கலையாத கனவுகள்.. கலாம் அய்யா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தூக்கத்தின் உறவு முறையாய் தம்பட்டம்
அடித்த கனவுக்கு பாதைக் காட்டிய பண்டிதன்

படிப்பு வாசம் வீசாத காலத்தில்
படித் தாண்டி புத்தகத்தில் புரண்டாய்

பட்டத்திற்கு குறி வைத்து
உரி அடித்து உயரம் தொட்டாய்

Reader's poem on Kalam

பணிவில் பனியாய் பாசத்தில் நிலவாய்
உயரம் தொட்டும் அன்பின் இலக்கணமானாய்

சாலையோரக் கடையில் உணவு உண்டாய்
மனிதனாய் மனிதம் உணர்த்தி சென்றாய்

வண்ண நிறத்திலே சமூக நாடிப் பிடித்தாய்
வாடிய இடமெல்லாம் நம்பிக்கை நீர் ஊற்றினாய்

வரவு இருந்த இடத்தில் கூட வரம்பு மீறாது இருந்தாய்
தகரப் பெட்டியோடு தரணி ஆண்டாய்

விண்கலம் செலுத்தி சவால் விட்டாய்
விடியாத பக்கம் எல்லாம் விடியக் கனவு கண்டாய்

பள்ளி பள்ளியாய் சென்றாய் - கனவை
பிஞ்சு இதயத்தில் விதைத்தாய்

தமிழ் தமிழ் என சுற்றி திரிந்தாய்
தமிழனைத் தரணியும் தாங்க செய்தாய்

இறுதி மூச்சிலும் இளைஞனையே குறி வைத்தாய்
நீ இல்லாத உலகத்திலும் விண்ணைத் தாண்டிய
கனவை விதைத்தாய் - வீழாது உன் கனவு நனவாகுகையில்
பிறந்திடு இன்னொரு பிறப்பு

- சிவமணி, வத்தலக்குண்டு

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Oneindia Tamil Reader Sivamani's poem on late President Abdul Kalam's 2nd year death annivesary.
Please Wait while comments are loading...