Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிருஷ்ண ஜெயந்தி 2021: குசேலரை கோடீஸ்வரர் ஆக மாற்றிய கண்ணன் - நகை வாங்கினால் செல்வம் பெருகும்

அட்சய திரிதியை, ஆடிப்பெருக்கு நாளில் நகை வாங்குவதுபோல, கிருஷ்ணஜெயந்தி நன்னாளிலும் நகை வாங்கி அணியலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அன்போடும், நட்போடும் ஒருபிடி அவல் கொடுத்ததை ஏற்று நண்பர் குசேலரின் வாழ்க்கையையே மாற்றியவர் பகவான் கிருஷ்ணன். எனவேதான் கிருஷ்ண ஜெயந்தி நாளில் எத்தனையோ பலகாரங்களை படைத்து வழிபட்டாலும் அவல் படைத்து வழிபடுகின்றனர். அன்றைய தினம் தங்க நகைகள் வாங்கவும் சிறந்த நாளாகும்.

கிருஷ்ணரின் நண்பர் குசேலர், ஏழையாக மனைவி குழந்தைகளுடன் வசித்த அவரை செல்வந்தராக்கினார் பகவான். அதுவும் நண்பர் ஆசையாக கொடுத்த ஒருபிடி அவலை வாங்கி சாப்பிட்டு பொன்னும் மணியும் அவருக்கே தெரியாமல் பரிசளித்தார். கிருஷ்ண ஜெயந்தி நாளில் நாம் வாங்கும் தங்க நகைகள் மேலும் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது.

கிருஷ்ணரும், குசேலர் என்கிற சுதாமாவும் ஒன்றாக குருகுலத்தில் படித்தவர்கள். ஒருநாள் குருவின் மனைவி, கிருஷ்ணருக்கும் குசேலருக்கும் அவல் தயாரித்து கொடுத்தார். ஆனால் குசேலரோ கிருஷ்ணணுக்கு அதை சரிபங்கு கொடுக்காமல் அத்தனை அவலையும் குசேலனே சாப்பிட்டார். அதை நினைத்து கிருஷ்ணர் கவலைப்படவில்லை. ஆனால் குருவோ, "குசேலன் செய்த மிகப் பெரிய பாவச்செயல் இது என்று கூறியதோடு குசேலா நீ வறுமையில் வாடுவாய் என்று சாபமிட்டார்.

குசேலர் வறுமை

குசேலர் வறுமை

காலங்கள் கடந்தன. குசேலருக்கு திருமணம் நடந்தது. குழந்தைகள் பிறந்தனர். சந்தர்பத்திற்காக காத்திருந்த விதி, தன் வேலையை தொடங்கியது. குசேலன் வறுமையில் வாடினார். எனக்கு இல்லையெனாலும் பராவாயில்லை, ஆனால் நம் குழந்தைகள் உடுக்க மாற்று ஆடை கூட இல்லாமல் இருக்கிறதே. உயிர் வாழ அடுத்த வேளை சாப்பாடும் இல்லையே என்று வருத்தப்பட்டார். உடனே குலேசரின் மனைவி சுசீலை ஒரு யோசனை சொன்னார். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பார்களே. தெய்வம் போல இருக்கிறாரே உங்கள் நண்பர் கிருஷ்ணர். அவரை சந்தித்து வாருங்கள் என்றாள். மனைவியின் யோசனையை ஏற்று கிருஷ்ணரை சந்திக்க புறப்பட்டார் குசேலர்.

அவல் கொடுத்த சுசீலை

அவல் கொடுத்த சுசீலை

அப்போது சுசீலை,பல வருடங்களுக்கு பிறகு உங்கள் நண்பரை சந்திக்க செல்கிறீர்கள். கிருஷ்ணருக்கு அவல் என்றால் மிக பிடிக்கும் என்பீர்களே. இதோ இதில் கொஞ்சம் அவல் இருக்கிறது. கொண்டு செல்லுங்கள் என்று கொடுத்தாள். மனைவி கொடுத்த அவல் முட்டையுடன் நண்பனை பார்க்க அட்சய திருதியை நாளில் புறப்பட்டார் குசேலர்.

வரவேற்ற கிருஷ்ணன்

வரவேற்ற கிருஷ்ணன்


கிருஷ்ண பரமாத்மாவை பார்க்க குசேலர் என்பவர் வந்திருப்பதாக கிருஷ்ணரிடம் பணியாளர்கள் சொன்ன உடன் வாசலுக்கு ஓடோடி வந்தார் கிருஷ்ணர். குசேலனை கட்டித்தழுவி உள்ளே அழைத்துச் சென்றார்.
"அண்ணி எப்படி இருக்கிறார்கள் சுதாமா.? எனக்கு என்ன தந்தனுப்பினார்கள்.? அது என்ன மூட்டை?." என்றார் கிருஷ்ணர். குசேலன் மூட்டையை பிரித்து அவலை கையில் எடுத்தான். அதை ஆசையாக வாங்கி சாப்பிட்டார் கிருஷ்ணர். அவர் சாப்பிட சாப்பிட குசேலர் வீட்டில் செல்வம் நிரம்பியது. கிருஷ்ணரின் மனைவி உடனே வந்து நீங்கள் சாப்பிட்டது போதும் எனக்கும் கொஞ்சம் மிச்சம் வையுங்கள் என்று தடுத்தார்.

செல்வ வளம்

செல்வ வளம்

என்ன குசேலா, என் பங்கு அவல் கிடைக்க எத்தனை வருட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது பார்த்தாயா என்று கூறி சிரித்தார் கிருஷ்ணர். குசேலரும் சிரித்துவிட்டார். கிருஷ்ணரிடம் உதவி கேட்காமல் திரும்புகிறோமே என்ற வருத்தம் குசேலனிடம் இல்லை. நண்பனின் அன்பே போதும் என்று வீடு திரும்பினார். அங்கே தன் இல்லம் பொன்மயமாக ஜொலிப்பதை கண்டு, எல்லாம் கிருஷ்ணரின் செயலே, என்று மகிழ்ந்து போனார் குசேலர்.

வாழ்க்கையை மாற்றிய அவல்

வாழ்க்கையை மாற்றிய அவல்

அன்போடும், நட்போடும் ஒருபிடி அவல் கொடுத்ததை ஏற்று நண்பனின் வாழ்க்கையையே மாற்றி விட்டார் பகவான் கிருஷ்ணன். எனவேதான் கிருஷ்ண ஜெயந்தி நாளில் எத்தனையோ பலகாரங்களை படைத்து வழிபட்டாலும் அவல் படைத்து வழிபடுகின்றனர். கிருஷ்ண ஜெயந்தி நாளில் நாம் வாங்கும் தங்கமும், பொருட்களும் பல மடங்காக பெருகும் என்பது நம்பிக்கையாகும். அட்சய திருதியை நாள் போலவும் ஆடிப்பெருக்கு நாள் போலவும், தனத்திரயோதசி போலவும் கிருஷ்ண ஜெயந்தி நாளில் தங்கம் வாங்கலாம்.

கண்ணனின் பாதம்

கண்ணனின் பாதம்

கிருஷ்ணஜெயந்தியன்று குழந்தை பாத சுவட்டை மாக்கோலமாக வரைவது நாடெங்கும் எல்லா இடங்களிலும் மரபுவழி பழக்கமாக உள்ளது. எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன், காப்பேன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வோருவர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ண திருவடிக் கோலம் போடுகிறார்கள். இதற்கும் புராண கதை ஒன்ற உள்ளது. நாரதமுனிவர் ஒருசமயம் ஒவ்வோரு கிருஷ்ண பக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார். அதேபோல் பிருந்தாவனத்தில் ஒவ்வோரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து பரவசமும் ஆனந்தமும் அடைந்தார்.

எங்கும் இருக்கும் கண்ணன்

எங்கும் இருக்கும் கண்ணன்

இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் நம் கிருஷ்ணபரமாத்மா. நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன், காப்பேன் என்பதைக் குறிப்பிடவே ஒவ்வோருவர் வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ண திருவடிக் கோலம் போடுகிறார்கள்.
மதுரா நகரில் தேவகி-வாசுதேவருக்கு எட்டாவது மகனாக பிறந்தார் ஸ்ரீகிருஷ்ணர். கிருஷ்ணர் சிறைச்சாலையில் பிறந்தார். பின் வளர்ப்புத் தாய் யசோதையின் மூலம் கோகுலத்தில் வளர்க்கப்பட்டார். கிருஷ்ணர் சிறுவனாக இருந்தபோது வெண்ணை திருடி தின்றார். அப்போது வெண்ணை சிதறி அவர் உடம்பு மற்றும் கால்களில் விழுந்தது. அதோடு கிருஷ்ணர் நடந்ததால் கிருஷ்ணர் கால் தடம் பதிந்தது. அதை நினைவுப்படுத்தும் விதமாக கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று மாவால் கால் சுவடு பதிக்கப்படுகிறது. குழந்தைகளின் பாத வடிவ சுவடு பார்ப்பதற்கு எட்டு போன்ற வடிவுடன் இருக்கும். அதற்கு மேல் 5 விரல் பதிவுகள் இருக்கும். அதாவது ஓம் நமோ நாராயணா என்ற எட்டு எழுத்து மந்திரமும் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரமும் ஒருங்கிணைந்து இருப்பதை திருப்பாதம் பிரதிபலிக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+