Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!
முகப்பு | திருக்குறள் | தீவினையச்சம் | தீவினையார் அஞ்சார் விழுமியார் திருக்குறள்

தீவினையார் அஞ்சார் விழுமியார் திருக்குறள்

குறள் பால்
குறள் இயல்
அதிகாரம்
குறள் விளக்கம்
201 தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செறுக்கு

தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
— மு. வரதராசன்

தீயவர்கள் தீவினை செய்ய அஞ்சமாட்டார்கள்; தீவினையால் மகிழ்ச்சி ஏற்படுவதாயினும் அதனைச் செய்திடச் சான்றோர் அஞ்சி நடுங்குவார்கள்
— கலைஞர்

தீமை என்னும் மயக்கத்தைச் செய்ய, முன்னைத் தீவினை உடையவர் பயப்படமாட்டார்; பெரியவர்களோ பயப்படுவர்.
— சாலமன் பாப்பையா

தீய செயலைச் செய்தலாகிய இறுமாப்பைத் தீவினையாளர்கள் அஞ்சமாட்டார்கள்; ஆனால், மேலோர்கள் தீயவைகளைச் செய்வதற்கு அஞ்சுவார்கள்
— புலியூர்க் கேசிகன்

கேடுசெய்பவர் அஞ்சுவது இல்லை வாழ்வை நேசிப்பவர் அஞ்சுவார்கள் தீய வினை என்ற அகங்காரத்திற்கு.
— சிவயோகி சிவகுமார்

என்றுந் தீத்தொழில் செய்வா ரஞ்சார்: சீரியரஞ்சுவர், தீவினையாகிய களிப்பை. இஃது இதற்கு நல்லோ ரஞ்சுவ ரென்றது.
— மணக்குடவர்

தீவினை என்னும் செருக்கு - தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை, தீவினையார் அஞ்சார் - முன் செய்த தீவினையுடையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர் - அஃது இலராகிய சீரியார் அஞ்சுவர். ('தீவினை என்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல் தொட்டுச் செய்து கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்து அறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார்.).
— பரிமேலழகர்

English Couplet:

With sinful act men cease to feel the dread of ill within,
The excellent will dread the wanton pride of cherished sin.

Couplet Explanation:

Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin.

Transliteration (Tamil to English):

theevinaiyaar anjaar vizhumiyaar anjuvar
theevinai ennum serukku

மொத்தம் 133 அதிகாரங்கள்
201 of 1330

மேலும் தீவினையச்சம் குறள்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+