Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆடி மாதத்தில் கடகத்தில் சூரியன் மகரத்தில் சனி - எதிர் எதிர் பார்வையால் யாருக்கு என்ன பாதிப்பு

சூரியன் சனி சேர்க்கை மற்றும் பார்வையானது சில ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் தொழிலில் பாதிப்பை உருவாக்கும். கடக ராசியில் அமரும் சூரியனுக்கு மகர ராசியில் வக்ர நிலையில் பயணிக்கும் சனியின் பார்வை கிடைக்கிறது. இதனால் யாருக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சூரியன் சிவனின் அம்சம். சக்தியின் அம்சமான கடக ராசியில் பயணிக்கும் காலம் ஆடி மாதம். இந்த மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்க மகர ராசியில் உள்ள சனியின் பார்வை நேரடியாக சூரியனுக்கு கிடைக்கிறது. சூரியன் சனி சேர்க்கை மற்றும் பார்வையானது சில ராசிக்காரர்களுக்கு வேலை மற்றும் தொழிலில் பாதிப்பை உருவாக்கும். ஜென்ம ஜாதகத்தில் சூரியன் - சனி பார்வை, சேர்க்கை உள்ளவர்கள், தொடர்ந்து ஒரு வேலையிலோ, தொழிலிலோ நீடிக்க முடியாது என்பதை அனுபவத்தில் உணரலாம்.

கடக ராசியில் ஏற்கனவே செவ்வாய் சஞ்சரிக்க அங்கே போய் இணையும் சூரியனின் நேரடியான பார்வை சனிபகவானுக்கு கிடைக்கிறது. இந்த கிரகங்களின் சஞ்சாரமும் பார்வைகளும் சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளையும் சிலருக்கு தீமைகளையும் தரும்.

சனியும் செவ்வாயும் பகை கிரகங்கள் ஒரு ராசியில் சஞ்சரித்தாலோ பார்த்துக்கொண்டாலோ பிரச்சினைதான். அதுபோல சூரியனும் சனியும் ஒரே ராசியில் சஞ்சரித்தாலோ எதிர் எதிராக பார்த்துக்கொண்டாலோ பாதிப்புதான். இன்று முதல் கடக ராசியில் சஞ்சரிக்கும் சூரியனுக்கு மகர ராசியில் பயணிக்கும் வக்ர சனியின் பார்வை கிடைக்கிறது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன் கிடைக்கும் பரிகாரங்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே,பூர்வ புண்ணியாதிபதி சூரியன் இந்த மாதம் நான்காவது வீட்டில் அமர்ந்து வக்ரமடைந்த சனிபகவானின் பார்வையை பெறுவதால் கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருப்பது அவசியம். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். குழந்தைகளின் திருமண விசயமாக பேசி முடிவு எடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை பிள்ளைகளையும் ஆலோசனை செய்வது அவசியம். அதே நேரத்தில் இந்த மாதம் உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் சனியின் பார்வையை விட்டு விலகி ஐந்தாம் வீட்டிற்கு செல்லப்போவதால் மனதில் உற்சாகம் அதிகரிக்கும். உங்களுக்கு உடம்பில் இருந்த மந்தநிலை நீங்கும். நினைத்த காரியம் சுலபமாக முடியும். அழகு ஆரோக்கியம் அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். வியாபாரம் நன்றாக லாபகரமாக இருக்கும். வேலையில் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கும். வெளிநாடு வாய்ப்புகள், புது வேலைக்கான முயற்சிகள் வெற்றிகரமாக முடியும். ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள் ஆடி அமாவாசை நாளில் அன்னதானம் செய்யுங்கள்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிர பகவானை ராசி நாதனாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே, சோர்வு களைப்பு நீங்கி உற்சாகமாக இருப்பீர்கள். சூரியன் இரண்டாம் வீட்டில் இருந்து மூன்றாம் வீட்டிற்கு பயணம் செய்வதால் பேச்சில் இருந்த கடுமை நீங்கும். சூரியனுக்கு சனியின் பார்வை கிடைப்பதால் யாருக்கும் பணம் கடனாகக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். அரசாங்க தொடர்பில் வெற்றி ஏற்படும். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். செவ்வாய் பகவானின் இடப்பெயர்ச்சி சாதகமாக உள்ளதால் சகோதரர்கள் இடையே இருந்த பிரச்சினை நீங்கும். சொத்து வாங்க முயற்சி செய்யலாம். பங்குச்சந்தை முதலீடுகளால் பணம் வரும். அலுவலகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் சமாளித்து வெற்றிகரமாக செய்வீர்கள். உங்களுக்கு நன்மைகள் அதிகம் நிறைந்த மாதமாக அமையும். மாற்றுத்திறனாளிகள் குறிப்பாக கண் தெரியாதவர்கள், காதுகேளாதவர்களுக்கு உதவி செய்ய நன்மைகள் அதிகம் நடைபெறும்.

மிதுனம்

மிதுனம்

சூரியன் உங்கள் ராசியில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு பயணம் செய்கிறார். உஷ்ண நோய்கள் நீங்கும். அழகு ஆரோக்கியம் அதிகரிக்கும். இரண்டாம் வீட்டில் உள்ள சூரியன் மீது சனிபகவானின் பார்வை விழுவதால் பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் நிதானம் தேவை. இளைய சகோதர சகோதரிகளால் உங்களுக்கு செலவுகள் வரும். புதன் வலிமையாக ஆட்சி பெற்று பயம் செய்வதால் தன்னம்பிக்கை தைரியம் கூடும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். பேச்சில் கடுமை காட்ட வேண்டாம். அஷ்டமத்து சனி கஷ்டத்தை கொடுத்தாலும் குருவின் பார்வை சாதகமாக உள்ளது. செவ்வாய் பகவானின் சஞ்சாரம் சாதகமாக உள்ளதால் உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பண வரவு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். புதன்கிழமை பெருமாள் கோவிலுக்கு போய் விளக்கேற்றி வழிபடுங்கள். மாற்றுத்திறனாளிக்கு உதவுங்கள்.

கடகம்

கடகம்

விரைய ஸ்தானத்தில் பயணித்த சூரியன் உங்கள் ராசிக்கு வந்துள்ளார். உங்கள் ராசியில் உள்ள சூரியன் மீது சனிபகவான் பார்வை விழுவதால் பேச்சில் கோபத்தை குறைத்துக்கொள்ளுங்கள். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். சின்ன சின்ன விசயத்திற்கெல்லாம் கோபப்படுவீர்கள். உறவினர்களின் உதவி கிடைக்கும். ராசியில் செவ்வாய் சூரியன் பயணம் செய்கின்றனர். ராசியில் உள்ள செவ்வாய் பகவான் இரண்டாம் வீட்டிற்கு செல்வதால் மனதில் நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். கோர்ட் வழக்குகளில் கவனம் தேவை அலட்சியம் வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையை சின்னச் சின்ன சண்டைகள் வரலாம். கண்டகச்சனியால் ஞாபக மறதி ஏற்படும். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம் தேவை. இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். ஏழைகள், ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யவும்.

சிம்மம்

சிம்மம்

ராசிநாதன் சூரியன் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். ஆறாம் வீட்டில் உள்ள சனியின் பார்வை படுவதால் அலைச்சல் டென்சன் அதிகரிக்கும். தூக்க குறைபாடு ஏற்படும். பயணங்களின் போது கவனம் இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். உங்களுக்கு சுக்கிரன் சாதமாக பயணம் செய்வதால் சுப செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். புது வீடு சொத்து வாங்கலாம். புது தொழில் அமைய யோகம் உண்டு. விஐபிக்களால் ஆதாயம் உண்டு. பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். வேலையில் சுமை அதிகரிக்கும். கவனம் தேவை. ஞாயிற்றுக்கிழமைகளில் பைரவரை வணங்க நன்மைகள் நடைபெறும்.

கன்னி

கன்னி

சூரியன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். சனியின் பார்வையில் சூரியன் இருந்தாலும் நிதி விவகாரங்களில் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதுவும் இருக்காது என்றாலும் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தூக்க குறைபாடு ஏற்படும். தொட்டது துலங்கும் மாதமாக அமையும். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கி உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.புது ஒப்பந்தங்கள் கையெழுத்து போடலாம். வியாபாரம் புதிதாக தொடங்கலாம். தாய் தந்தைக்கு உடல் நலத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். திடீர் பண வரவு வரும். செவ்வாய் 12ஆம் வீட்டில் வந்து மறைவதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். கணவன் மனைவி இடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டு. அரசு தொடர்பான காரியங்கள் லாபகரமாக இருக்கும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வணங்க நன்மைகள் நடைபெறும்.

துலாம்

துலாம்

பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சூரியன் பயணம் செய்கிறார். சூரியன் மீது சனியின் பார்வை விழுவதால் வேலையில் கவனம் தேவை. வேலையில் கூடுதல் பொறுப்பும் சுமையும் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் உயர் அதிகாரிகளைப் பற்றி விமர்சித்து பேச வேண்டாம். செவ்வாய் சாதகமாக பயணம் செய்கிறார். பத்தாம் வீட்டில் இருந்து லாப ஸ்தானத்திற்கு செவ்வாய் மாறுவதால் வீடு மனை வாங்கலாம். நிதி நெருக்கடிகள் நீங்கும் கடனை பைசல் செய்யலாம். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கும். அப்பாவிற்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பண வரவு அதிகரிக்கும். ஷேர்மார்க்கெட் மூலம் லாபம் வரும். வங்கிக் கடன் உதவி கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக இருக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். கோவிலுக்கு சென்று வழிபடுங்கள். அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுங்கள்.

விருச்சிகம்

விருச்சிகம்

எட்டாம் வீட்டில் பயணித்த சூரியன் 9ஆம் வீட்டிற்கு வந்துள்ளார். சூரியனுக்கு சனியின் பார்வை கிடைப்பதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். திடீர் மருத்துவ செலவுகள் வரும். ராசிநாதன் செவ்வாய் 10ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாவதால் சவால்களை சாதனையாக மாற்றுவீர்கள். சொத்து பாகப்பிரிவினை சாதகமாக முடியும். சகோதரன் சகோதரிகளிடைய இருந்த பிரச்சினைகள் நீங்கும். பதவிகள், பொறுப்புகள் தேடி வரும் ஆரோக்கியம் அதிகரிக்கும். அரசு தொடர்பான விசயங்களில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். ஏழை நோயாளிகளுக்கு உதவுங்கள்.

தனுசு

தனுசு

சூரியன் உங்கள் ராசிக்கு எட்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். அஷ்டம ஸ்தானத்தில் உள்ள சூரியன் மீது இரண்டாம் வீட்டில் உள்ள சனிபகவானின் பார்வை விடுவதால் பணம் விசயத்தில் கவனம் தேவை. செலவில் சிக்கனம் தேவை. அப்பா வழியில் திடீர் மருத்துவ செலவுகள் வரும். எட்டாம் வீட்டில் பயணித்த செவ்வாய் 9ஆம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடைவதால் தடைகள் விலகும். பிள்ளைகளால் சந்தோஷம் அதிகரிக்கும். திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம். சொத்து விசயங்களில் லாபம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே சின்னச் சின்ன சண்டைகள் வரலாம் விட்டுக்கொடுத்து செல்லவும். அரசு வழியில் நட்பு கிடைக்கும். உறவினர்களின் ஆறுதல் கிடைக்கும். வியாபாரம் இந்த மாதம் சாதகமாக உள்ளது. அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுங்கள்.

மகரம்

மகரம்

சூரியன் இந்த மாதம் முழுவதும் உங்களுடைய களத்திர ஸ்தானமான ஏழாவது வீட்டில் பயணம் செய்யப்போகிறார். உங்கள் ராசியில் அமர்ந்துள்ள ராசிநாதன் சனிபகவானின் பார்வை நேர் எதிரே உள்ள சூரியன் மீது விழுகிறது. உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பெற்றோர்களின் சொல்பேச்சு கேட்டு நடப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை. அரசு தொடர்பான காரியங்களில் கவனம். பயணங்களின் போது கவனம் தேவை. சொத்து விற்பனை, பாகப்பிரிவினையில் கவனம் தேவை. குல தெய்வ வழிபாடு மனதில் நிம்மதி சந்தோஷத்தை கொடுக்கும். உயரதிகாரிகளிடம் பேசும் போது கவனம் தேவை. குழந்தைகள் உயர்கல்வி, திருமணம் விசயமாக பேசும் பொது கவனம் தேவை. ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களை நினைத்து வணங்குங்கள் பாதிப்புகள் நீங்கும்.

கும்பம்

கும்பம்

உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் இருந்த சூரியன் ஆறாவது வீட்டில் பயணம் செய்வதால் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும் சுக்கிரனும் பயணம் செய்வதால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து மோதல்கள் ஏற்படும் விட்டுக்கொடுத்து செல்லவும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து விடவும். இரவு நேர பயணங்களைத் தவிர்த்து விடுங்கள். செவ்வாய் பயணம் சாதகமாக உள்ளதால் வீடு மனை வாங்குவது விசயமாக பேசுவது சாதகமாக இருக்கும். ஏழாம் வீட்டிற்கு வந்து அமரும் செவ்வாயின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சாதகமாக இருக்கும். வேலைச்சுமை நீங்கி உற்சாகம் அதிகரிக்கும். ஆடி அமாவாசை நாளில் முன்னோர்களை வழிபடுவது மன நிம்மதியைக் கொடுக்கும்.

மீனம்

மீனம்

இதுநாள் வரை நான்காம் வீட்டில் இருந்த சூரியன் ஐந்தாம் வீட்டில் பயணம் செய்வதால் உங்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். சனியின் பார்வை கிடைப்பதால் கர்ப்பிணி பெண்கள் அதிக கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். உடல் ரீதியாக உங்களுக்கு சில தொந்தரவுகள் ஏற்படும். திடீர் மருத்துவ செலவுகளும் வரும் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். செவ்வாய் பகவான் இடப்பெயர்ச்சி சாதகமாக இருப்பதால் எதிர்ப்புகளைத் தாண்டி வெற்றியடைவீர்கள். பிள்ளைகளின் கல்வி விசயமாக சுப செலவுகள் ஏற்படும். உங்களுக்கு வெற்றி அதிகரிக்க தினசரி சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+