கன்னத்தில்... 3 வாட்டி "கிஸ்" கொடுத்தால்.. ஒரு திடீர் தொடர்!

Subscribe to Oneindia Tamil

பூமிப் பந்தில் ஒவ்வொரு பிரதேசத்திலும் ஒரு வித்தியாசம் புதைந்திருக்கும்.. இந்தியாவின் ஓட்டை வடையைப் பார்த்து ஆச்சரியப்படாத வெள்ளைக்காரர்கள் இருக்க முடியாது.. இப்படி ஒவ்வொரு நாட்டிலும் ஒரு நூதனம், வினோதம், விசித்திரம்... என அடுக்கிக் கொண்டே போகலாம்.

இது சின்ன வாழ்க்கை.. எத்தனை காலம் இது நீடிக்கும் என்று யாருக்குமே தெரியாது.. ஆனால் வாழும் ஒவ்வொரு நொடியையும் கலர்ஃபுல்லாக வைத்துக் கொள்ள நம்மால் முடியும்.. என்ன.. அதற்கென கொஞ்சம் மெனக்கெட்டால் போதும்.. வாழ்க்கை அழகாக மாறி விடும்.

உலகம் முழுவதும் கொட்டிக் கிடக்கும் ஆச்சரியக் குவியல்களுக்குள் மூக்கை நுழைத்து என்னெல்லாம் இருக்கிறது என்று பார்த்தால் உண்மையிலேயே இப்படியெல்லாமா இருக்கு என்று நமக்குள் ஒரு அயர்ச்சி எட்டிப் பார்க்கத்தான் செய்கிறது.. அப்படி நாம என்னதான் பார்த்தோம் என்பதை உங்களிடமும் பங்கிட்டுக் கொள்ளவே இந்த திடீர் தொடர்..

ஆச்சரிய நெதர்லாந்து

ஆச்சரிய நெதர்லாந்து

வாங்க அப்படியே நெதர்லாந்து பக்கம் போய்ட்டு வருவோம்.. பெரிய "லந்துக்காரர்"கள் இந்த நாட்டவர்.. ஏகப்பட்ட ஆச்சரியங்கள் குவிந்து கிடக்கும் நாடுதான் நெதர்லாந்து. இந்த நாட்டின் முக்கியமான ஆச்சரியமே சைக்கிள்தான்.. திரும்பிய பக்கமெல்லாம் சைக்கிளைப் பார்க்கலாம்.. ஜி.கே.வாசன் மட்டும் இந்த நாட்டில் வந்து கட்சி ஆரம்பித்தால் அவருக்குத்தான் அத்தனை ஓட்டும் விழும் என்று சொல்லும் அளவுக்கு சைக்கிள்களின் தேசமாக இருக்கிறது நெதர்லாந்து.

பாசக்கார பயலுக

பாசக்கார பயலுக

ஆனால் பாருங்க.. நெதர்லாந்துக்காரர்கள் ரொம்ப உணர்ச்சிவசப்படுவாங்க. அதுவும் எப்படி தெரியுமா.. கட்டுப்படுத்தவே முடியாத அளவுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் செய்வாங்க.. நம்ம கிட்ட பேசிட்டே இருப்பாங்க.. திடீர்னு முத்தம் கொடுக்க ஆரம்பிப்பாங்க.. முதல்ல அறிமுகம் ஆவதே முத்தத்தில்தான்.. அதேபோல பை சொல்லி விட்டுப் போகும்போதும் முத்தம்தான்.. கொடுப்பதும் ஒன்று இரண்டு அல்ல.. 3 முத்தம் கொடுப்பாங்க!

கன்னத்தில் முத்தமிட்டால்

கன்னத்தில் முத்தமிட்டால்

கன்னத்தில் 3 வாட்டி முத்தமிட்டு விட்டுத்தான் பேசவே ஆரம்பிப்பாங்க.. பேசி முடிச்சு கிளம்பும்போதும் இந்த 3 முத்தம் கண்டிப்பாக கிடைக்கும்.. யாரா இருந்தாலும் முத்தம் உண்டு. அவங்க மட்டும்தான் கொடுக்கணும்னு இல்லை.. பதிலுக்கு நீங்களும் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பாங்க.. அப்பதான் நீங்களும் அவங்க மேல அன்பா இருக்கீங்கன்னு அர்த்தமாம். முத்தம் கொடுக்காட்டி ரொம்ப வருத்தப்படுவாங்களாம்.

பச்சக் பச்சக் பழக்கம்

பச்சக் பச்சக் பழக்கம்

டாக்டரைப் பார்த்தாலும் முத்தம்.. வாத்தியாரைப் பார்த்தாலும் முத்தம்.. சக நண்பர்களுடன் பேசினாலும் முத்தம்.. ஏன் கடைக்குப் போனால் அங்கு தெரிந்தவர்களைச் சந்தித்துப் பேசினாலும் கூட முத்தம்தானாம்.. சிலநேரங்களில் கடைக்காரர் மீது அன்பு வந்து விட்டால் அவருக்கும் 3 முத்தம் கன்பர்ம்!.. இப்படி முத்தம் கொடுத்தே "யுத்தம்" இல்லாத அமைதியான உலகை உருவாக்கி வைத்துள்ளனர் இந்த டச்சுக்காரர்கள்.

நான் இருக்கேன்!

நான் இருக்கேன்!

வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளும் கூட இந்த முத்தத்தில் இருந்து தப்ப முடியாதாம். அவைகளுக்கும் நிறைய முத்தங்களை அள்ளிக் கொடுப்பார்களாம்.. நெதர்லாந்து மக்களைப் பொறுத்தவரை, முத்தத்தை அன்பின் வெளிப்பாடாக பார்க்கின்றனர். முத்தம் கொடுப்பதால் அன்பைப் பரிமாறிக் கொள்கிறோம், ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறோம், நான் இருக்கேன் என்ற செய்தியை தெரிவிக்கிறோம் என்பதே அவர்களின் விளக்கமாக இருக்கிறது.

துயரமாவது

துயரமாவது

யாராவது துயரத்தில் இருந்தால் அவர்களுக்கு முத்தம் கொடுத்தே அந்த வலியிலிருந்து விடுவித்து விடுவார்களாம் நெதர்லாந்துக்காரர்கள். இதனால்தான் பெரும்பாலான நெதர்லாந்துக்காரர்களை உற்சாகக் குவியலாக நாம் பார்க்க முடியும்.. சோகத்தில் மூழ்கி கிடப்பவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த அளவுக்கு ஒருவருக்கு ஒருவர் அன்பைப் பரிமாறிக் கொள்பவர்களாக இந்த நாட்டு மக்கள் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+