அதிகார விளக்கம்: பிறருடைய செல்வம், வெற்றி, புகழ் மற்றும் நன்மைகளைப் பார்த்து பொறாமைப்படாமல் இருப்பது மனநிம்மதிக்கு அவசியம். பொறாமை உள்ளத்தை அழிக்கும்; பிறர் முன்னேற்றத்தை ஏற்றுக்கொண்டு தன் முயற்சியில் கவனம் செலுத்துவது சிறந்தது.
| எண் | குறள் |
|---|---|
| 161 |
ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத் தழுக்கா றிலாத இயல்பு பொருள்: உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க.
|
| 162 |
விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும் அழுக்காற்றின் அன்மை பெறின் பொருள்: எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.
|
| 163 |
அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணா தழுக்கறுப் பான் பொருள்: பிறர் உயர்வு கண்டு மகிழாமல் பொறாமைப்படுபவன், அறத்தால் வரும் புண்ணியத்தை வேண்டா என மறுப்பவன் ஆவான்
|
| 164 |
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின் ஏதம் படுபாக் கறிந்து பொருள்: பொறாமை கொண்டால் துன்பம் வரும் என்பதை அறிந்து அறிவுடையோர் பொறாமை காரணமாகத் தீமைகளைச் செய்யமாட்டார்
|
| 165 |
அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார் வழுக்கியுங் கேடீன் பது பொருள்: பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்
|
| 166 |
கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉ மின்றிக் கெடும் பொருள்: பிறர்க்குக் கொடுப்பதைக் கண்டு பொறாமைப் படுகிறவனின் குடும்பம், உடுக்கவும், உண்ணவும் இல்லாமல் அலையும்.
|
| 167 |
அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும் பொருள்: பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.
|
| 168 |
அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத் தீயுழி உய்த்து விடும் பொருள்: பொறாமை எனப்படும் ஒப்பில்லாத பாவி எவனிடம் இருக்கிறதோ, அவனது செல்வத்தை அழிப்பதோடு, அவனை நரகத்திலும் அது சேர்க்கும்
|
| 169 |
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் கேடும் நினைக்கப் படும் பொருள்: பொறாமை கொண்ட மனத்தவனின் உயர்வும், அது இல்லாத நல்லவனின் தாழ்வும் பற்றி ஆராய்க
|
| 170 |
அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார் பெருக்கத்தில் தீர்ந்தாரு மில் பொருள்: பொறாமை கொண்டு உயர்ந்தவரும் இல்லை. அது இல்லாதபோது தாழ்ந்தவரும் இல்லை
|