அதிகார விளக்கம்: வெளியில் நல்லவர் போல நடித்து உள்ளத்தில் தீய எண்ணங்களைக் கொண்டிருப்பது போலியான ஒழுக்கமாகும். எண்ணம், சொல், செயல் ஆகிய மூன்றிலும் தூய்மை இருக்க வேண்டும்; வெளிப்புற வேடம் உண்மையான நற்பண்புக்கு மாற்றாகாது.
| எண் | குறள் |
|---|---|
| 271 |
வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் பொருள்: வஞ்ச மனத்தவனின் திருட்டு நடத்தையைக் கண்டு அவன் உடம்போடு கலந்து இருக்கும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்களும் தமக்குள் சிரிக்கும்.
|
| 272 |
வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்நெஞ்சத் தானறி குற்றப் படின் பொருள்: தன் மீது தன் நெஞ்சமே குற்றம் சொல்லுமானால் மேலான நிலையினால் வரும் பலன்தான் என்ன?
|
| 273 |
வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று பொருள்: கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.
|
| 274 |
தவமறைந் தல்லவை செய்தல் புதல்மறைந்து வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று பொருள்: மேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர் புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம்.
|
| 275 |
பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென் றேதம் பலவுந் தரும் பொருள்: எத்தகைய பற்றுகளும் இல்லாதவர் என்று வாயால் சொல்லிச் செயலால் தவறாக வாழ்பவரின் வாழ்க்கை, பிறகு ஏன் அப்படிச் செய்தோம் ஏன் அப்படிச் செய்தோம் என்று வருந்தும்படி பல துன்பங்களையும் தரும்.
|
| 276 |
நெஞ்சின் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணா ரில் பொருள்: மனத்துள் எதையும் வெறுக்காமல், வெளியே வெறுத்தவர் போல் ஏமாற்றி வாழும் மனிதரைக் காட்டிலும் கொடியவர், இவ்வுலகத்தில் இல்லை.
|
| 277 |
புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி மூக்கிற் கரியா ருடைத்து பொருள்: குன்றிமணியின் மேனியைப் போல் வெளித் தோற்றத்தில் நல்லவராயும், குன்றிமணியின் மூக்கு கறுத்து இருப்பதுபோல் மனத்தால் கரியவராகவும் வாழ்வோர் இவ்வுலகில் இருக்கவே செய்கின்றனர்.
|
| 278 |
மனத்தது மாசாக மாண்டார்நீ ராடி மறைந்தொழுகு மாந்தர் பலர் பொருள்: மனம் முழுக்க இருட்டு; வெளியே தூய நீரில் குளித்து வருபவர்போல் போலி வெளிச்சம் – இப்படி வாழும் மனிதர் பலர் இருக்கின்றனர்.
|
| 279 |
கணைகொடியது யாழ்கோடு செவ்விதாங் கனை வினைபடு பாலாற் கொளல் பொருள்: வடிவால் நேரானது என்றாலும் செயலால் அம்பு கொடியது. கழுத்தால் வளைந்தது ஆயினும் செயலால் யாழ் இனிது. அதனால் தோற்றத்தால் அன்றிச் செயலால் மனிதரை எடை போடுக.
|
| 280 |
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்த தொழித்து விடின் பொருள்: உயர்ந்தோர் வெறுத்தவற்றை மனத்தால் ஒதுக்கிவிட்ட பின் தலைமுடியைச் சிரைத்தல், நீள வளர்த்தல் என்பன பற்றி எண்ண வேண்டா.
|