For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று காதலர் தினம்: உண்மை காதலை வாழ வைப்போமே

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று மெரினா கடற்கரையில் காதல் ஜோடிகளுக்கு பஞ்சமிருக்காது.

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. காதலர் தினம் என்றாலே ரோஜா விற்பனை சூடுபிடித்துவிடும். அதிலும் சிவப்பு நிற ரோஜாக்களுக்கு ஏக கிராக்கியாக இருக்கும்.

காதலர் தினத்தையொட்டி இந்த ஆண்டு ரோஜா பூக்களின் வரத்து அதிகரித்துள்து.

ரோஜா

ரோஜா

காதலர் தினத்தையொட்டி தமிழகத்தில் ரோஜா பூக்களின் விலை 2 மடங்கு அதிகரித்துவிட்டது. இத்தனை நாட்களாக ரூ.5க்கு விற்கப்பட்ட ஒரு ரோஜா தற்போது ரூ.15க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பணக்கார காதல்

பணக்கார காதல்

தமிழகத்தில் பணக்காரர்கள் காதலர் தினத்தை நட்சத்திர ஹோட்டல்களில் பிரமாண்டமாக கொண்டாடுவார்கள். தங்கள் காதலர் அல்லது காதலிக்கு விலை உயர்ந்த பரிசுகளை அளிப்பார்கள்.

ஏழைக் காதல்

ஏழைக் காதல்

நடுத்தர மற்றும் ஏழை காதல் ஜோடிகள் பூங்காக்கள் மற்றும் கடற்கரைகளில் கொண்டாடுவார்கள். காதலர் தினத்தன்று மெரினா கடற்கரையில் பார்க்கும் இடம் எல்லாம் ஜோடியாக ஜோடியாக காதலர்கள் அமர்ந்திருப்பார்கள்.

காமம்

காமம்

மெரினா கடற்கரையில் காதலர்கள் என்று சொல்லிக் கொண்டு அறுவறுக்கத்தக்க செயல்களில் ஈடுபடும் ஜோடிகளை காண முடிகிறது. காதல் என்ற பெயரில் காமத்தை குழப்ப வேண்டாமே.

எதிர்ப்பு

எதிர்ப்பு

காதலர் தினம் கொண்டாடுகிறேன் என்ற பெயரில் இளம் ஜோடிகள் அடிக்கும் கூத்தை தடுக்க ஒரு சில அமைப்புகள் கிளம்பியுள்ளன. காதலர் தினத்திற்கு கிளம்பியுள்ள எதிர்ப்பை அடுத்து காதலர்கள் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறார்கள்.

கொண்டாடுங்கள்

கொண்டாடுங்கள்

காதலை கொண்டாடுங்கள் யாரும் வேண்டாம் என்று கூறவில்லை. காதலையும், கண்டதையும் குழப்பி புனிதமான காதலை கொச்சைப்படுத்த வேண்டாம்.

English summary
When the world is celebrating valentine's day on friday, let's wish the true lovers all the very best.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X