Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி 2022: எந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் சிக்கல்? யாருக்கு புரமோசன் கிடைக்கும்

குரு பகவான் ஒருவருக்கு யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரும் கிரகம். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம் நிகழ்ந்துள்ள குரு பெயர்ச்சியால் யாருக்கு வேலையில் சிக்கல் ஏற்படும் யாருக்கு புரமோசன் கிடைக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருவருக்கு நல்ல வேலையும் சம்பள உயர்வும் கிடைக்க குருபகவானின் அனுக்கிரகம் அவசியம். இந்த குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு புரமோசன், சம்பள உயர்வும் கிடைக்கும்? யாருடைய வேலையில் சிக்கல் ஏற்படும் என்று பார்க்கலாம்.

உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கியதால் பலரது வேலை பறிபோய்விட்டது. நிறைய பேருக்கு சம்பள குறைப்பு செய்துள்ளதால் மன அழுத்தம் கஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். இனியாவது நமக்கு நல்ல காலம் பிறக்குமா? அரசு வேலை கிடைக்குமா என்று சிலர் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். சம்பள உயர்வும் புரமோசனும் கிடைக்குமா என்று பலரும் காத்துக் கொண்டுள்ளனர்.

சுப கிரகமான குருபகவான் தனது ராசியான மீன ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ளார். குருபகவானின் பார்வை கடகம், கன்னி, விருச்சிகம் ராசிகளின் மீது விழுகிறது. சில ராசிக்காரர்களுக்கு தொழில் ஸ்தானத்தின் மீது குருபகவானின் பார்வை படுகிறது. இந்த குரு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வேலை தப்பும், வேலையில் சிக்கல் ஏற்படும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி குதூகலத்தை கொடுக்கும். பணவரவு நன்றாக இருக்கும். சொத்து சேர்க்கை ஏற்படும். விரைய செலவுகளை சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். உங்களுடைய தொழில் வியாபாரத்தில் இருந்த சுணக்க நிலை மாறும் பணம் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு சாதகமான இடத்தில் விழுவதால் நோய் பிரச்சினைகள் நீங்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

ரிஷபம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ராஜ யோகத்தை தரப்போகிறது. லாப ஸ்தான குருவினால் புதிய தொழில் முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். சிலருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியிருப்பவர்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும். வம்பு வழக்குகள் சாதகமாக முடியும். பணம் விவகாரங்களில் கவனம் தேவை. மகான்கள் தரிசனம் மன அமைதி தரும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

மிதுனம்

மிதுனம்

பத்தாம் இடத்தில் அமர்ந்துள்ள குருபகவானால் புதிய பதவிகள் தேடி வரும். நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். இடமாற்றங்கள் ஏற்படும். வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் கவனம், மேலதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்படுங்கள். வீண் தர்க்கம் வேண்டாம். பத்தில் குரு பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவார். சாதகமற்ற தசாபுத்தியில் இருந்தால் வேலை பறிபோகும் ஆபத்து உள்ளது கவனம் தேவை. குல தெய்வ வழிபாடு குடும்பத்தில் சந்தோஷத்தை கொடுக்கும்.

 கடகம்

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்துள்ள குரு பகவான் கோடி நன்மைகளை தரப்போகிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. சகலவிதமான நன்மைகளை தரப்போகிறது. வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலையும் லாபமும் கிடைக்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். அடுத்தவர்கள் பிரச்சினையில் தலையிட வேண்டாம். உயரதிகாரிகளின் ஆசியும் உங்களுக்கு கிடைப்பதால் நன்மை தரும் குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.

சிம்மம்

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குருவின் பயணத்தால் வேலை விசயத்தில் சில பிரச்சினைகள் வரலாம் குருவின் பார்வை மற்றும் அனுகிரகத்தினால் சில பாதிப்புகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம். சுப விரைய செலவுகள் ஏற்படும். குல தெய்வ தரிசனம் மன குழப்பத்தை தீர்க்கும்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் தொட்டது துலங்கும். குருவின் பார்வை சாதகமான நிலையில் உள்ளதால் அதிக நன்மைகள் நடைபெறும். வேலையில் புரமோசன் கிடைக்கும். தொழில் மாற்றம் இடமாற்றம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் தேடி வரும். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அலுவலகத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். மதிப்பு மரியாதை கூடும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களே வேலை இல்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புரமோசனுடன் கூடிய நல்ல சம்பளம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் சொந்த தொழில் தொடங்குவீர்கள். வெற்றி மீது வெற்றி வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் கவனமும் அக்கறையும் தேவை. வீட்டில் சுப விரையங்கள் ஏற்படும். சுப காரியங்கள் கை கூடி வரும்.

 விருச்சிகம்

விருச்சிகம்

குரு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் நிறைய நன்மைகள் நடைபெறும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு உத்யோக உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். ஏற்றங்களும் மாற்றங்களும் நிறைந்த குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. திடீர் அதிர்ஷ்டமும் யோகமும் வரும்.

தனுசு

தனுசு

உங்கள் ராசி அதிபதியான குரு நான்காம் வீட்டில் அமர்ந்துள்ளார். சுக ஸ்தான குருவின் பார்வை உங்க ராசிக்கு எட்டு, 10 மற்றும் 12ஆம் வீடுகளின் மீது விழுகிறது. உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலையில் புதிய உற்சாகம் பிறகும். சிலருக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும். புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெற்றியும் அனுகூலமும் கிடைக்கும்.

மகரம்

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு தைரிய ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குருபகவானால் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அலுவலகத்தில் உயரதிகாரிகளுடன் இருந்த மனஸ்தாபம் குறையும். புதிய வேலைக்கு முயற்சி செய்யுங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அசையும் அசையாக சொத்துக்கள் வாங்கலாம். குடும்ப பிரச்சினைகளை கவனமாக கையாளுங்கள், விட்டுக்கொடுங்கள் போங்கள் பிரச்சினைகள் எளிதில் நீங்கும்.

கும்பம்

கும்பம்

குரு பகவான் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் அமர்ந்துள்ளார். நீங்கள் பேசும் வார்த்தைகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் அஷ்டலட்சுமி யோகத்தை தேடி கொடுக்கும். பெரிய வெற்றிகளும் சந்தோஷமும் கொடுக்கக் கூடிய குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வரும். சிலருக்கு வேலையில் புரமோசன் சம்பள உயர்வு கிடைக்கும். வார்த்தைகளில் கவனமாக இருக்கவும்.

 மீனம்

மீனம்

உங்கள் ராசி அதிபதி குரு ஜென்ம ராசியில் அமர்ந்துள்ளார். ஜென்ம குரு இடமாற்றத்தை தருவார். வேலையில் புரமோசனுடன் கூடிய இடமாற்றத்தை தருவார் குரு பகவான். அதை ஏற்றுக்கொள்வது நன்மை செய்யும். குருவின் செயல்பாடு சந்தோஷத்தை கொடுக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் சொல்வதை கேட்கவும். கோபப்படாதீர்கள் உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை அவசியம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+