For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோலாலம்பூரில் 9வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு!

By Mathi
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும் மலாயாப் பல்கலைக் கழக இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து நடத்தும் ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 29-ந் தேதி முதல் பிப்ரவரி 1-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

1966ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு 1966-ஆம் ஆண்டு கோலாலம்பூர் மாநகரிலும், இரண்டாவது மாநாடு 1968-ஆம் ஆண்டு சென்னை மாநகரிலும் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலும் இம்மாநாடு நடைபெற்றுள்ளது. பிரான்சில்-1970, இலங்கையின் யாழ்ப்பாணத்தில்-1974; தமிழகத்தின் மதுரையில்-1981; மலேசியாவின் கோலாலம்பூரில் -1987 ஆம் ஆண்டுகள் மாநாடுகள் நடைபெற்றன.

இதேபோல் மொரிசியஸில்-1989; தமிழகத்தின் தஞ்சாவூரில் 1995 ஆம் ஆண்டும் உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றன.

இந்நிலையில் 9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி 29 முதல் பிப்ரவரி 1 -ந் தேதி வரை மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ளது.

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இம்மாநாடு நடைபெற உள்ளது.

English summary
The International Association of Tamil Research, Malaysian (IATR, Malaysia) in collaboration in with the Department of Indian Studies, University of Malaya is organizing the 9th Conference - Seminar on Tamil Studies, from 29 January - 1 February 2015 in Kualalumpur, Malaysia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X