அதிகார விளக்கம்: மழை உலக உயிர்களின் வாழ்வுக்கும் உணவு உற்பத்திக்கும் அடிப்படையாக விளங்குகிறது. விவசாயம், குடிநீர், பொருளாதாரம் மற்றும் இயற்கைச் சுழற்சி அனைத்தும் மழையைச் சார்ந்துள்ளதால், உலக வாழ்வில் மழையின் இன்றியமையாத சிறப்பை இவ்வதிகாரம் எடுத்துரைக்கிறது.
| எண் | குறள் |
|---|---|
| 11 |
வானின் றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று பொருள்: உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்
|
| 12 |
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை பொருள்: நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே
|
| 13 |
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின் றுடற்றும் பசி பொருள்: உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்
|
| 14 |
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால் பொருள்: மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்
|
| 15 |
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை பொருள்: பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்
|
| 16 |
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண் பரிது பொருள்: மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்
|
| 17 |
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் பொருள்: பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்
|
| 18 |
சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு பொருள்: மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது
|
| 19 |
தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம் வானம் வழங்கா தெனின் பொருள்: மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.
|
| 20 |
நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு பொருள்: எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது
|