Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜென்மசனி, ஜென்ம குரு... ராகு கேது பெயர்ச்சி ரஜினிகாந்துக்கு எப்படி இருக்கும்

ரஜினிகாந்தின் அரசியல் பயணம் பற்றி பரபரப்பாக பேசப்படும் நிலையில் ரஜினிகாந்த், இந்த குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ரஜினிகாந்திற்கு ராசி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்த் மகர ராசி, திருவோணம் நட்சத்திரம் இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் ஏழரை சனியில் ஜென்ம சனி தொடங்கியுள்ளது. குரு பெயர்ச்சியும் இப்போது விரைய குருவாக இருந்து ஜென்ம குருவாகவாகவும், பூர்வ புண்ணிய குரு, லாப கேதுவாகவும் ரஜினிக்கு கோச்சார ரீதியாக கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்ட நடிகர் ரஜினிகாந்த் இந்த கிரகப்பெயர்ச்சியை எல்லாம் வைத்துதான் ஒரு முடிவுக்கு வரப்போகிறார்.
ரஜினிகாந்தின் அரசியல் பயணம் எப்போது என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் ரஜினிக்கு குரு பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது லட்சக்கணக்கான ரசிகர்களின் வேண்டுகோளாக இருக்கிறது. ஆனால் ஆன்மீக அரசியல் என்று சொன்ன ரஜினி போர் வரட்டும் என்றும் கூறியிருந்தார், அவர் சொன்ன பிறகு நாடாளுமன்ற தேர்தல் முடிந்து விட்டது. இடைத்தேர்தல், உள்ளாட்சித்தேர்தல் என பல போர்கள் வந்து நடந்து முடிந்து விட்டன. ஆனால் ரஜினிகாந்த் மட்டும் அரசியலில் ஈடுபடுவதைப்பற்றி மூச்சு விடவேயில்லை.

ரஜினிகாந்துக்கு சனி தசை நடந்த போது உடல்நல பாதிப்பு இருந்தது. 2018 ஜனவரி 21 தேதியுடன், ரஜினிகாந்த்துக்கு சனி திசை முடிவடைந்து புதன் திசை தொடங்கியுள்ளது. புதன்திசை அரசியல் பயணத்திற்கு ஏற்ற தசைதான். ரஜினி ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி ரஜினியை அரசியலுக்கு அழைத்துக்கொண்டே இருக்கின்றனர்.

ரஜினியில் அரசியல் நகர்வுகள்

ரஜினியில் அரசியல் நகர்வுகள்

ஆடி அமாவாசை நாளில் ரஜினிகாந்த் வீட்டை விட்டு கிளம்பிய போது அரசியல் பற்றி முக்கிய முடிவை அறிவிப்பார் என்று சொல்லப்பட்டது. மகாளய அமாவாசை நாளில் எதையாவது சொல்வார் என்று ரசிகர்களும் எதிர்பார்த்தனர். அவருக்குப் பின்னர் கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன் கூட சட்டசபை தேர்தல் பணிகளை ஆரம்பித்து விட்டார் என்று பலரும் பேசத் தொடங்கிய நிலையில் விஜயதசமி நாளில் ஏசி சண்முகத்துடன் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

ரஜினிகாந்த் ட்வீட்

ரஜினிகாந்த் ட்வீட்

அரசியல் பயணம் பற்றி ரஜினிகாந்த் எந்த முடிவும் சொல்லாத நிலையில் அவர் பெயரில் வெளியான அறிக்கை ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியது. தனது பெயரில் வெளியான அறிக்கைக்கு மறுப்பு அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த், அக்டோபர் 29ஆம் தேதி ட்விட்டரில் பதிவிட்டார். அந்த பதிவில் தனது உடல்நிலை பற்றியும், மருத்துவர்கள் அறிவுரை பற்றியும் கூறியுள்ள ரஜினிகாந்த், மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து என அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவிப்பேன் என்று பதிவிட்டுள்ளார்.

ரஜினிக்கு ராகு கேது பெயர்ச்சி

ரஜினிக்கு ராகு கேது பெயர்ச்சி

ரஜினியின் மகரம் ராசிக்கு கோச்சாரப்படி ராகு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். கேது பகவான் லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். இந்த இரண்டு ஸ்தானங்களுமே யோகமானதாகத்தான் இருக்கிறது.23-09-2020 முதல் 26-01-2021 வரையிலான கால கட்டத்தில் ராகு பகவான் மிருகஷீரிடம் நட்சத்தில் பயணம் செய்கிறார் கேது கேட்டை நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். இந்த காலகட்டத்தில் எடுக்கும் முடிவு ஒருவித ஸ்திர தன்மையை ஏற்படுத்தும். கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது காப்பாற்ற முடியும்

குரு பெயர்ச்சி ரஜினிக்கு எப்படி

குரு பெயர்ச்சி ரஜினிக்கு எப்படி

குரு பகவான் இப்போது மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். நவம்பர் 15ஆம் தேதி குருபகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி குரு பெயர்ச்சி நிகழ உள்ளது. மகர ராசி சனியின் ஆட்சி வீடு. இங்கு குரு பகவான் நீச்சம் அடைகிறார் என்றாலும் சனியின் ஆட்சி வீட்டில் சனியுடன் இணைந்து இருப்பதால் குரு பகவான் நீச்ச பங்கம் அடைகிறார். குரு பகவான் பார்வை உங்கள் ராசியின் 5ஆம் வீடு, 7ஆம் வீடு, மற்றும் 9 ஆம் வீடுகளின் மீது விழுகிறது. 5 ஆம் வீடு என்பது, அன்பு,குழந்தைகள், அறிவாற்றல், நம்பிக்கை போன்றவற்றையும், 7 ஆம் வீடு, துணை, தொழில், கூட்டாளி, பொதுத் தொடர்பு ஆகியவற்றையும், 9 ஆம் வீடு, புகழ், செல்வம் போன்றவற்றையும் குறிக்கிறது. இந்த கால கட்டத்தில் புகழ், செல்வாக்கு அதிகரிக்கும்.

சனிப்பெயர்ச்சி எப்படி

சனிப்பெயர்ச்சி எப்படி

சனிபகவான் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி இப்போது மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். இது ஜென்ம சனி. கோவில்களில் வாக்கியப்பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி வரும் டிசம்பர் 26ஆம் தேதி நிகழ உள்ளது. அப்போதுதான் தனுசு ராசியில் இருந்து மகரத்திற்கு இடப்பெயர்ச்சி ஆகிறார். எப்படி பார்த்தாலும் ரஜினிக்கு ஏழரை சனி காலகட்டம்தான். ரஜினிக்கு 60 வயதிற்கு மேல் ஆகி விட்டதால் இந்த சனிப்பெயர்ச்சி நன்மையைத்தான் செய்யும். அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாது.

கவனமும் நிதானமும் தேவை

கவனமும் நிதானமும் தேவை

ஏழரை சனியில் ஜென்ம சனி நடைபெறுகிறது. ஜென்ம குருவும் அமர்ந்துள்ளது சங்கடம் தரக்கூடிய அமைப்புதான் என்றாலும் 27-01-2021 முதல் 01-06-2021 வரை ராகு பகவான் ரோகிணி நட்சத்திரத்திலும் கேது பகவான் கேட்டை நட்சத்திரத்திலும் பயணம் செய்கிறார். இந்த காலகட்டம் தமிழகத்தில் தேர்தல் பரபரப்புகள் இருக்கும். குரு பெயர்ச்சி முடிந்து வாக்கியப்படி சனிப்பெயர்ச்சி நிகழும் காலகட்டமான டிசம்பர் வரைக்கும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தமிழக சட்டசபைத் தேர்தலில் ஒரு சின்ன மாற்றத்தை மட்டுமே ஏற்படுத்துவார் ரஜினிகாந்த்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+