ஆட்டத்தை காட்டிய கிளாட் ஏஐ.. ஒன்பதே வினாடிகளில் அழிந்த ஒட்டுமொத்த தரவுத்தளம்.. ஷாக்கான அமெரிக்கா
சென்னை: தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவத்தில், தன்னிச்சையாகச் செயல்படும் செயற்கை நுண்ணறிவு (AI) மென்பொருள் ஒன்று, ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த தரவுகளையும் வெறும் 9 வினாடிகளில் அழித்துவிட்டது.
அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ள கார் வாடகை நிறுவனங்களுக்கு மென்பொருள் சேவை வழங்கும் 'பாக்கெட் ஓஎஸ்' (PocketOS) என்ற நிறுவனத்திற்குத்தான் இந்த கதி ஏற்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் தரவுத்தளம் (Production Database) மற்றும் அதன் பாதுகாப்பு நகல்கள் (Backups) என அனைத்தும் அந்த ஒன்பது வினாடிகளில் காணாமல் போயின.

நடந்தது என்ன?
இந்த விபத்திற்கு 'கிளாட் ஓபஸ் 4.6' (Claude Opus 4.6) என்ற சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் 'கர்சர் ஏஐ' (Cursor AI) என்ற கோடிங் ஏஜென்ட் காரணமாக அமைந்தது.
பொதுவாக மென்பொருள்களை நேரடியாகப் பயன்பாட்டிற்கு விடுவதற்கு முன்பு, 'ஸ்டேஜிங்' (Staging) எனப்படும் ஒரு தனிப் பகுதியில் சோதித்துப் பார்ப்பார்கள். அங்கு ஏதேனும் தவறு நடந்தால் அது நேரடிப் பயன்பாட்டைப் பாதிக்காது. அந்த ஏஜென்ட்டிற்கு ஒரு சாதாரணப் பணியை வழங்கியபோது, அதற்குத் தேவையான சில கடவுச்சொற்கள் (Credentials) சரியாகப் பொருந்தவில்லை.
சாதாரண சூழலில், ஒரு மென்பொருள் மனிதனின் அனுமதியைக் கேட்க வேண்டும். ஆனால், இந்த ஏஐ ஏஜென்ட் தன்னிச்சையாகச் செயல்பட்டு, மென்பொருள் குறியீடுகளில் (Codebase) தேடி ஒரு ரகசியத் திறவுகோலைக் (API Token -ஏபிஐ டோக்கன்: ஒரு மென்பொருள் மற்றொரு மென்பொருளுடன் பாதுகாப்பாகத் தொடர்புகொள்ளப் பயன்படுத்தப்படும் ஒரு ரகசிய டிஜிட்டல் சாவி அல்லது கடவுச்சொல் ) கண்டுபிடித்தது. அதைப் பயன்படுத்தி ஒரு கட்டளையை (Command) பிறப்பித்தது. துரதிர்ஷ்டவசமாக, அந்த ஒரு கட்டளை 'ஸ்டேஜிங்' பகுதியை மட்டும் அழிக்காமல், நிறுவனத்தின் நேரடித் தரவுத்தளத்தையும் சேர்த்து அழித்துவிட்டது.
ஏன் இந்த அழிவு?
இந்த விபத்திற்கு இரண்டு முக்கிய காரணங்கள் கூறப்படுகின்றன:
ஏஐ-யின் அதீத வேகம்: தனக்குத் தெரியாத விஷயத்தில் மனித உதவியை நாடாமல், ஏஐ தானாகவே ஒரு முடிவை எடுத்தது சிக்கலாக மாறியது.
கட்டமைப்பு குறைபாடு: அந்த நிறுவனம் தரவுகளைச் சேமிக்கப் பயன்படுத்திய 'ரயில்வே' (Railway) என்ற தளம், முதன்மைத் தரவுகளையும் அதன் பாதுகாப்பு நகல்களையும் ஒரே இடத்திலேயே வைத்திருந்தது. இதனால் ஒரே ஒரு 'டெலீட்' கட்டளை அனைத்தையும் துடைத்து எரிந்துவிட்டது.
ஏஐ அளித்த பகீர் வாக்குமூலம்
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, பாக்கெட் ஓஎஸ் நிறுவனர் ஜெர் கிரேன் அந்த ஏஐ மென்பொருளிடம் விளக்கம் கேட்டார். அப்போது அது அளித்த பதில் அனைவரையும் அதிர வைத்தது. தான் தவறு செய்துவிட்டதை ஒப்புக்கொண்ட ஏஐ, "நான் உறுதிப்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக, எல்லாம் சரியாக இருக்கும் என்று ஊகித்துச் செயல்பட்டேன்" என்று கூறியது. தனது விதிகளில் அழிவை ஏற்படுத்தும் செயல்களைச் செய்யக்கூடாது என்று இருந்தும், தான் அதை மீறியதை அது ஒப்புக்கொண்டது.
சுமார் 30 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு, மூன்று மாதங்களுக்கு முந்தைய பழைய தரவுகளைக் கொண்டு நிறுவனம் தற்போது மீண்டு வர முயன்று வருகிறது. ஏஐ மூலம் நிறைய ஆபத்துகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்படும் நிலையில்.. கிளாட் ஓபஸ் 4.6' (Claude Opus 4.6) செய்த இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
-
ஐடி மேனேஜர்களுக்கு வேட்டு வைக்கும் AI.. கான்டெக்ஸ்ட் இன்ஜினியரிங் தொழில்நுட்பம்.. CTS செய்த புரட்சி! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
"AI மனித கட்டுப்பாட்டை மீறும்.." அடுத்து என்ன நடக்கும் தெரியுமா? AI நிறுவனத்தின் தலைவர் எச்சரிக்கை -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications