பெண்மையெனும் மாயை....!
ஆதியிலேயே தொலைத்திருக்க வேண்டும்
இந்த பெண்மையெனும் மாயையை....
எதிரிகள் யாரென்றறியா கணமொன்றில்
நான் புகுந்தகம் போக நேரிட்டது
நலங்கிட்டகால் நடுங்க-ஆசையும்
எதிர்பார்ப்புமாய் நுழைந்தேன்
மலர்ந்த முகமாய் மாமியார்
முகமே மதச்சின்னமாய் மாறிய மாமனார்
கேலியும் குறுநகை பார்வையுமாய்
மைத்துனர்கள்
தோழமையாய் மைத்துனி
வயிராற உணவு களைப்பார நித்திரை
சந்தோஷ இரவுகள்
கழிந்தது ஆட்டத்தின் முதல்சுற்று
கட்டிலிலேயே காப்பி வேண்டும் கணவன்
பள்ளிபோக தயாராக வேண்டிய குழந்தை
பூஜை பாத்திரம் கேட்கும் மாமனார்.
கல்லூரி போக தலைபின்னிவிடச் சொல்லும்
மைத்துனி
இடையிடையே அடுக்களையுள்ளிருந்து
அழைக்கும் மாமியார்
பட்ஜெட்டுக்குள் குடும்பம்
மாதமொரு சினிமா
ஹோட்டல் உணவு
சொந்தமாய் வீடு
கொஞ்சம் கடன் நிறைய அன்புமாய்
கழிந்தது ஆட்டத்தின் இரண்டாம் சுற்று
எப்போதும் ஊடல்
எப்போதேனும் கூடல்
அதேபோல் வைக்கும் குழம்பில்
அரையுப்பு அதிகமென
குறைகூறும் கணவன்
மாமியார் மாமனார் மருத்துவச் செலவுக்கென
ஒதுக்கப்பட்ட என் மாத சம்பளங்கள்
இப்படி ஆதியிலிருந்தே தொடரும்
பெண் நாகரிகம்
கொஞ்சமும் மாறாமல்
மகளாய், தங்கையாய், தாயாய்
மருமகளாய், மாமியாராய், மனைவியாய்.....
தொடருமிச் சங்கிலியில்
நான்காம் சுற்றில் நான்
முதல் சுற்றில் என் மருமகள்...
ஆதிக்கம் செய்யவே
பிறப்பெடுக்கும்
ஆண்கள்
அடிமையாகவே வாழப்பழகிய
பெண்கள்
கொஞ்சம் தைரியமும்
நெஞ்சில் வீர்யமுமிருந்தால்
சொல்லுங்கள் உரக்க
"மாதர்தம்மை இழிவு செய்யும்
மடமைதனையும் முடிந்தால்
அம்மடையர்களையும் கொளுத்துவோம்"
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications