேட், காயல் உமர், கம்பம் பாரி, முஹம்மது முஸ்லிம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

See who attend IMAN's iftar party

புதுக்கல்லூரி இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் முன்னாள் மாணவர்களின் இஃப்தார் நிகழ்ச்சி

துபாயில் சென்னை புதுக்கல்லூரி இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் 2004 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி 18.07.2013 வியாழக்கிழமை மாலை ஹாஜி அலி ஜுஸ் சென்டரில் நடைபெற்றது.

முன்னாள் மாணவர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் முஹம்மது அர்ஷத் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைப்பின் நோக்கம் குறித்து விவரித்தார். பயின்றோம், பிரிந்தோம் என்றில்லாது இத்தகைய ஒருங்கிணைப்பின் மூலம் சமூகத்திற்கு ஏதாவது பயனுள்ளவற்றை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.

ஷா நோஃபல் வரவேற்புரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் இஸ்மாயில் ஹஸன், ஷாகுல் ஹமீது, இம்ரான் முஹம்மது, ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் தங்களது கருத்துரைகளை வழங்கினர். முஹம்மது ஜஸீல், அஹமது முனவர், அஹமது சாலிஹ், முஹம்மது அதீஃப், சித்திக் அஹமது, மொஹிதீன் குன்ஹி, இம்தியாஸ் அஹமது உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர். ஜமால் முஹம்மது நன்றியுரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் தாங்கள் பயின்ற கல்வி நிறுவனத்தில் பயின்று வரும் வசதியற்ற ஒரு மாணவருக்கு இவ்வாண்டு கல்வி உதவித்தொகை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது.

English summary
Ashok Babu, Deputy Consul General of the Consulate General of India, Dubai and Vellore MP Abdul Rahman attended the iftar party thrown by IMAN in Dubai on july 23.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X