For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெக்சாஸின் சான் அண்டோனியோவில் தீபாவளி கொண்டாட்டம்... படகோட்டிய தமிழர்கள்!

By Shankar
Google Oneindia Tamil News

சான் அண்டோனியோ(யு.எஸ்): டெக்சாஸ் மாநிலத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று சான் அண்டோனியோ. அமெரிக்காவில் தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கும் ஊர்களில் ஒன்று. இங்கு 25 ஆண்டுகளுக்கு மேலாக சான் அண்டோனியோ தமிழ்ச் சங்கம் செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட திருவிழாக்கள் சான் அண்டோனியோ தமிழ்ச் சங்கம் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தீபாவளி இரண்டு வார கொண்டாட்டங்களாக நடந்தது.

Deepavali celebrations at San Antonio

முதலாவது வாரம் வழக்கமான ஆடல் பாடல் கொண்டாட்டத்துடன் நிகழ்ச்சி களை கட்டியது. தமிழ்ப் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், பெரியவர்கள் பங்கேற்பில் நடனங்கள் இடம்பெற்றன.

மயிலாட்டம், புலி ஆட்டம், பொய்க்கால் குதிரை என்று அசத்தி விட்டார்கள். நாடு விட்டு நாடு போனாலும் நாட்டுப்புற நடனத்தைப் பார்த்தாலே நம் தமிழர்களுக்கு தனிக் கொண்டாட்டம்தான்.

முன்னதாக தமிழ்ச்சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Deepavali celebrations at San Antonio

இரண்டாவது வாரம், சான் அண்டோனியோ மாநகராட்சியுடன் இணைந்து நடத்தப்பட்ட தீபாவளிக் கொண்டாடத்திலும் சான் அண்டோனியோ தமிழ்ச் சங்கம் பங்கேற்றது.

சான் அண்டோனியோ நகரில் 'ரிவர் வாக்' எனப்படும் ஆற்றையொட்டிய கடைவீதிகள் மிகவும் பிரச்சித்து பெற்றவை. அங்கு படகு சவாரிகளும் உண்டு. தீபாவளியை கொண்டாடும் விதத்தில், அங்கு சிறப்பு படகுத் திருவிழா நடைபெற்றது.

இந்தியாவின் 13 மாநிலங்களின் சார்பில் பங்கேற்றனர். அந்தந்த மாநில மக்களின் பாரம்பரியத்தை விவரிக்கும் விதமாக படகுகள் அலங்கரிக்கப் பட்டிருந்தன. மக்கள் அவர்களுடைய பாரம்பரிய உடை அணிந்து, இசை மற்றும் நடனத்துடன் பவனி வந்தார்கள்.

Deepavali celebrations at San Antonio

சான் அண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கோபுர வேலைப்பாடுகளுடன் படகு அலங்கரிக்கப் பட்டிருந்தது. சேலை மற்றும் வேட்டி சட்டை உடையுடன் கைகளைக் குவித்தபடி தமிழர்கள் பவனி வந்த போது, கூடியிருந்த அமெரிக்கர்களும் ஆரவரத்துடன் வரவேற்றனர்.

டெக்சாஸ் மாநிலத்தின் அண்டோனியோ நகரிலும் தமிழர்கள் அதிக எண்ணிக்கையில் குடியேறி வருவது, தமிழ்ச்சங்க விழாக்களில் பங்கேற்கும் தமிழர்களின் எண்ணிக்கை மூலம் தெரிய வருகிறது.

டெக்சாஸின் ஹூஸ்டன் மற்றும் டல்லாஸ் நகரங்களில் ஏராளமான தமிழர்கள் வசித்து வருகிறார்கள் என்பதுவும் குறிப்பிடத் தக்கது.

-இர தினகர்

English summary
The Tamil community in San Antonio, Texas have celebrated Deepavali festival with traditional style and fun.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X