Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமேஸ்வரத்தில் ஆடி திருக்கல்யாண திருவிழா...வெள்ளித்தேரில் வீதி உலா வந்த அம்மன்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயில் ஆடி திருக்கல்யாண திருவிழாவையொட்டி வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது. இதில் மின் விளக்கு அலங்காரத்துடன் கூடிய வெள்ளி ரதத்தில் அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வெள்ளி ரதத்தை வடம் பிடித்து இழுத்தனர்.

ராமேஸ்வரம் இந்துக்களின் புண்ணிய பூமி ஆகும். ராமபிரான் ராவணனையே வாதம் செய்த பிறகு சீதையை சிறை மீட்டு வரும்போது ராமபிரானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தாது. அதனால் சீதை மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கினார்.

அந்த மணல் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ராமபிரானும் சீதாதேவியும் அந்த சிவலிங்கத்தை வணங்கினார்கள். அந்த லிங்கம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆகும். இங்கு வரும் பக்தர்களுக்கு தோஷங்கள், பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.

 ராமேஸ்வரத்தில் கொடியேற்றம்

ராமேஸ்வரத்தில் கொடியேற்றம்

ராமேஸ்வரம் இராமநாதசுவாமி பார்வத்தினி அம்மன் திருமணம் ஆடி மாதம் நடைபெறும். இந்த திருவிழா நிகழ்வுகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக காணக்கிடைக்காத காட்சிகளாக இருக்கும். இப்புண்ணிய திருத்தலத்தில் ஆடி திருக்கல்யாண திருவிழாவையொட்டி முன்னிட்டு கடந்த 23ந் தேதி சிவாச்சாரியார்கள் வேதம் முழங்க அம்மன் சன்னதி எதிரே உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு திருவிழா தொடங்கியது.

 காசிக்கு நிகரான தலம்

காசிக்கு நிகரான தலம்

தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகிய முப்பெருமையுடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் காசிக்கு நிகரானது. இங்கு 17 நாட்கள் நடைபெறும் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமி அம்மன் எழுந்தருளி அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தீர்த்தம், மூர்த்தி, தலம் ஆகிய முப்பெருமையுடைய ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் காசிக்கு நிகரானது. இங்கு 17 நாள்கள் நடைபெறும் ஆடி திருக்கல்யாண திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான ஆடி அமாவாசையை முன்னிட்டு சுவாமி அம்மன் எழுந்தருளி அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

வெள்ளி தேரோட்டம்

வெள்ளி தேரோட்டம்

இதனை தொடர்ந்து 7 ஆம் திருவிழாவாக நேற்று இரவு கன்னி லக்னத்தில் அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பாளுக்கு திருக்கோவில் சிவச்சாரியார்கள் சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது. பின்னர் அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பாள் வெள்ளி ரதத்தில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் உள்ளூர் மற்றும் வட மாநில பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஆடி திருக்கல்யாணம்

ஆடி திருக்கல்யாணம்

9 வது நாள் நிகழ்ச்சியாக நாளை காலையில் அம்பாள் தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவின் 11ஆம் நாளான வருகின்ற 2ஆம் தேதி பகல் 2 மணியிலிருந்து 3 மணிக்குள் ராமர்தீர்த்தம் தபசு மண்டகப்படியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், மறுநாள் இரவில் முக்கிய நிகழ்ச்சியாக திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. 17-ம் நாள் மற்றும் கடைசி நாள் நிகழ்ச்சியாக சுவாமி-அம்பாள் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துவருகிறது. ஆடி திருக்கல்யாண திருவிழாவையொட்டி உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்திருந்ததால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+