Rasi Palan This Week: கடக ராசிக்கு அடிச்சது ஜாக்பாட்.. வாழ்க்கையை மாற்ற போகும் அந்த முக்கிய முடிவு
வார ராசி பலன்: செப்டம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான ஆவணி 23 முதல் ஆவணி 29 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கடக ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

இந்த ஆவணி மாதத்தில் புதன் வக்கிர நிவர்த்தி அடைகிறார். பொதுவாக இந்த மாதம் கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். நிறைய பேருக்கு வேலையில் நிரந்தர தன்மை உண்டாகும். திடீர் பண வரவுகள் ஏற்படும். மிதுனம், துலாம், கும்ப ராசிக்கும் நன்றாக இருக்கும். வீடு வாங்குவோருக்கு சிறப்பான காலகட்டமாக இருக்கும்.
சூரிய கிரகணம், குரு வக்கிர பெயர்ச்சி உள்ளிட்ட பல முக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், செப்டம்பர் 8 முதல் 14 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்தில் கடக ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்பு உள்ளிட்ட விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்யோகம், தொழிலில் மேன்மை ஏற்படும். உத்யோகம், தொழிலில் இருந்த தடைகள் விலகும். தொழில் அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் இருக்கும். பழைய பாக்கி வசூலாகும். கடன் சுமை குறையும்.
மாற்றம்
குடும்ப உறவுகளில் இருந்த சிக்கல்கள் தீரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். தாய், தந்தை வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் படிப்படியாக நிறைவேறும். இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறி வெற்றி கிடைக்கும். நெருக்கடியான நேரத்தில் தைரியமாக எடுக்கும் முடிவுகளால் வாழ்க்கை பெரிய மாற்றம், முன்னேற்றம் இருக்கும்.
முடிவில் உறுதி
எடுத்த முடிவில் எந்த காரணம் கொண்டும் பின் வாங்க கூடாது. நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவும் முன்னேற்றத்துக்கானது, அதனால் உங்களுக்கு வெற்றியை மட்டுமே கொடுக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படும். நிலம், வீடு, ஆடை, ஆபரணங்கள் உள்ளிட்ட அசையும், அசையா சொத்து சேர்க்கை இருக்கும்.
கவனம்
வண்டி, வாகனத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும். வார்த்தைகளில் மிகுந்த கவனம் வேண்டும். கோபத்தால் உறவில் உறவுகளிடம் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. அவ்வபோது மன அழுத்தம், குழப்பம் வந்து செல்லும். நேர்மறையான எண்ணங்களை அதிகம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
பரிகாரம்
பல், காது, மூக்கு, தொண்டை ஆகியவற்றில் கவனம் வேண்டும். சிறிய தொந்தரவாக இருந்தாலும் அலட்சியம் காட்டாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுப்பது நல்லது. உங்கள் வீடு அருகே உள்ள சிவன் கோயில் சென்று வழிபடுவது உங்களுக்கு அற்புதமான மாற்றத்தை கொடுக்கும். கோளறு பதிகம் படிப்பதால் தடைகள் விலகி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும்.
-
7 நாட்களில் வரும் குட்நியூஸ்.. துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு இந்த வாரம் எப்படி இருக்கும்? -
Magaram: அடித்தாடும் மகர ராசி.. ஜாக்பாட் யோகம்.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
Dhanusu: தனுசு ராசிக்கு அள்ளிக் கொடுக்கும் குரு.. ராஜா வாழ்க்கை வாழ போறீங்க -
Kumbam: வெற்றியை குவிக்கும் கும்ப ராசி.. இந்த விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்க..! -
Meenam: குரு சுக்கிரன் அருளால் மீன ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமான மாற்றம் காத்திருக்கு -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications