For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் மாபெரும் சித்திரைத் திருவிழா!

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் மாபெரும் சித்திரைத் திருவிழா பல்வழி கருத்தரங்கம் நாளை நடைபெறவுள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

வாசிங்டன்: அமெரிக்காவின் வாசிங்டன் நகரில் உள்ள வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில், நாளை மாபெரும் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது.

வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில், நாளை மாபெரும் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தின் பாரம்பரிய சடங்குகளான முளைப்பாரி, கும்மிப்பாடல் மற்றும் மஞ்சள் நீராட்டு குறித்த பல்வழி கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.

Tamil Cultural Event by Washington Tamil Sangam

ஒவ்வோர் ஆண்டும் பாரம்பரிய முளைப்பாரி வளர்ப்பதை ஊக்குவித்து வரும் தமிழ்ச்சங்கம், இந்த ஆண்டு அதை மேலும் சிறப்பாக்க தமிழகத்தில் இருந்து சிறப்பு அழைப்பாளர்களை அழைத்து வந்து அதன் பெருமைகளை வாசிங்டன் வாழ் தமிழக மக்களுக்கு விளக்க இருக்கிறது.

இதில் வாசிங்டன் வட்டார தமிழ்ச்சங்கத்தின் முளைப்பாரி வளர்ப்பில் ஆக்கமும், ஊக்கமும் என்கிற தலைப்பில் சிறப்பு அழைப்பாளர் பிரியா பார்த்தசாரதி உரையாற்றவுள்ளார். மேலும், அமெரிக்காவில் தமிழ் மரபு போற்றும் பெண்களின் பங்களிப்பு என்கிற தலைப்பில் சமூக ஆர்வலரும், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் பேரவைப் பிரதிநிதியுமான புஸ்பராணி வில்லியம்ஸ் உரை நிகழ்த்துகிறார்.

நாட்டுப்புற கும்மிப்பாடல் மற்றும் முளைப்பாரி வளர்ப்பு என்கிற தலைப்பில் உரையாற்ற சிறப்பு அழைப்பாளர்கள் தேனி மாவட்ட தமிழ்நாடு வேளாண்துறை தோட்டக்கலை அலுவலர் ரா.மனோகரன், நாகர்கோவிலைச் சேர்ந்த தமிழாசிரியை கோ.க.முத்துலெட்சுமி, மதுரை சோழவந்தான் தமிழர் மரபு வேளாண்மை ஆய்வு இயக்கத்தைச் சார்ந்த பா.உமாசங்கர் ஆகியோர் உரையாற்றுகின்றனர்,

English summary
Tamil Cultural Event by Washington Tamil Sangam. Washington Tamil Sangam is to host a Conference on Tamil traditional event such as Mulaipari, Kummipattu and Manjal Neerattu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X