Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கார்த்திகை மாத ராசி பலன் 2021: துலாம் முதல் மீனம் வரை பிறந்த ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்?

கார்த்திகை மாதம் பிறந்து விட்டது. செவ்வாய் பகவானின் வீடான விருச்சிகத்தில் சூரியன் பயணத்தை தொடங்குகிறார். இந்த மாதத்தில் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: செவ்வாய் பகவானின் ஆதிக்கம் நிறைந்த விருச்சிக ராசியில் சூரிய பகவான் சஞ்சரிக்கும் மாதம் கார்த்திகை மாதம். இந்த மாதத்தில் நவ கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணி ஆகியவற்றைப் பொருத்து துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசிகளில் பிறந்தவர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

கார்த்திகை மாதம் பிறக்கும் போது 12 ராசிகளில் நவ கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் மேஷ ராசியில் சந்திரன், ரிஷப ராசியில் ராகு துலாம் ராசியில் செவ்வாய், புதன், விருச்சிகத்தில் சூரியன்,கேது தனுசு ராசியில் சுக்கிரன்,மகர ராசியில் குரு சனி என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

கிரகங்கள் இடப்பெயர்ச்சியைப் பார்த்தால் கார்த்திகை 4ஆம் தேதி புதன் விருச்சிக ராசிக்கு சென்று சூரியன் கேது உடன் இணைகிறார். குருபகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி கும்ப ராசிக்கு செல்கிறார். கார்த்திகை 18ஆம் தேதி செவ்வாய் விருச்சிக ராசிக்கு சென்று சூரியனுடன் இணைந்து தனது வீட்டில் ஆட்சி பெற்று அமர்கிறார். 22ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்கிறார். புதன் 23ஆம் தேதி தனுசு ராசிக்கு செல்கிறார். இந்த கிரகங்களின் மாற்றம் பார்வைகள் எந்த ராசிக்கு அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறது என்று பார்க்கலாம்.

துலாம்

துலாம்

உங்கள் ராசியில் நீச்ச நிலையில் பயணித்த சூரியன் இரண்டாமிடத்தில் தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தலைமைப் பதவி தேடி வரும். செய்யும் வேலைகளில் வருமானம் அதிகமாகக் கிடைக்கும். உங்கள் ராசியில் பயணிக்கும் செவ்வாய் மீது சனிபகவானின் பார்வை கிடைக்கிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குருவின் பார்வை உங்கள் ராசிக்குக் கிடைப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளால் சந்தோஷம் உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் விருத்தியாகும், பழைய வீட்டை வாங்குவீர்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீடு இடமாற்றம் ஏற்படும். வேலை விசயங்களில் விழிப்புணர்வு அவசியம், பொறுப்புகளை யாரை நம்பியும் ஒப்படைக்க வேண்டாம். முன் கோபத்தை குறைப்பது நல்லது. ஜாமீன் கையெழுத்துப் போட்டு பணம் கடனாக வாங்கித் தர வேண்டாம். கையில் இருக்கும் பணத்தை சொந்த பந்தங்களுக்கு கடனாகத் தர வேண்டாம் திரும்ப வர வாய்ப்பு இல்லை. ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் யோகம் உண்டாகும்.கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப வருமானம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

சூரியன், கேது உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். பதவி உயர்வு கிடைக்கும், உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சகோதரர்களுக்காக செலவு செய்யும் நிலை ஏற்படும். மாத பிற்பகுதியில் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியில் வந்து அமர்ந்து ருச்சிக யோகத்தை தரப்போகிறார். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி தெளிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். செல்வ நிலை உயரும். செயல்களில் வெற்றி கிடைக்கும்அரசாங்க வழியில் நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியம் நடைபெறும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களால் நன்மை உண்டாகும், பக்கத்து ஊருக்கு செல்லும் நிலை உண்டாகும். கவலைகள் கஷ்டங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். வேலை தொழிலில் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் வாடிக்கையாளர்களால் நன்மை உண்டாகும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

 தனுசு

தனுசு

சூரியன், கேது விரைய ராசியில் பயணம் செய்கின்றனர். அரசு ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும் உயர் அதிகாரிகளின் விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். விரைய செலவுகள் அதிகரிக்கும் அதை சுப விரைய செலவாக மாற்றுங்கள். சுக்கிரன் உங்கள் ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார் வசீகரம் அதிகரிக்கும். இரண்டாம் வீட்டிற்கு மாறி சனியோடு அமரப்போகும் சுக்கிரனால் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும், பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பண வருமானம் அதிகரிக்கும். பேச்சில் கவனம் தேவை. வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பச்சுமை கூடுதலாக இருக்கும். பணிபுரியும் இடத்தில் சில பிரச்சினை களைச் சந்திக்க நேரிடும்.பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன் பணிபுரிபவர்களால் பிரச்சினைகள் ஏற்படும் விட்டுக்கொடுத்து செல்லவும்.

ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் பழைய கடன்கள் வசூலாகும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில் திருப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

 மகரம்

மகரம்

சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் மூலம் லாபம் அதிகரிக்கும், பண வரவு அதிகரிக்கும் வங்கியில் சேமிப்பு கூடும். சுக்கிரன் விரைய ஸ்தானமான பனிரெண்டாம் வீட்டில் இருக்கிறார் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். விரயாதிபதி குரு தன ஸ்தானத்தில் இருக்கின்றார். திடீர் பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உங்கள் ராசியிலுள்ள சனியைச் செவ்வாய் பார்ப்பதால் மனக்குழப்பம் அதிகரிக்கும். சுப விரய செலவுகள் கூடுதலாக இருக்கும். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல் நலக்கோளாறுகள் வரலாம். பணிபுரியும் இடத்திலும் வேலைப்பளு அதிகரிக்கும். மனக்கசப்பு தரும் சம்பவங்கள் நடைபெறலாம். மருத்துவச் செலவுகளும் அதிகரித்து சேமிக்க இயலாமல் போகலாம். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி ஒரு பெரும் தொகையைச் செலவிடுவீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு திடீர் மாற்றங்கள் ஏற்படும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் லாபம் அதிகரிக்கும்.

கும்பம்

கும்பம்

சூரியன், கேது பத்தாம் வீட்டில் பயணம் செய்வதால் தொழில் உத்தியோகம் மேன்மையடையும் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் பதவியும் சம்பள உயர்வும் தேடி வரும். செவ்வாய் ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிப்பதால் அப்பா வழியில் உதவிகள் தேடி வரும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும், தொழிலில் கடும் உழைப்பு தேவைப்படும். ஏழரைச் சனி நடைபெறுவதால் எதிலும் பொறுமையும், நிதானமும் தேவை.வீடு மாற்றங்களும், இட மாற்றங்களும் தானாக வந்து சேரும். பெரிய மனிதர்களை பகைத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் தொழிலில் புதிய வாய்ப்புகள் கைகூடிவரும். வீடு, பூமி வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். பூர்வீக சொத்து விற்பனையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரித்து நல்ல நிலைமையில் வைத்துக் கொள்வது சிறப்பு. கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் காரியங்கள் எல்லாம் சிறப்படையும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாக இருக்கவும். உறவினர்களால் நன்மைகள் கிடைக்கும். இந்த மாதம் குல தெய்வ வழிபாடு நன்மையைத் தரும்.

மீனம்

மீனம்

சூரியன், கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் சஞ்சரிப்பதால் அப்பாவினால் நன்மை உண்டாகும், பிதுராஜ்ஜித சொத்துகள் கிடைக்கும். புதன், செவ்வாய் இணையும் குடும்பத்தில் ஒற்றுமையை அதிகரிக்கும். அப்பா வழி உறவினர்கள் மூலம் நன்மைகள் நடைபெறும். சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதின் ஆசைகள் எல்லாம் நிறைவேறும், தொழில் லாபம் அதிகரிக்கும். சுப விரய செலவுகள் கூடும். கணவன் மனைவி இடையே சில பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உறவினர்கள் உங்களை விட்டுப் பிரிய நேரிடலாம். சகோதர வழியிலும் பிரச்சினைகள் தலைதூக்கும். ஆரோக்கியத்திற்காக செலவு செய்வீர்கள். குரு பகவான் விரைய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் சுப விரயங்கள் அதிகரிக்கும் மாதமாகும். கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினைகள் அதிகரிக்கும் விட்டுக்கொடுத்து செல்லவும். குடும்பத் தகவல்களை மூன்றாம் நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் பிரச்சினை அதிகரிக்கும். பணிபுரியும் பெண்களுக்கு மாதக் கடைசியில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். வண்டி வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்திற்கு தேவையான விலை உயர்ந்த மின்சாதனப் பொருட்களை வாங்கும் வாய்ப்பு தேடி வரும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நண்பர்களுடன் சச்சரவு உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூருக்கு நீண்ட தூரம் பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+