வசமாகி விடுங்கள் தேவதைகளின் வசம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்கள் இயல்பிலே அதீத அழகானவர்கள்
இருந்தும் அழகின் பின் அலைபவர்கள் கூட

பெண்கள் மிகமிக புனிதமானவர்கள்
சில நேரம் பெண்கள் புதிரும் கூட

பெண்கள் சாமரம் வீசும் தேவதைகள்
பெண்கள் சண்டை கிளப்பும் சகுனிகளும் கூட

A poem for women

பெண்கள் தாய்மையின் ஒப்பில்லா அழகு
பெண்கள் மாமியாரானால் அபத்தத்தின் ஆரம்பம்

பெண் மனைவியாக உன் தோளில் சாயும் தேவதை
பெண் மதம் பிடித்த யானையாக மாறுவதும் உண்டு

பெண் வாழ்நாள் தோழியாக ஒரு கணவனின் கைகோர்க்கிறாள்
பெண் சிலநேரம் வாழ்நாள் வேலைக்காரியாக வாழ்ந்து முடிக்கிறாள்

பெண் அவ்வப்போது ஒரு குழந்தையென சிணுங்குகிறாள்
பெண் சில நேரம் கோபத்தில் முகம் சிவக்கிறாள்

பெண் சகோதரியாக என்ன என்று உன் தலை வருடுகிறாள்
பெண் என்னடா போடா என்று உன்னிடம் வம்பும் செய்கிறாள்

பெண் பல நேரம்கூட வாய் மூடாமல் பேசிக்கொண்டே இருக்கிறாள்
பெண் சிலநேரம் பேச்சற்ற விழி மூலம் ஆழமாக பார்க்கிறாள்

பெண் தான் அறியாத சலனங்களை ஆணுக்குள் விதைத்து செல்கிறாள்
பெண் தான் அறிந்ததும் அந்த சபலத்தை அறவே அறுத்து செல்கிறாள்

பெண் புற வளைவுகளின் அசைவு பார்க்க இருக்கிறது காத்திருக்கும் ஒரு கூட்டம்
பெண் அகம் பேசும் கானம் கேட்க ஆளே இல்லை சில நேரம்

பெண்ணின் ஆடைகள் தாண்டி ஊடுருவும் கண்கள் அவளை சுடுகின்றன
பெண் பெருமூச்சு தாண்டி தன் விழி நெருப்பில் அவனை எரித்து செல்கிறாள்

பெண் பறவையென திக்கற்ற திசை பறக்க ஆசைப்படுகிறாள்
அவள் மனமறியாமல் அழகிய கூண்டை பரிசளிக்கிறான் அவன்

பெண் அன்பின் கூண்டுக்குள் அடைபட்டு தன்னை அடக்கிக் கொள்கிறாள்
பெண் அணுவின் ஆசைகள் புரியாத அற்பங்களால் அவள் சிற்பமாகிறாள்

பெண்ணால் ஒவ்வொரு வீடும் சொர்க்கமாகிறது
பெண்ணால் ஒவ்வொரு வீடும் பாடசாலையாகிறது
பெண்ணால் ஒவ்வொரு வீடும் கானமாகிறது
தேவதை அவள் தவம் கொண்ட தேவதை அவள் .
தேவதை அவள் தன்னை மறந்த தேவதை அவள்

பெண் வாழும் உலகம் வெகு அழகானது
அது அவளால் தான் அத்தனை அழகாகிறது

பெண் வாழ நினைக்கும் உலகம்
மிகமிக அழகானது
அது உன்னாலே உன்னாலே
அவளை சுற்றி உள்ள உலகாலும்
அவள் கரம்பற்றிய உயிர் கணவனான
உன் புரிதலால் மட்டுமே
அப்படி அழகாக முடியும் அறிவாயா ?

பெண்கள் தினம் மகளிர் தினம்
பூக்களை பரிமாறிக் கொள்வதைவிட
புரிதலை பரிமாறிக் கொள்ளுங்கள்
வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வதை விட
வசமாகி விடுங்கள் தேவதைகளின் வசம்
தேவதைகள் தின வாழ்த்துக்கள்

- Inkpena சஹாயா

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Here is a poem from our writer Inkpena Sahaya on the eve of Internationl Women's day today.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற