அதிகார விளக்கம்: செல்வம், இளமை, உடல், உறவுகள் மற்றும் வாழ்க்கை அனைத்தும் நிலையற்றவை என்பதை உணர வேண்டும். நிலையற்றவற்றில் அளவுக்கு மீறிய பற்றின்றி, கிடைக்கும் காலத்தை அறத்துடனும் பயனுள்ள செயல்களுடனும் கழிக்க வேண்டும்.
| எண் | குறள் |
|---|---|
| 331 |
நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வாண்மை கடை பொருள்: நிலை இல்லாத பொருள்களை நிலையானவை என்று எண்ணும் அற்ப அழிவு இழிவானது.
|
| 332 |
கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அருவிளிந் தற்று பொருள்: நாடக அரங்கிற்கு கூட்டம் வருவது போல் சிறுகச் சிறுக செல்வம் சேரும். நாடகம் முடிந்ததும கூட்டம் கலைவது போல் மொத்தமாய்ப் போய்விடும்.
|
| 333 |
அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல் பொருள்: நிலையாத இயல்பினை உடையது செல்வம்; அது கிடைத்தால் நிலையான அறங்களைச் செய்க.
|
| 334 |
நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும் வாள துணர்வார்ப் பெறின் பொருள்: நாள் என நமக்குத் தோன்றும் காலம், நம் உயிரைப் பிளந்து செல்லும் வாளே; அறிஞர்க்குத்தான் இது விளங்கும்.
|
| 335 |
நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை மேற்சென்று செய்யாப் படும் பொருள்: நாவை அடைத்து விக்கல் வருவதற்கு முன், நல்ல செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.
|
| 336 |
நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை யுடைத்திவ் வுலகு பொருள்: நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.
|
| 337 |
ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப கோடியு மல்ல பல பொருள்: உயிரும் உடம்பும் இணைந்திருந்தும் உடம்பின் நிலையற்ற தன்மையை ஒரு கணப்பொழுதும் அறிய இயலாதவர் கோடிக்கும் மேலான நினைவுகளை எண்ணி நிற்பர்.
|
| 338 |
குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே உடம்போ டுயிரிடை நட்பு பொருள்: உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.
|
| 339 |
உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு பொருள்: உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு.
|
| 340 |
புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள் துச்சி லிருந்த உயிர்க்கு பொருள்: உடம்பிற்குள் ஒதுங்கி இருந்த உயிருக்கு நிலையான இருப்பிடம் இன்னும் அமையவில்லை போலும்!
|