மரணப் பேச்சுகள்
வருக வருக..
என் மடியில் வீழும்
உயிர்ப்பறவையே!
மரண கந்தத்தை
அழுகும் பற்களினிடையே
அனுப்பிவைத்து
உன் சுவாசங்களில்
நிரப்பியது
நான்தான்
மரணசாசனத்தை நகங்களால்
உடல்களில் நான் எழுதும்போது
நாளைய காகிதங்கள் ஏன்
அலறுகின்றனவென அறிவதில்லை நான்.
விளையாட்டு வீரனே!
என் தோட்டத்தினூடே தெரியும்
தடகள அரங்கத்தில்
உற்றுப்பார்த்துக்கொண்டுதானிருக்கிறேன்.
கைகால்கள் குறுக்கிய உனது ஓட்டங்களின்
ஆயத்தங்களில் தொடங்கி,
நிணநீரில் நீந்தி, கயிற்றை தொப்புளில்
இறுக்கியபடி நீ வெளிவந்த நாள் முதல்...
உன் ஓட்டங்களை
கவனித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
பிறரின் முந்துதல்களில் படபடத்து,
வெறியேறி, எவரெவரோ அறிவுறுத்த,
ஏதேதோ வட்டப்பாதைகளில் வளைந்து வளைந்தோடி,
தோல்வியும், வெற்றியும் இல்லாது
பாசக்கயிறு அறுத்து வீழ்ந்ததும்
ஓடுபவரும், பார்ப்பவரும் அழுது ஆர்ப்பரிக்க,
இவ்விபரீத பந்தயத்தை காலத்தின் முதல் நொடிதொட்டு
நடத்திக்கொண்டுதானிருக்கிறேன்.
உன் வியர்வையை சிதையிலேயே உலர்த்திவிட்டு
இழைக்கும் சுவாசங்களை அந்நாசியிலேயே அடைத்துவிட்டு
வாசனைகளை தெற்குத்திக்கில் அனுப்பிவிட்டு,
என் மடியில் புகல்வாய்.
மீண்டும் ஓடச் செல்லலாம் நீ
சுவாசப்படுத்திக்கொண்டானபின்..
அலுக்கவில்லை எனக்கு இன்றும்.
எப்படி ஓடுவதில்
உனக்கு அலுக்கவில்லையோ
அதேபோலவே.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications