ஆடிப்பூரம்: ஸ்ரீரங்கம் பெருமாள் கொடுத்த பட்டு வஸ்திரம் அணிந்து தங்கத்தேரில் எழுந்தருளிய ஆண்டாள்
ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் இருந்து பட்டு வஸ்திரமும் மங்கல பொருட்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. ரங்கநாதர் அளித்த பட்டு அணிந்து தங்கத்தேரில் எழுந்தருளினார் ஆண்டாள்.
திருச்சி: ஆடிப்பூரம் நாளில் ஆண்டாள் அவதரித்தார் என்று சொல்லப்படுவதால் ஆண்டுதோறும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடிப்பூரம் விழா பத்து நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கொடுத்த பட்டு வஸ்திரத்தை அணிந்து கொண்டு தேரில் எழுந்தருளுனார் ஆண்டாள்.

ஆடிப்பூர தினத்தில் ஆண்டாள் பிறந்ததாக புராணங்கள் சொல்கின்றன. ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியான சந்திரன் வீட்டிலும், சந்திரன், சூரியனின் ராசியான சிம்மத்திலும் சஞ்சரிக்கும் போது பூர நட்சத்திரம் தினத்தில் துளசி மாடத்தினருகில் பெரியாழ்வாரால் தெய்வ குழந்தை கண்டெடுக்கப்பட்டார்.
மகாவிஷ்ணுவின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள்.

பெருமாளுக்கு சூட்ட வேண்டிய மலர் மாலையை தானே சூடிக் கொண்டு அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் கொடுத்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால், சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற பெயரும் பெற்றாள். அப்போது அந்தக் கண்ணாடியில் அரங்கனாகவே தெரிந்தாள் ஆண்டாள். தானே அவனாக பாவித்து மகிழ்ந்த ஆண்டாளின் அவதார தினம் தான் ஆடிப்பூரம். அந்த அற்புதத் திருநாளை ஒட்டி நடக்கும் திருவிழாவில் ஆண்டாளை தரிசிப்போர் ஆனந்த வாழ்வு பெறுவார்கள் என்பது ஐதீகம்.

ஆடியில் பூரம் நட்சத்திரத்தில் ஆண்டாள் அவதரித்த தினத்தை ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட வைணவ கோயில்களிலும் திருவாடிப்பூரம் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. தினம் தினம் ஒரு வாகனத்தில் அலங்கார ரூபினியாக ரங்கமன்னாருடன் எழுந்தருளுவார் ஆண்டாள்.

ஆடிப்பூரம் திருவிழாவின் ஐந்தாம் நாளன்று ஐந்து கருடவாகன சேவை நடைபெற்றது. இதே போல 7ஆம் திருநாளன்று ஆண்டாள் மடியில் சயனத்திருக்கோலம் கொண்டிருந்தார் ரங்கநாதர். இந்த கோலத்தைக் கண்டாலே திருமணமாகாத தம்பதியினருக்கு திருமணம் நடைபெறும் தம்பதியர் ஒற்றுமை அதிகரிக்கும் பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளுக்கு அவதார தினத்தில் நடைபெறும் தேரோட்டம் சிறப்பானது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உலா வரும் ஆண்டாளுக்கு பட்டு வஸ்திரமும் மங்கல பொருட்களும் பரிசாக கொடுத்தனுப்புவார் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் துளசி மாடத்தில் அவதரித்து ஸ்ரீரங்கம் ரங்கநாதருடன் ஐக்கியம் ஆனவர் ஆண்டாள் நாச்சியார். இதன்காரணமாகவே ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரைத் தேராட்ட நாளில் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில் இருந்து மங்களப் பொருட்கள் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படும். ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையும் ரங்கநாதருக்கு அணிவிக்கப்படும். அதேபோல ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் பிறந்த நாளான ஆடிப்பூரத்தினத்தன்று நடைபெறும் தேரோட்டத்தின் போது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து வஸ்திர மரியாதை ஆண்டாளுக்கு வழங்கப்படுவது தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு வஸ்திரை மரியாதை கொடுக்க ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் பட்டு வஸ்திரங்கள் மாலை, பழங்கள் உள்ளிட்ட மங்களப் பொருட்களை ஸ்ரீரங்கம் கோவில் ரங்கவிலாஸ் மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் பட்டுவஸ்திரங்களை யானை மீது அமர்ந்து எடுத்து வர, ஸ்ரீரங்கம் கோயில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளர்கள் மங்களப் பொருட்களை கையில் ஏந்தியும், தலையில் சுமந்தும் மேலதாளம் முழங்க மங்களப் பொருட்களை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து வந்தனர்.

செவ்வாய்கிழமையன்று காலை காலை 6 மணியளவில் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்தினரால் இந்த மங்கலப் பொருட்கள் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அக்கோயில் நிர்வாகனத்தினரிடம் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த வஸ்திரங்களை ஆண்டாள் அணிந்து நாளை ஆடிப்பூரம் நடைபெறும் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆடிப்பூர தேரோட்டத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். கொரோனா பரவல் காரணமாக திருத்தேரோட்டம் ரத்து செய்யப்பட்டாலும் கோவில் வளாகத்திற்குள் தங்கத் தேரோட்டத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார் ஆண்டாள் நாச்சியார்.

துளசி தோட்டத்தில் அவதரித்த ஆண்டாளின் இயற்பெயர் கோதை என்பதாகும். ஆண்டாள் அவதரித்த திருத்தலமான ஸ்ரீ வில்லிபுத்தூரை, வடமாநில மக்கள் கோதாதேவி அவதார ஸ்தலம் என்று சிறப்பித்து கூறுவர். இந்த புண்ணிய தினத்தில் ஆண்டாள் ஆலயத்துக்கு சென்று வருவது மிகவும் நன்மை தருவதாகும். ஆண்டாளை தரிசனம் செய்தால் மணம் போல மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாகும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications