• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நினைவுகள்

By Staff
|

பட்டணத்தில் பேருந்து ஏறும்போதே பற்றிக்கொண்டது

பஞ்சவர்ணத்தின் நினைவுகள்

பல்லாங்குழி ஆடும்போதே பார்த்து பார்த்து - இருவரும்

அங்கம் பருகிக் கொண்டது

ஆடி அம்மன் திருவிழாவில் எதிர்

வரிசையில் இருவரும் இதயங்களை

இணையவிட்டு இடம் தெரியாமல் நின்றது....!

பட்டாம்பூச்சி பிடிக்கையிலே - உன்

பட்டுப்பாவாடையில் தைத்த முள்ளுக்கு

என் நெஞ்சில் அல்லவோ குருதி

பிஞ்சு வயசிலே பாசம் வெச்சோம் -- அதில்

நஞ்சு கலக்குமின்னு நெனைக்கலடி

ஏனோ அன்று நீ வரவில்லை -- காரணம்

நீ வயசுப்பிள்ளையானது.

இருவர் மனத்தில் ஆசையை வளர்த்தது ஆண்டவன் தப்பு

இருப்பினும் இணைவோம் என்ற நம்பிக்கையில்

பட்டணம் வந்தேன் படிக்க -- காலம் சென்றது

உன் பத்திரிக்கை பெற கண்டேன் படபடப்புடன் -- அதில்

பாவி நீ என்னை ஏமாற்றிவிட்டிருந்தாய்

இஷ்டபட்டவனையே நீ கைவிட்டு

கஷ்டப்பட வைத்தாயடி

நிறுத்தத்தில் நித்திரை களைந்தேன்

பேருந்துவிட்டிறங்கி பெருநடை நடந்தேன்

பசி பாடாய் படுத்த பக்கத்து ஓடையை

பதம் பார்த்தேன் -- பத்திரிக்கை

கிழித்து பத்தாண்டு கழித்து வருவதால்

மனம் சிறிது படபடத்தது -- பஞ்சவர்ணமே

பரண் மேல் தூக்கி போட்டது போல் உன் நினைவுகள்.

பிரித்தாலும் முடியவில்லை

பச்சோந்தி போல் உன் நினைவுகள்

முனியான்டி விலாஸில் முகமறந்த - உன்

முகவரி தேடினேன். மும்முரமாய் நடந்தேன்

மூலையில் முட்டுச்சுவர் முனீஸ்வரன் கோயில் தெரு

மாடுகன்னு கட்டியிருக்கும் ஆடுகளும் அங்கிருக்கும்

அதுதான் அவள் வீடு அறிஞ்சுக்கோ ஏ ராசா

அதை சொன்ன கிழவிக்கு ஐஞ்சி ரூபா செலவு.......!

கதவை திறந்தேன் கதிகலங்கி போனேன்

கையில் இரண்டு பிள்ளை -- அவள்

அணிந்திருந்த சேலை வெள்ளை

என்னவளை கண்டதும் இடிதாக்கியது

அப்படியே இங்கிருந்தே அவளை

அள்ளிக் கொண்டது என் மனம் -- அய்யகோ

எங்கனம் சொல்லி இவள் துயர் துடைப்பேன்......!

காலன் கணவனை எடுத்து இரண்டாண்டு

ஆனதை அறிந்தேன் சுவரின் படத்தில்!

அவளின் புடவைக்குபின் பாதி முகம்

தெரிந்தான் பத்துவயது மகன் -- இரண்டுவயசுக்கு இருப்பளித்து நின்றிருந்தாள்

சவுக்கியம் கேட்க சஞ்சலமானது அவள் மனம்

அவளின் உதடுகள் உதறலானது.......!

மெளனமாய் இலையில் இட்லி வைத்தாள்

இப்படி ஒரு நிலையில் இளைப்பாறுவதை

என்மனம் இசைக்கவில்லை -- இருப்பினும்

அவளது கைமணம் என்னை கைகழுவ வைத்தது

உண்டுமுடித்தேன் ஊருக்கு புறப்பட்டேன்

கண்ணீருடன் கையசைக்க வாசலில் நின்றாள்

மூத்தவனை முழுதாய் பார்த்தேன்

முகமுழுவதும் என் ஜாடை - பஞ்சவர்ணத்தை

கேள்வியோடு பார்த்தேன் -- அவள் விழியால்

சொன்ன பதில் என்னை வியக்க வைத்தது

புஜத்தை தூக்கி புன்னகையுடன் புறப்பட்டேன் பட்டணம்.....!

- பாக்கியராஜ்(gbakkiyaraj@yahoo.co.in)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X