For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிங்கப்பூரில் டாக்டர் ஹிமானா சையத்தின் 'மெய்தீன் என்ற மாமனிதர்' நூல் வெளியீட்டு விழா

By Siva
Google Oneindia Tamil News

Dr. Himana Syed's book 'Maideen' to be released in Singapore on sept. 29
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் டாக்டர் ஹிமானா சையத் எழுதிய மெய்தீன் என்ற மாமனிதர் (Maideen - a great man) எனும் நூல் வெளியீட்டு விழா 29.09.2013 அன்று மாலை 4.30 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற இருக்கிறது.

விழாவிற்கு விழா ஏற்பாட்டுக்குழு தலைவர் மு. அ. மசூது தலைமை வகிக்கிறார். தமிழ் வாழ்த்தினை உ. ஹ. அப்துல் ஹமீது வழங்குகிறார்.

உமறுப்புலவர் கல்வி உதவி அறங்காவல் நிதி அமைப்பின் ஆலோசகர் எஸ். விவேகானந்தன் மற்றும் சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் அமைப்பின் தலைவர் நஸீர் கனி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க சிங்கப்பூர் கிளையின் தலைவர் முனைவர் எம். ஏ. காதர் நூல் சிறப்புரை வழங்குகிறார்.
நாணய மாற்று வணிகர் சங்க தலைவர் மு ஜஹாங்கீர் மற்றும் தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் நா. ஆண்டியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

சிங்கப்பூர் நாடாளுமன்ற நியமன உறுப்பினர் ஆர். தினகரன் நூலை வெளியிட்டு சிறப்பு விருந்தினர் உரையாற்றுகிறார். நூலாசிரியர் டாக்டர் ஹிமானா சையத் ஏற்புரை நிகழ்த்துகிறார். நிகழ்ச்சியின் நெறியாளராக தமிழாசிரியர் மீனாட்சி பங்கேற்கிறார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக், உமறுப்புலவர் கல்வி உதவி அறங்காவல் நிதி அமைப்பு, உமறுப்புலவர் தமிழ் உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவை செய்து வருகின்றன.

நூல் வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் தொகை யாவும் ஆண்டுதோறும் பெரியவர் ஏ.என். மெய்தீன் பெயரில் கல்வி உதவி நிதியாக மாணவர்களுக்கு வழங்கப்படும்.

English summary
Doctor Himana Syed's book Maideen- A great man will be released in Singapore on september 29.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X