Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி..குரு தரும் ஹம்ச யோகத்தால் கோடீஸ்வர யோகம் யாருக்கு தேடி வரும் தெரியுமா?

குரு பகவான் லக்ன கேந்திரங்களில் ஆட்சி உச்சம் பெற்று வலுக்கும் போது ஒருவருக்கு ஹம்ச யோகம் அமைகிறது. பஞ்சமகா புருஷ யோகத்தில் குரு தரும் ஹம்ச யோகம் ரொம்ப முக்கியமானது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பஞ்சமகா புருஷ யோகத்தில் குரு பகவான் தரும் ஹம்ச யோகம் மிகவும் முக்கியமானது. காரணம் ஜோதிடத்தில் மகா சுபர் குருபகவான். குரு பகவான் லக்ன கேந்திரங்களில் ஆட்சி உச்சம் பெற்று வலுக்கும் போது ஒருவருக்கு ஹம்ச யோகம் அமைகிறது. ஜாதக ரீதியாக மேஷம்,கடகம்,துலாம், மகரம் தனுசு, மீனம், மிதுனம், கன்னி ராசிக்காரர்கள், லக்னகாரர்களுக்கும் ஹம்யயோகம் அமைகிறது. இந்த குருப்பெயர்ச்சியால் யாருக்கு ஹம்ச யோகம் அமைகிறது கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

ஜாதக ரீதியாக ஹம்சயோகம் அமையப்பெற்றவர்களுக்கு அம்சமான வாழ்க்கை அமையும். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் அவரது சொந்த ராசியான தனுசு ராசியிலேயோ, மீன ராசியிலேயோ இருந்தாலும், குரு பகவான் உச்சம் பெறும் ராசியான கடக ராசியிலே சஞ்சாரம் செய்தாலும் அந்த ஜாதகருக்கு ஹம்ச யோகம் ஏற்படுகிறது. ஹம்சயோகம் அமையப்பெற்றவர்களுக்கு தனம், புத்திரபாக்கியம் அற்புதமாக அமையும். ஹம்சயோகம் வலுவாக அமையும் அந்த தசாபுத்தி காலத்தில் பலவித நன்மைகளை கொடுக்கும். லக்ன கேந்திரங்களில் ஆட்சி உச்சம் பெறும் போது இந்த யோகம் அமைகிறது.

குருபகவான் தன காரகன், புத்திரகாரகன். குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் அவரது தசாபுத்தி காலத்தில் கோடீஸ்வர யோகம் பெறும் அளவிற்கு அள்ளிக்கொடுப்பார். அதே சரியில்லாத நிலையிலோ வலுவிழந்தோ, நீசமடைந்தோ இருந்தால் அவரது தசாபுத்தியில் பாதிப்புகளை ஏற்படுத்துவார்.

ஹம்ச யோகம் யாருக்கு கிடைக்கும்

ஹம்ச யோகம் யாருக்கு கிடைக்கும்

சர லக்னங்களான மேஷம், கடகம், துலாம், மகர லக்னத்தில் பிறந்தவர்கள் குருவால் உண்டாகும் ஹம்ச யோகத்தின் முழுப் பலனையும் அனுபவிப்பவர்கள் உபய லக்னங்களான தனுசு, மீனம், மிதுனம், கன்னிக்கும் இந்த யோகம் அமையப் பெறும். ஆனால் குருவின் கேந்திராதிபத்ய தோஷத்தினால் அவர்களுக்கு யோகம் முழுமை பெறாது. சர லக்னங்களுக்கு குரு கடகத்தில் உச்சம் பெற்றும், உபய லக்னங்களுக்கு தனுசு, மீனத்தில் ஆட்சி பெற்றும் ஹம்ச யோகத்தை அளிப்பார். இந்த அமைப்பில் குரு பலம் பெறுவதால் அவரது சுப காரகத்துவங்கள் ஜாதகருக்கு மேலோங்கி நிற்கும். உபய லக்னங்களில் பிறந்தவர்களுக்கு லக்னத்தில் இருந்தால் மட்டுமே குரு முழு யோகம் அளிப்பார்.

குரு தரும் ஹம்ச யோகம்

குரு தரும் ஹம்ச யோகம்

குரு ஹம்ச யோகம் தரும் நிலையில் அவருக்கு எதிர்த் தன்மையுடைய கிரகங்களான சுக்ரன், சனி, புதன் ஆகியோருடன் சேருவது, இவர்கள் குருவைப் பார்ப்பது யோகத்தைக் குறைத்து விடும். அதேநேரத்தில் குருவின் நண்பர்களான சந்திரன், சூரியன், செவ்வாய் ஆகியோர் குருவைப் பார்த்தாலோ, இணைந்தாலோ யோகம் இன்னும் வலுப்பெறும்.

அஷ்டலட்சுமி யோகம்

அஷ்டலட்சுமி யோகம்

ஹம்ச யோகம் கிடைக்க கேந்திரங்களான 1, 4, 7,10 ஆகிய நான்கு இடங்களில் ஏதேனும் ஒன்றில் குரு வலுப்பெற்று அமரவேண்டும். ஒருவரின் ஜாதகத்தில் குரு ஒன்று, நான்கு, ஏழு, பத்து எனப்படும் கேந்திர ஸ்தானங்களில் இருந்து ராகு ஆறாமிடத்தில் இருந்தால் அஷ்டலட்சுமி யோகம் அமைவதாக ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. ஆறாமிடத்தில் அசுபக் கிரகமான ராகு இருப்பதால் ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் கெட்ட ஆதிபத்தியங்களான கடன், நோய், எதிரி ஆகியவை ஒழிக்கப்பட்டு அந்த பாவம் ஜாதகருக்கு சுப விஷயங்களைச் செய்யும் என்பது ஜோதிட விதி.

 மிதுனம்,கன்னி,தனுசு, மீனம்

மிதுனம்,கன்னி,தனுசு, மீனம்

இந்த ஹம்ச யோகத்தில் பிறந்த ஜாதகர்களின் குடும்பம் ராஜயோக அம்சத்துடன் இருப்பார்கள். குருபகவான் தற்போது மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் மிதுனம், கன்னி, தனுசு, மீன ராசிக்காரர்களுக்கு ஹம்ச யோகம் கிடைக்கிறது. மிதுன ராசி லக்ன காரர்களுக்கு குரு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். கன்னி ராசி லக்ன காரர்களுக்கு ஏழாம் வீட்டிலும் தனுசு ராசி லக்ன காரர்களுக்கு 4ஆம் வீட்டிலும் மீன ராசி லக்ன காரர்களுக்கு ஜென்ம ராசியிலும் குரு பகவான் பயணம் செய்வதால் ஹம்ச யோகம் தேடி வருகிறது.

பணத்தை அள்ளிக்கொடுப்பார் குரு

பணத்தை அள்ளிக்கொடுப்பார் குரு


இந்த ஹம்சயோகம் அமையப்பெற்றவர்கள் நேர்மையான வழியில் பணம் சம்பாதிப்பார்கள். குரு பணத்தை அள்ளிக்கொடுப்பார். எதிலும் நேர்மையாக புகழோடு இருப்பார்கள். முகத்தில் ஒரு பொலிவு தெரியும். குரு பொன்னிற காரகன். எனவே முகத்திலும் களை தெரியும். லக்னத்தோடு தொடர்பு கொண்ட குரு பகவான் அதிக வலுவான ஹம்சயோகம் தருவார்.

மிதுனம்

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களுக்கு குருபகவான் பத்தாம் வீட்டில் தொழில் ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். தனித்து ஆட்சி பெற்று அமர்ந்துள்ள குருபகவான் பலவித நன்மைகளை அள்ளித்தரப்போகிறார் குருபகவான். திருமணம் சுபகாரியம் நடைபெறும். நல்ல வேலை கிடைக்கும். சம்பள உயர்வு அதிகரிக்கும். தொழில் வளர்ச்சியில் நன்றாக இருக்கும். இந்த குருப்பெயர்ச்சி திடீர் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் ஏற்படுத்தும். பத்துக்கு அதிபனே பத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் அஷ்டமத்து சனிபகவானால் வீழ்ச்சியில் இருந்த உங்களை உயர்த்தி வைக்கப்போகிறார் குருபகவான்.

கன்னி

கன்னி

நான்கு மற்றும் ஏழுக்கு அதிபன் குரு பகவான். 7ஆம் வீட்டில் ஹம்ச யோகம் பெற்ற குருவினால் சிறந்த வாழ்க்கைத்துணையை தருவார். நீடித்த வாழ்க்கைத்துணை அமையும். அரசனுக்கு பக்கத்தில் நின்று அமைச்சராக இருந்து ஆலோசனை கூறுவார். மதியூக மந்திரியாக செயல்படுவார். குருபகவான் ஜாதகத்தில் வலுப்பெற்றவர்கள் வாழ்க்கை அற்புதமாக அமையும். ராசியை குரு நேரடியாக பார்வையிடுகிறார். இந்த பார்வையினால் பலவித நன்மைகளை அள்ளித்தரப்போகிறார் குருபகவான். குரு பார்வை நேரடியாக இருப்பதால் ஹம்சயோகத்தின் முழு பலனையும் அனுபவிக்கப்போகிறீர்கள்.

தனுசு

தனுசு

நான்குக்கு அதிபன் குரு நான்காம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து ஹம்ச யோகத்தை தருகிறார். உங்களின் நிலை உயரும். மிகப்பெரிய வாய்ப்புகளை தரப்போகிறார். புதிய வேலை கிடைக்கும். சம்பள உயர்வுடன் கூடிய வேலை கிடைக்கும். வெளிநாட்டு யோகத்தை தருவார் குருபகவான். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். முன்னேற்றத்துடன் கூடிய மாற்றங்களை குருபகவான் தருவார். அம்மாவிற்கு இருந்த கஷ்டங்கள் நீங்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். தாய்வழி உறவினர்களால் நன்மைகள் நடைபெறும்.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களுக்கு ஜென்ம ராசியில் குரு அமர்ந்து ஹம்சயோகத்தை தருகிறார். இது மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஹம்சயோகம் கொண்ட குருபகவான் சகல அம்சத்தை தரப்போகிறார். வலிமை பெற்று அமரப்போகும் குரு உங்களுக்கு நல்ல பலன்களை வாரி வழங்கப்போகிறார். குடும்பம் சுபிட்சமடையும். நீங்கள் நினைத்த காரியகங்கள் நிறைவடையும். காரியத்தடைகள் நீங்கும் வெற்றி உண்டாகும். நல்ல வருமானத்தை அள்ளிக்கொடுக்கும். வீடு சொத்து வண்டி வாகன சேர்க்கை அதிகரிக்கும். நோய்கள் நீங்கும். கடன்கள் குறையும். எதிரிகள் தொல்லை ஒழியும். புதிய தொழில் தொடங்குவீர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+