அதிகார விளக்கம்: உலகப் பற்றுகள், ஆசைகள் மற்றும் சுயநல விருப்பங்களை நீக்கி மன அமைதியுடன் வாழ்வதே துறவின் நோக்கமாகும். பற்றுகளை குறைப்பதன் மூலம் மனத் தெளிவு, அமைதி மற்றும் உயர்ந்த ஆன்மிக உணர்வு உருவாகின்றன.
| எண் | குறள் |
|---|---|
| 341 |
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் அலன் பொருள்: எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான்.
|
| 342 |
வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டியற் பால பல பொருள்: பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க.
|
| 343 |
அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு பொருள்: ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம்.
|
| 344 |
இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து பொருள்: உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும்.
|
| 345 |
மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க் குடம்பும் மிகை பொருள்: இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பையே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்கு?
|
| 346 |
யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும் பொருள்: உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள் இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.
|
| 347 |
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு பொருள்: ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா.
|
| 348 |
தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர் பொருள்: ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே.
|
| 349 |
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும் பொருள்: ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்.
|
| 350 |
பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு பொருள்: ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம் ஆசைகளை விடுவதற்கே.
|