Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆனி அமாவாசை - முன்னோர்களுக்கு இன்று தர்ப்பணம் செய்தால் இத்தனை நன்மைகளா

திருவாதிரை, புனர்பூசம், பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதுர் தர்ப்பணம் பன்னிரண்டு ஆண்டுகள் முன்னோர்களுக்கு திருப்தி ஏற்படுத்தும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆனி அமாவாசை இன்று முழு நாளும் சர்வ அமாவாசையாக கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் அமாவாசை நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வதன் மூலம் முன்னோர்களுக்கு 12 ஆண்டுகள் தர்ப்பணம் செய்த திருப்தி ஏற்படுத்தும். மறைந்த முன்னோர்களுக்கு முறையாக பித்ரு பூஜை செய்தால், ஜாகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும்.

நம் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த முன்னோர்களை பித்ருக்கள் என்கிறோம். அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையாததால் வருகிற தோஷம் பித்ருதோஷம் எனப்படும். ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ருதோஷம் உண்டு.லக்னம், பஞ்சமம், சப்தமம், பாக்கியம் இவ்விடங்களில் ராகு கேதுக்கள் நின்றால் பித்ரு தோஷம் ஏற்படுகின்றது.

தோஷத்தில் மிகக் கொடிய தோஷம் பித்ரு தோஷம். இவர்களது குடும்பம் ஜோதிட ரீதியில் எவ்வளவு அதிர்ஷ்டமான கிரகநிலைகள் பெற்று இருந்தாலும் அந்தப் பலனை இவர்கள் அடைய முடியாமல் பித்ருக்களும், பித்ரு தேவதைகளும் தடை செய்கிறார்கள். பிதுர் தோஷம் தன்னையும், தன் குடும்பத்தையும், குழந்தை சம்பந்தமான பிரச்சினைகளையும் கணவன்-மனைவி சம்பந்தமான பிரச்சினைகளையும் கொடுக்கும். ராமேஸ்வரம் சென்று தில ஹோமம் செய்வதும், கயா சிரார்த்தம் செய்வதும், காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று திவசம் செய்வதும், திருவெண்காடு சென்று திதி கொடுப்பதும் இந்த தோஷத்துக்குப் பரிகாரம்.

முன்னோர்களின் ஆசி

முன்னோர்களின் ஆசி

ஒரு ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்கள் வழிபடும் முறைக்கு பிதுர்தர்ப்பணம் அல்லது சிராத்தம் என்று பெயர். ஜாதகத்தில் சூரியன் அல்லது சந்திரன் ராகுவுடனோ அல்லது கேதுவுடனோ எந்த இடத்தில் சேர்ந்திருந்தாலும் பித்ருதோஷம் உண்டு.

தோஷத்தால் பாதிப்பு

தோஷத்தால் பாதிப்பு

பித்ரு தோஷம் உள்ளவர்களுக்கு திருமணம் நடக்காது அல்லது மிகவும் தாமதமாக நடக்கும்; நடந்தாலும் விவாகரத்து ஏற்படலாம் அல்லது தம்பதியரிடையே நெருக்கம் இருக்காது குழந்தைப் பாக்கியம் கிடைக்காது.
ஒரு சிலருக்கு கடுமையான உடல் உபாதைகள், மனநோய் காரணமாக தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கும். ஒரு சிலருக்கு பலமுறை திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. கலப்புத் திருமணம் நடக்கவும், பெற்றொருக்குத் தெரியாமல் ரகசியத் திருமணம் நடக்கவும் வாய்ப்புண்டு. இந்த தோஷம் உள்ள சில தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் உண்மையானவர்களாக நடந்து கொள்வதில்லை.

பித்ரு தோஷம் ஏன் வரும்

பித்ரு தோஷம் ஏன் வரும்

ஆண் வாரிசு இல்லாத சித்தப்பா, பெரியப்பா, அத்தை சகோதரர் ஆகியோருக்கு திதி கொடுக்காவிட்டாலும் வரும். கருச்சிதைவு செய்துகொண்டால் இந்த தோஷம் வரும். பெற்றோர்களின் இறுதி நாட்களில் அவர்களை சரிவர கவனிக்காமல் இருந்து அதனால் அவர்கள் மன வேதனை அடைந்தால் பித்ரு தோஷம் வரும்.

பரிகாரம் செய்தாலும் தீராத தோஷம்

பரிகாரம் செய்தாலும் தீராத தோஷம்

பித்ருக்களின் சாபம் கடவுள் நமக்குத் தரும் வரங்களையே தடுத்து நிறுத்தும் சக்தியுடையது.
சிலர் ஏராளமான பரிகாரங்கள் தானங்கள் செய்தும் துன்பத்திலிருந்து விடுபடுவதில்லை. தொடர்ந்து கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள். இதற்கான காரணங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்று செய்ய வேண்டிய தர்ப்பணம் சிரார்த்தம் போன்ற பித்ருக்களுக்கான கடமைகளை செய்யாமல் இருத்தல் அல்லது சிரத்தை குறைவுடன் செய்தல் காரணமாகும். பித்ரு பூஜை வழிபாடு செய்யாமல், நீங்கள் என்னதான் கோவில், கோவிலாக அலைந்து பரிகார பூஜைகள் செய்தாலும் நிச்சயமாக பலன்கள் கிடைக்கப் போவதில்லை.
முறையாக பித்ரு பூஜை செய்தால், ஜாகத்தில் உள்ள தோஷங்கள் எல்லாம் நிச்சயம் அகன்று விடும்.

தோஷ நிவர்த்தி

தோஷ நிவர்த்தி

நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ் மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ் வருடமும் அதே மாதத்தில் அதே திதியன்று குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும்.
இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதே போல அமாவாசைத் திதிகளிலும் செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.

திதி தர்ப்பணம்

திதி தர்ப்பணம்

முன்னோர்களின் இறந்த திதி தெரியாதவர்கள் ஆடி அமாவாசை அன்றோ அல்லது தை அமாவாசை அன்றோ அல்லது மகாளய பட்சத்தில் வரும் மஹாபரணி, மத்யாஷ்டமி அன்று இராமேஸ்வரம் அல்லது சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது ஆற்றங்கரை, கடற்கரை அல்லது வீட்டிலேயே சிரார்த்தம் செய்வது நன்மையை கொடுக்கும். மாத மாதம் திதி கொடுக்க முடியாதவர்கள் ஏதாவது ஒரு அமாவாசை நாளில் செய்து வருவது மிகவும் நன்மையையும், அளப்பரிய நற்புண்ணியங்களையும் தரும்.

அமாவாசை திருவாதிரை

அமாவாசை திருவாதிரை

சாதாரணமாக அமாவாசையானது அனுஷம், விசாகம், சுவாதி நட்சத்திரங்களில் வருமானால் அப்போது செய்கிற சிரார்த்தம் ஒரு வருடத்துக்குரிய திருப்தியை உண்டாக்குகிறது. திருவாதிரை, புனர்பூசம், பூசம் நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பிதுர் தர்ப்பணம் பன்னிரண்டு ஆண்டுகள் பிதுர்களுக்கு திருப்தி ஏற்படுத்தும்.

முன்னோர்களுக்கு திருப்தி

முன்னோர்களுக்கு திருப்தி

அவிட்டம், சதயம், பூரட்டாதி நட்சத்திரங்களில் வரும் அமாவாசையன்று செய்யப்படும் பித்ரு பூஜையானது, பித்ருக்களுக்கும் தேவர்களுக்கும் கிடைக்காத புண்ணிய காலத்தைத் தரும். மாசி மாதத்து அமாவாசையானது சதய நட்சத்திரத்தன்று வருமானால் அது பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும்.

ஆயிரம் யுகங்கள் திருப்தி

ஆயிரம் யுகங்கள் திருப்தி

மாசி மாத அமாவாசை அவிட்டம் நட்சத்திரத்தில் வருமானால் அதுவும் பித்ருக்களுக்கு அளவற்ற மன மகிழ்ச்சியைத் தரும். அந்த நாளில் பித்ருக்களை நினைத்து அன்னம் அல்லது தண்ணீர் தானம் செய்தால் 16,000 ஆண்டுகள் பிதுர்களைத் திருப்தி செய்த பலன் கிடைக்கும். மாசி மாதம் வரும் அமாவாசை பூரட்டாதி நட்சத்திரத்தில் அப்போது அந்த நன்னாளில் சிராத்தம் செய்தால், பித்ருக்கள் திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் சுகமாக தூங்குவார்கள் என விஷ்ணு புராணம் கூறுகிறது.

வீடுகளில் தானம் செய்யலாம்

வீடுகளில் தானம் செய்யலாம்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் மக்கள் அதிகம் கூடும் நீர் நிலைகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுக்கலாம். ஆனி அமாவாசையான இன்றைய தினம் வீட்டில் உணவு சமைத்து காகங்களுக்கு உணவு படைத்து வயதானவர்களுக்கு தானம் கொடுக்கலாம். இயலாதவர்களுக்கு அன்னதானம் கொடுத்தால் நம்முன்னோர்களின் மனம் மகிழ்ச்சியடையும் தோஷங்கள் நீங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+