இந்தியாவின் மாபெரும் அரசியல் கருத்துக் கணிப்பு.. நீங்கள் பங்கேற்றீர்களா?
 • search

மார்கழி பாவை நோன்பு: திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள்- 17

By Mayura Akilan
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

  திருப்பாவை - 17

  அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
  எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
  கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
  எம்பெருமாட்டி யசோதா அறிவுறாய்
  அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகளந்த
  உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
  செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
  உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய்

  பொருள்: ஆடைகளையும், அன்னத்தையும், குளிர் நீரையும் தானமாக தரும் நந்தகோபனே, எழுந்திராய். கொடியிடை கொண்ட பெண்களுக்கெல்லாம் முதன்மையானவளே, ஆயர் குல விளக்கே, எம்பெருமாட்டி யசோதையே, நீயும் கூட எழுவாயாக.

  Thirupavai and Tiruvempavai for the month of Margazhi Jan 01

  வானத்தை ஊடுருவி, தனது ஈரடியால் உலகை அளந்த உத்தமனே எழுந்திராய். செம்மையான உனது பாதத்தில் பொற் கழலை அணிந்த செல்வனே, பலராமா, நீயும் உன் தம்பி கண்ணனும் இனியும் உறங்க வேண்டாம், எழுதிருப்பீர்களாக.

  திருவெம்பாவை - 17

  செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
  எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலாதா
  கொங்குஉண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
  இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி
  செங்கமல பொற்பாதம் தந்தருளும் சேவகனை
  அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
  நங்கள் பெருமானைப் பாடிநலம் திகழ
  பங்கயப் பூம்புனல்பாய்ந்து ஆடேல் ஓர் எம்பாவாய்!

  விளக்கம்:

  நங்கள் சிவபெருமான் பரம கருணாமூர்த்தி! அவர் சிவந்த கண்களைக் கொண்ட திருமால், நான்முகன், மற்றுமுள்ள மற்ற தேவர்கள் ஆகியவர்களிடத்திலும், வேறு எங்கும் இல்லாத இன்பம் தனது அடியவர்களாகிய நம்மிடம் உள்ளதாக அருள் புரிந்தவர்.
  நம்முடைய குற்றங்களையெல்லாம் நீக்கி குணம் மட்டும் கொண்டு கோதாட்டும் உத்தமர். எளி வந்த கருணையினால் நமக்காக இரங்கி இம்மண்ணுலகில் தேன் சிந்தும் மலர் சூடிய கருங்கூந்தலையுடைய உமையம்மையுடன் ரிஷபத்தில் இறங்கி நம்முடைய வீடுகளில் வந்து எழுந்தருளி தன் பொற்பாத தரிசனம் தந்தருளிய வள்ளல். பெண்ணே! அந்த அருள்கனிந்த திருக்கண்களையுடைய அரசனை, அடிமைகளாகிய நமக்கு தெவிட்டாத தெளிந்த அமுதமானவனை, நம்முடைய சிவபெருமானைப் பாடி மங்களம் பெருகி விளங்க தாமரை மலர்கள் நிறைந்த இந்த நீரில் பாய்ந்து நீராடுவோமாக!

  வரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்! - பதிவு இலவசம்!

  English summary
  Margazhi has arrived. Recital of Thirupavai and Tiruvempavai has begun in the temples all over Tamil Nadu.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more