For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிந்தனை.. இன்று ஏப்ரல் 1!

Google Oneindia Tamil News

-லதா சரவணன்

APRIL 1

ஏப்ரல் 1 உலகம் முழுவதும் முட்டாள்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. யாராவது ஒருவரிடம் ஏமாந்துவிட்டு ஹே என்று முழிப்பதும், வெற்றி பெற்றவர்கள் சந்தோஷிப்பதும் இந்நாளின் சிறப்பு பெரியவர்கள சிறுவர்கள் என்ற பாராபட்சம் இல்லாமல் வரும் ஒரு விளையாட்டு நாள் சில நேரங்களில் அவை வினையாகிப்போவதும் உண்டு.

ஏமாற்றம் என்பது என்ன ? நம்பிக்கை சிதைந்து போவதுதானே...?! இன்றைய நம்பிக்கைகள் எங்கெங்கு சிதைந்து போகிறது.....காதல் என்ற பெயரில் பெண்ணை நயவஞ்சமாக ஏமாற்றி அவளின் அங்கங்களை கூறுபோடும் காமப்பேய்களிடம் சிக்கித் தவிப்பதில், எத்தனையோ முன்னேற்றங்கள் இருந்தாலும் இரைந்து போய் மானத்திற்கும் கெளரவமாய் வாழ்வதற்கும் கூக்குரலிட்டு யாராவது வந்து என்னைக் காப்பாற்ற மாட்டார்களா என்று கத்தி கத்தி ஜீவன் வற்றிப்போன ஒவ்வொரு பெண்ணின் அலறலும் ஒருவகை ஏமாற்றுத் தனம்தான்.

Today is April 1

நமது வரலாறுகள் சிறப்பானவை, நம் நாட்டு அரசியல்வாதிகள் அள்ளித்தரும் வாக்குறுதிகளால் மக்கள் நூறுக்கும் இருநூறுக்கும் ஆசைப்பட்டு இன்று விடிந்து விடும் நாளை விடிந்துவிடும் என்று ஏமாந்து ஒட்டுப்போடும் தங்கள் உரிமையில் தடுமாறுவதைப் போல கடைக்கோடியில் இருந்து மாளிகை வரையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஏமாந்துபோய் தான் இருக்கிறார்கள்.

அள்ளிக்கொடுக்கும் சம்பளம் கை நிறைய கடன் அட்டைகளின் விலங்கிற்கு கைகளைக் கொடுத்துவிட்டு முழி பிதுங்குவதும். நாம் ஏதாவது ஒருவகையில் முட்டாள்களாய் ஆக்கப்பட்டுதான் வருகிறார்கள், அப்படிப்பட்ட இந்த நாளின் வரலாற்றை கொஞ்சம் ஆராய்ந்துப் பார்த்தால் 16ம் நூற்றாண்டு வரையில் இந்தநாள் தான் புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. பழைய ஜீலியன் ஆண்டு கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார் இதன்படிதான் ஜனவரி 1 புத்தாண்டாக பின்வரும் காலங்களில் கொண்டுவரப்பட்டது

முதன் முதலில் பிரான்ஸ் நாட்டில்தான் இந்த முட்டாள் தினம் அனுசரிக்கப்பட்டது, இப்போது ஒரு திட்டமோ மாற்றமோ உருவாகும் போது எப்படி அதை எதிர்த்து போராட்டமும் வலுப்பெறுகிறதோ அப்போதும் பல ஐரோப்பிய தேசங்களும் மக்களும் உடனே ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பிறகு இடைப்பட்ட காலங்களில் ஏற்பட்ட புரிதலோ அல்லது அதிகார வர்க்கத்தின் திணிப்போ ஜனவரி 1 புத்தாண்டாக கொண்டாடத் துவங்கி ஏப்ரல் 1 முட்டாள் தினமாக அனுசரிக்கப்பட்டது. அதாவது பழைய முறையை அனுசரித்து ஏப்ரல் முதல் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடியவர்களை முட்டாள்கள் என்று அழைத்தார்கள் இது ஒரு வரலாறு

1466ம் ஆண்டு மன்னன் பிலிப் என்பவரை அவரது அரசசபையில் விகடகவியாக பணிபுரிந்தவர் பந்தயம் ஒன்றில் மன்னனையே தோற்கடித்ததால் அன்றிலிருந்து ஏப்ரல் முதல் தினம் கொண்டாடப்படுகிறது என்பதும் ஒரு வரலாறு.

ஏமாற்றம் மட்டுமின்றி ஏனைய சிறப்புகளும் இந்நாளில் உண்டு. உலக மரநாள் 1805 ஏப்ரலில் வில்லனியேவா என்ற சிற்றூரில் பாதரியார் ஒருவரால் கொண்டாடப்பட்டது. நெப்போலியன் தனது பேராசையால் ஐரோப்பாவை முற்றுகையிட்டுக்கொண்டிருந்த வேளையில் சிராதெகாதா என்னும் ஊரில் வாழூந்த டான் இராமோன் உலக நல்வாழ்விற்கும், தூய்மைக்கும் இயற்கைவளத்திற்கும் மரங்கள் பங்கு இன்றியமையாதவை என்பதை உணர்ந்து மக்களை ஒன்றுசேர்த்து ஒரு திருவிழாவைப் போல கொண்டாடி முதல் மரத்தை எழிடோ கணவாயில் நட்டுள்ளனர். தான்சானியாவில் ஏப்ரல் முதல் இப்போதும் தேசிய மர நடுநாளாக கொண்டாடப்படுகிறது.

டைட்டானிக் கப்பலைப் போல 1873- அட்லாண்டிக்கில் நீராவிக் கப்பல் கனடாவில் நோவா ஸ்கோசியாவில் மூழ்கியது இதிலும் 547 பேர் உயிரிழந்தனர்.

உலகையே ஆட்டிப்படைத்த சர்வாதிகாரி 1924- ஹிட்லர் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார் ஆனாலும் தன் அறிவாற்றலோ அதிஷ்டமோ அவர் 9 மாதங்களில் விடுதலை பெற்றார்

இன்று வங்கிகளின் தேவை அதிகரித்து விட்டது. கல்யாணமா பேசாம பேங்க் மாப்பிள்ளையா பாருங்க அப்படித்தான் லீவு அதிகமாக கிடைக்கும் என்று கல்யாண சந்தையில் கூட அவர்களுக்கு ஏக கிராக்கி, நம்ம பணத்தை இன்னொருத்தன் கிட்டே கொடுத்துட்டு தேவைக்கு அதை எடுக்க ஏன் லைன்ல நிக்கணும் என்று வாதிடும் மக்கள் ஒருபுறம், ஆனால் இன்று மனிதர்களின் வாழ்வின் ஆதாரமே வங்கிகளின் தேவை என்றாகிப்போனது, வங்கிக் கணக்கு இல்லாதவர்களும் இல்லை, கையில் ஏடிஎம் கார்டு இல்லாத பர்ஸே இல்லை எனலாம் அத்தனை ஆதிக்கம் வங்கிகளுக்கு எல்லாம் முன்னோடியாக இருக்கும் இந்திய ரிசர்வ் வங்கி 1935 ல் ஆரம்பிக்கப்பட்டது இதே நாளில்தான் தொடங்கியது.

என்னதான் ஏடிஎம் கார்டுகள் இருந்தாலும் கையில் ஒரு அணா இரண்டனா வைத்துக்கொண்டு அந்த சில்லரைகளை கொண்டு நமது மரத்தடி பெட்டிகடையில் மிட்டாயைத் தேடியது எல்லாம் இழந்த சொர்கம் அல்லவா அப்படிபட்ட 1 நயா பைசா நாணயம் இந்தியாவில் 1957 ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

காடுகளை அழித்து நாட்டை உருவாக்கும் நவீனம் எல்லாம் இன்று தலைவிரித்தாடுகிறது. இது காலம் காலமாய் தொடர்வதுதான். இந்நாளில் தான் அழிந்து வரும் புலிகள் பாதுகாப்புத்திடடம் இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது. 1971ல் தொடங்கப்பட்டது.

காஷ்மீரை காரணமாக்கி அத்துமீறி நம்மைத் தாக்கிய பாகிஸ்தான் ராணுவத்தை நமது இந்திய ராணுவம் பதிலடி கொடுத்த கம்பீரத்தோடு அந்நியரின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது கூட அடுத்த விநாடி கூட உயிர் நிரந்தரம் இல்லை என்று நிலையிலும் எந்த ரகசியத்தையும் வெளியிடாத அபிநந்தனைப் போன்ற வீரர்களை சுமந்துகொண்டிருக்கிறது இந்தியா. 1971ம் வங்காளதேச விடுதலைப்போர் இந்தப் போரில் கொடூரமான பாகிஸ்தானிய இராணுவம் 1000 பொதுமக்களை படுகொலை செய்தது.

மனிதரின் ஆறாம் விரலாய் இன்று நல்லதையும் கெட்டதையும் ஒரே கைகளுக்குள் அடக்கிக்கொண்டு இருக்கும் செல்போன் இதில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஆப்பிள் நிறுவனம் எப்ரல் முதல்நாளில் 1976 - ஆப்பிள் நிறுவனம் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது

ஆண் பெண் இவர்களைத் தொடர்ந்து மூன்றாம் பாலினம் என சமூகம் அவர்களையும் ஒரு அங்கமாக அனுசரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதேபோல் லெஸ்பியன் எனப்படும் முறையையும் கூட சில நாடுகள் ஏற்றுக்கொண்டு விட்டது. அப்படி ஏப்ரல் முதலாம் நாள் 2001 ல்- நெதர்லாந்து ஒருபால் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கிய முதலாவது நாடானது.

புறாவிடு தூது, கடிதப்போக்குவரத்து, அதன்பிறகு தந்தி, டெலிபோன் இப்போது மொபைல் அதற்கு இடைப்பட்ட காலத்தில் இணையதளத்திற்கென்று ஒரு முகவரியைக் கொடுத்து அதில் தங்கள் தேவைகளைப் பரிமாறிக்கொள்ளும் ஜிமெல் என்ற வசதி இன்று அதை பயன்படுத்தாத வணிக நிறுவனங்களே இல்லை எனலாம் ஏப்ரல் 1ந்தேதியில் 2004-கூகுள் ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தியது.

(தொடர்ந்து வரும்)

English summary
Today is April 1, the world celebrates the day as Fools day. We can see what other events have held in this day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X