For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஹாய் மேன்.. ஆய் போனா.. இதிலயா துடைப்பாங்க.. வா(மோ)சமான பயலுக.. ஒரு திடீர் தொடர் (5)

Google Oneindia Tamil News

வடிவேலு ஒரு படத்தில் கூல் டிரிங்ஸ் வாங்கி குடிப்பார். அவருக்கு பக்கத்தில் இருக்கும் சிங்கமுத்துவும் அதே பிராண்ட் கூல் டிரிங்ஸ் வாங்கிக் குடிப்பார். அப்போது அவர்களுக்குள் "Bottle" மாறிப் போய் விடும். கடைசியில் கோக்குமாக்கு ஆயி.. அதாவது ஆகி இருவருக்கும் இடையே Battle வெடிக்கும்.. அப்போது வடிவேலு சொன்ன ஒரு வார்த்தையைக் கேட்டு கொந்தளிக்கும் சிங்கமுத்து, இனிமே கூல்டிரிங்ஸ் குடிக்கிறப்பெல்லாம் எனக்கு அதானடா ஞாபகத்துக்கு வரும் என்று கேட்டு வடிவேலுவை மொத்துவார்.

அதே பாணி செய்தியைத்தான் இப்போ உங்களுக்கு சொல்லப் போறோம்.. நல்ல "வாசமான" செய்திதான்.. எதுக்கும் கொஞ்சம் மூக்கை மூடிக்கிட்டே படிங்க..!

"ரத்தம் ஜாலியா இருக்கும்.. ஆனா இந்த முட்டை இருக்கே.. அய்யோடா".. ஒரு திடீர் தொடர் (4)

அந்தக் காலத்துல.. அதுக்காக ரொம்பவெல்லாம் பின்னாடி போய் ரீவைன்ட் பண்ணாதீங்க.. 1857ம் ஆண்டு வரைக்கும் போய்ட்டு வரலாம்.. அந்த வருஷத்துலதான் டாய்லெட்டுகளில் பயன்படுத்தும் "பேப்பரை" கண்டுபிடித்தார்கள் (அதுக்கு முன்னாடியே சீனாக்காரன் மற்ற வகை பேப்பரை கண்டுபிடிச்சு பயன்படுத்த ஆரம்பிச்சுட்டான்). நியூயார்க்கைச் சேர்ந்த ஜோசப் கெயிட்டி என்பவர் டாய்லெட் பேப்பரைக் கண்டுபிடித்த புண்ணியாத்மா. இவர்தான் டாய்லெட்டுகளுக்கு தேவைப்படும் பேப்பரைக் கண்டுபிடித்து பலருக்கும் நிம்மதிப் பெருமூச்சைக் கொடுத்தவர்.

மக்காச்சோள தோகை

மக்காச்சோள தோகை

இப்ப இது இல்லை மேட்டர்.. அதுக்கு முன்னாடி வரை அமெரிக்கர்கள் மற்றும் வெளிநாட்டுக்காரர்கள் எப்படி துடைத்தார்கள் என்ற மாபெரும் கேள்வி உங்களது மூளைக்குள் குறுக்கும் மறுக்குமாக நடக்கலாம்.. அதைத்தான் சொல்லப் போறோம்.. நாமெல்லாம் ரொம்ப விரும்பிச் சாப்பிடுவோம் இல்லையா.. மக்காச் சோளம்.. அதை அமெரிக்காவிலும் ரொம்ப விரும்புவர்கள்.. ஆனால் கால்நடைகளுக்கு ரொம்பப் பிரியமான உணவு அது.

அந்தக் காலத்து டிஷ்யூ பேப்பர்

அந்தக் காலத்து டிஷ்யூ பேப்பர்

மக்காச் சோளத்தை மாடுகளுக்குப் போட்டு விட்டு அதன் தோகை இருக்கு தெரியுமா.. அதை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வர்கள். பிறகு அதன் ஷார்ப்னஸ்ஸை சீராக்கி விட்டு டாய்லெட்டுக்குள் பத்திரமாக வைத்துக் கொள்வார்கள்.. அதுதாங்க.. அந்தக் காலத்து டாய்லெட் பேப்பர்.. அதாவது மக்காச் சோளத்தை தின்று விட்டு, தோகையை "துடைக்க" பயன்படுத்தியுள்ளனர்.

விடுதலை

விடுதலை

பிறகு செய்தித்தாள்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு இந்த கக்கூஸ் தொல்லையிலிருந்து மக்காச் சோள தோகைகளுக்கு விடுதலை கிடைத்தது. செய்தித் தாள்களை துண்டு துண்டாக கட் செய்து அதை வைத்து பயன்படுத்த ஆரம்பித்தனர். ஒரு டைமில், "ஃபார்மர்ஸ் அல்மனாக்" என்ற புத்தகத்தைத் தூக்கி டாய்லெட்டுகளில் மாட்டி வைப்பார்களாம். காரணம் அந்த புத்தகத்தின் அனைத்துப் பக்கங்களிலும் துளை இருக்குமாம்.. ஸோ அதை அப்படியே ஆணி அடித்து சுவரில் தொங்க விட்டுக் கொண்டால் டாய்லெட் போகும்போதெல்லாம் பேப்பரை ஈஸியாக கிழித்துத் துடைக்க சவுகரியமாக இருந்ததால் அப்படிச் செய்துள்ளனராம்!

கண்டுபிடித்த கெயிட்டி

கண்டுபிடித்த கெயிட்டி

இந்தத் தொல்லைகளுக்குப் பிறகுதான் கெயிட்டி கண்டுபிடித்த டாய்லெட் பேப்பர்கள் அறிமுகமாகின... கால் துடைக்கும் கலாச்சாரத்திற்கு இது ஒரு மைல்கல்லாகவும் அமைந்தது. ஆரம்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட டாய்லெட் பேப்பர்கள் சற்று கரடு முரடாக, ரஃப்பாக இருந்துள்ளது. இதனால் சரிவர துடைக்க முடியாமல் அவதிப்பட்டுள்ளனர். பின்னர் அதில் மென்மையைக் கூட்டி அடுத்தடுத்த "வெர்சன்கள்" வந்து கடன் கழிப்போர் நெஞ்சில் பால் வார்த்துள்ளன.

கண்டுபிடிப்பின் தாய்

கண்டுபிடிப்பின் தாய்

தேவைகள்தான் கண்டுபிடிப்பின் தாய் என்று ஒரு சொலவடை உண்டு. அதை இந்த டாய்லெட் பேப்பர் கண்டுபிடிப்பு எந்த அளவுக்கு தத்ரூபாமாக நிரூபித்துள்ளது பாருங்கள். சரி டாய்லெட்டை விட்டு வெளியே போய் ஒரு டீ சாப்பிட்டுட்டு வரலாம்.. அதுக்காக கடைக்குப் போக வேண்டியதில்லை.. இங்கிலாந்து நாட்டு ராணுவ டாங்கர்களிடம் போனால் போதும்.. "சூடா" டீ கிடைக்கும்.. என்ன பாஸ் குழப்பமா இருக்குமா.. வாங்க சொல்றோம்! தேவைகள்தான் கண்டுபிடிப்பின் தாய் என்று ஒரு சொலவடை உண்டு. அதை இந்த டாய்லெட் பேப்பர் கண்டுபிடிப்பு எந்த அளவுக்கு தத்ரூபாமாக நிரூபித்துள்ளது பாருங்கள். சரி டாய்லெட்டை விட்டு வெளியே போய் ஒரு டீ சாப்பிட்டுட்டு வரலாம்.. அதுக்காக கடைக்குப் போக வேண்டியதில்லை.. இங்கிலாந்து நாட்டு ராணுவ டாங்கர்களிடம் போனால் போதும்.. "சூடா" டீ கிடைக்கும்.. என்ன பாஸ் குழப்பமா இருக்குமா.. வாங்க சொல்றோம்!

டுமீல் விட்டபடி டீ

டுமீல் விட்டபடி டீ

அந்தக் காலத்து இங்கிலாந்து நாட்டு ராணுவ டேங்கர்களில் டீ தயாரிக்கும் கருவிகளையும் பொருத்தி வைத்திருப்பார்களாம். இது எதற்கு தெரியுமா.. உக்கிரமாக போர் நடக்கும் சமயங்களில் ராணுவ வீரர்கள் டயர்ட் ஆகி விடாமல் தடுக்க, டேங்கர்களிலேயே டீ போடும் கருவியை பொருத்தியுள்ளனர். அவ்வப்போது அதிலிருந்து டீ போட்டுக் குடித்துக் கொள்வார்களாம்.

சுடச் சுட சுட்டுத் தள்ளு

சுடச் சுட சுட்டுத் தள்ளு

அதாவது "சூடா டீ குடி.. சுடச் சுடச் சுட்டுத் தள்ளு" என்ற பாலிசியை கடைப்பிடித்துள்ளது இங்கிலாந்து ராணுவம். டீ சாப்பிடுவதற்காக டேங்கர்களை விட்டு விட்டு டீ பிரேக் போட்டு விட்டு ராணுவ வீரர்கள் கிளம்பிப் போனால் "கதை கந்தசாமி ஆகி விடும்" என்ற பயத்தால் கூட இப்படி ஒரு டுமீல் ஏற்பாட்டை இங்கிலாந்து ராணுவம் செய்ததா என்று தெரியவில்லை. எத்தனை ராணுவ வீரர்கள் டீ குடித்துக் கொண்டே எதிரிகளை சுட்டுத் தள்ளினார்கள் என்று தெரியவில்லை. இந்த இங்கிலீஷ்காரங்க.. ரொம்பத்தான் வித்தியாசமான வில்லர்களாக இருந்திருப்பார்கள் போல அந்தக் காலத்தில்!

முதல்ல சொன்ன டாய்லெட் பேப்பர், மக்காச் சோள தோகை, அப்புறம் டேங்கர் டீ.. எல்லாத்தையும் தனித் தனியா படிங்க.. சேர்த்துப் படிச்சு வாந்தி எடுத்தா அதுக்கு கம்பெனி பொறுப்பல்ல.. மீண்டும் சந்திப்போம்.

(தொடரும்)

[ தொடர் : 1, 2, 3, 4 ]

English summary
Before the Toilet papers are arriving, US peopel have used many things inculding Corn combs for cleansing.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X