குருப்பெயர்ச்சி: சிகரம் தொடும் மகர ராசி.. ஆனா நண்பர்கள் விஷயத்தில்.. கவனம்.. கவனம்
Guru Peyarchi Palangal: எல்லோரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் 2025 ஆம் ஆண்டின் குருப்பெயர்ச்சி மே 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த குருப்பெயர்ச்சியில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் திருக்கணிதத்தின் படி சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய மூன்று பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. வாக்கிய பஞ்சாங்கத்தின் படி சனிப்பெயர்ச்சி அடுத்த ஆண்டும், குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி இந்த ஆண்டும் நடைபெறுகிறது. குரு சுபத்துவம் பொருந்திய கிரகம். குருப்பெயர்ச்சி வாக்கியத்தின்படி மே 11 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 14 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

குருவின் பிரசித்திபெற்ற கோயிலான ஆலங்குடி குரு ஸ்தலம் மற்றும் மற்ற சிவாலயங்களில் உள்ள குரு சந்நிதிகளில் வாக்கியப்படி மே 11 ஆம் தேதி விசேஷ பூடைகள் நடைபெறும். குரு பகவான் ஒரு ராசியில் ஒரு வருடம் இருக்கக் கூடியவர். ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு வர கிட்டத்தட்ட 12 ஆண்டுகளாகும். மே 14 ஆம் தேதி திருக்கணிதத்தின் படி இரவு 10.30 மணிக்கு குருப்பெயர்ச்சி நடக்கிறது. ரிஷபத்தில் இருந்து மிதுனத்துக்குப் பெயர்ச்சி ஆகிறார் குரு பகவான்.
மிதுனம் என்பது குருவின் வீடு. மிதுனத்துக்கு குருவானாவர் பலவிதத்தில் உபத்திரவத்தை கொடுக்கக் கூடியவர். குருவின் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிக வலிமையாக இருக்கும். அந்த வகையில் இந்த குருப்பெயர்ச்சியில் மகர ராசிக்காரர்களுக்கு என்ன விதமான பலன்களை அனுபவிக்கப் போகின்றனர் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
மகரம்: மகர ராசிக்காரர்கள் திருவெண்காடு புதன் ஸ்தலம் சென்று வருவது அனுகூலத்தை தரும். முதுகு தண்டுவடம், கழிவுப் பாதைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் அதீத கவனம் தேவை. ஏழரை சனி முற்றிலும் விலகுவதால் மன திருப்தி ஏற்படும். சுப விரையம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றக் கூடிய யோகத்தை தரும். குடும்பத்தில் நிம்மதி, ஒற்றுமை ஏற்படும்.
பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரும் அமைப்பு ஏற்படும். தனம், வாக்கு, குடும்பம் மூன்று விஷயங்களிலும் அடுத்தடுத்து நன்மைகள் ஏற்படும். வேலை இல்லை, தொழில் இல்லை, உத்தியோகம் இல்லை, படிப்பில் பெரிய முன்னேற்றம் இல்லை என்று புலம்பியவர்களுக்கு அந்த காலகட்டம் எல்லாம் மாறும். 6 ஆம் இடத்தில் இருக்கக்கூடிய குரு நற்பலன்களைக் கொடுப்பார்.
ஆனால் சத்ருக்களை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புள்ளது. அண்டை, அயலார் வீடு, நட்பு, உறவு எல்லோருடனும் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. கூடா நட்பு கேடு விளைவிக்கும். சட்ட சிக்கல் பிரச்சனைகளை எல்லாம் கொடுப்பதற்கான வாய்ப்புள்ளது. 3க்கும், 12க்கும் உண்டான குருவானவர் 6 ஆம் இடத்தில் வருவதால் கவனமாக இருப்பது நல்லது. வம்பிழுப்பது, தகராறு செய்வது, மது அருந்தி வாகனம் ஓட்டுவது போன்ற பிரச்சனைகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
குறிப்பாக அரசுத் துறை, அரசியல்வாதிகள், மீடியா துறை, தொழில் துறையில் இருப்பவர்கள் யாரோ ஒருவருக்காக பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளாவீர்கள். கூட இருப்பவர்களாலேயே பிரச்சனையை சந்திக்க கூடிய காலகட்டமாக இருக்கும். ஆனால் சட்டப் பிரச்சனைகள் கூடா நடப்பில் அதீத எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
தொழில், உத்தியோகம், சுபகாரியம், முதலீடு, வீடு கட்டுவது, புது கடன் வாங்குவது, தனத்தை பெருக்குவது, முதலீடுகள் செய்வீர்கள், குடும்பம் பெருகும், வாக்கு பெருகும் அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு அமோகமான முன்னேற்றம் ஏற்படும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் முன்னேற்றம், வளர்ச்சி உண்டாகும் காலகட்டம்
பண வரவுக்கு பஞ்சமே இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முயற்சிகள் எடுப்பதற்கான சரியான காலகட்டமாக இருக்கும். தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வாகனத்தில் கவனமாகச் செல்வது நல்லது. வண்டியில் பழுது பார்ப்பது, மற்ற எல்லா விஷயங்களும் சரியாக உள்ளதா என பார்த்துக் கொள்வது நல்லது. இரவு நேர பயணத்தில் மிகவும் கவனமாக, நிதானமாக இருப்பது நல்லது.
-
Guru Peyarchi: மீனம் ராசிக்கு அதிர்ஷ்டம் உச்சத்தில்! குருப்பெயர்ச்சி தரும் அசத்தல் பலன்கள் -
Guru Peyarchi: மகர ராசிக்கு காத்திருக்கும் ராஜவாழ்க்கை.. இந்த விஷயங்களில் மட்டும் கூடுதல் கவனம் -
அடிச்சான் பாரு அப்பாயின்மென்ட் ஆர்டரு.. லாபத்தில் குரு.. கன்னி ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட் -
குரு 12-இல்.. சிம்ம ராசிக்கு வெளிநாட்டு யோகம், புதிய வாய்ப்புகள்.. வாழ்க்கையில் பெரிய திருப்பம்! -
Guru Peyarchi: கிங்காக மாறப்போகும் துலாம் ராசி.. 10 இல் வரும் குரு அள்ளித் தரும் அதிர்ஷ்ட யோகங்கள் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications