அதிகார விளக்கம்: தீய செயல்கள் பிறருக்கு மட்டுமல்லாமல் செய்தவருக்கும் தீமையை ஏற்படுத்தும். அதனால் உடனடி நன்மைக்காக தவறான வழியைத் தேர்ந்தெடுக்காமல், எதிர்கால விளைவுகளை எண்ணி தீவினைகளைச் செய்ய அஞ்ச வேண்டும்.
பொருள்: தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.
பொருள்: நமக்கு நன்மை என்று பிறருக்குச் செய்யும் தீமைகள், நமக்குத் தீமையே தருவதால், தீமைகளைத் தீயினும் கொடியனவாக எண்ணிச் செய்ய அஞ்ச வேண்டும்.
பொருள்: தனக்குத் தீமை ச�?ய்பவர்க்கும் தீமை ச�?ய்யாது இருப்பதே, அறிவில் ஏல்லாம் முதன்மை அறிவு �?ன்று கூறுவர்.
பொருள்: மறந்தும் பிறர்க்குத் தீமை செய்ய எண்ணாதே; எண்ணினால் எண்ணியவனுக்கு அறக்கடவுளே தீமையைத் தர எண்ணும்.
பொருள்: தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.
பொருள்: துன்பம் தருவன தன்னைச் சூழ்ந்து வருத்த விரும்பாதவன், பிறர்க்குத் தீமை செய்யக்கூடாது.
பொருள்: எவ்வளவு பெரிய பகையைப் பெற்றவரும் தப்பித்துக் கொள்வர்; ஆனால் தீமை செய்வதால் வரும் பகையோ, அழியாமல் நம் பின் வந்து, நம்மை அழிக்கும்.
பொருள்: பிறர்க்குத் தீமை செய்தவர் அழிவது, அவரை அவரது நிழல் விடாது கால்களின் கீழே தங்கியிருப்பது போலாம்.
பொருள்: தன்மீது அன்புள்ளவன், எவ்வளவு சிறிது என்றாலும் சரி, மற்றவர்க்குத் தீமை செயய வேண்டா.
பொருள்: தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக.