Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்களில் மச்சம் அதிர்ஷ்டமா? உயர்பதவி தேடித்தரும் மச்சம் எங்கிருக்கும் - மச்சசாஸ்திரம் சொல்வதென்ன?

ஒருவரின் உடம்பில் மச்சம் அமைந்திருக்கும் இடத்தை வைத்து அவர்களுக்கு அதிர்ஷ்டமும் நல்ல வாழ்க்கைத்துணையும் கிடைக்கும் என்கிறது மச்ச சாஸ்திரம். உயர்பதவி கிடைக்கும், அழகான வாழ்க்கைத் துணை கிடைக்கும் என்றெல்லாம் மச்சத்தை வைத்த

Subscribe to Oneindia Tamil

மதுரை: அதிர்ஷ்டக்கார ஆணைப்பார்த்து அவனுக்கென்ன மச்சக்காரன் என்பார்கள். சாமுத்திரிகா லட்சணப்படி மனிதர்களின் உடலில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதை வைத்து அவர்களின் அதிர்ஷ்டம், குண நலன்கள் எப்படி இருக்கிறது என்பதை மச்ச சாஸ்திரம் தெரிவிக்கிறது. மச்சம் ஆண், பெண்ணின் அதிர்ஷ்டம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். எங்கு மச்சம் இருந்தால் என்னமாதிரியான அதிர்ஷ்டம் என்றும் கூறியுள்ளனர்.

ஒருவரின் உடம்பில் மச்சம் தோன்றுவதற்கு கிரகங்கள்தான் காரணமாக இருக்கின்றன. ராகு கேது கிரகங்களும், ரத்தத்திற்கு காரகரான செவ்வாயும் மச்சத்திற்கு காரணமாகின்றன. ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாய் நீசமாக ராகு கேது தொடர்பு பெற்று சனி பார்வை பெற்றால் மச்சம் அதிகம் இருக்கும் என ஜோதிட அலங்காரம் சொல்கிறது. இதுபோன்ற அமைப்பு உள்ளவர்கள் உயர்ந்த பதவியில் இருப்பார்களாம்.

சிலருக்கு பிறக்கும்போதே மச்சம் இருக்கும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும்.
ஆண்கள், பெண்களில் எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

முகத்தில் மச்சம்

முகத்தில் மச்சம்

ஆண்களுக்கு இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்க்காயுள் என்று சொல்லப்பட்டுள்ளது. இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும். வலது புருவத்தில் மச்சம் இருந்தால் மனைவி அழகாக அதிர்ஷ்டசாலியாக அமைவாராம். வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும். ஆண்களின் வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என்கிறது மச்ச சாஸ்திரம்.

கண்களில் மச்சம்

கண்களில் மச்சம்

இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள். வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும். வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார். இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார். இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.

மூக்கு நுனியில் மச்சம்

மூக்கு நுனியில் மச்சம்

மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள். மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள். மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு சிநேகமும் இவர்களுக்கு இருக்கும். மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.

காதில் மச்சம்

காதில் மச்சம்

மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள். மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள். மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்குமாம். வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம், இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கை தேவை. இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவருக்கு எளிதாக கிடைக்குமாம்.

பாசமானவர் நேசமானவர்

பாசமானவர் நேசமானவர்

தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும். கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும். மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார். வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். இடது மார்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.

தொப்புள் பகுதியில் மச்சம்

தொப்புள் பகுதியில் மச்சம்

வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள். வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான். தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான். முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள். ஆண்களுக்கு அந்தரங்க உறுப்புகளில் மச்சம் இருக்கக் கூடாது அப்படி இருந்தால் அந்த மாதிரி இடத்திற்கு செல்வார்கள் என்றும் சாஸ்திரம் சொல்கிறது.

அதிர்ஷ்டசாலி பெண்கள்

அதிர்ஷ்டசாலி பெண்கள்

ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும் என்று மச்ச சாஸ்திரம் கூறுகிறது. நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பார்களாம். நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள்.

அன்பான துணைவன்

அன்பான துணைவன்

பெண்ணின் மூக்கின் மீது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பார்களாம். மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார். மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக இருப்பார்கள் சிறந்த குணசாலியான கணவன் அவருக்கு வாழ்க்கைத்துணைவராக வருவாராம்.

 வசீகரிக்கும் பெண்கள்

வசீகரிக்கும் பெண்கள்

மோவாயில் மச்சம் உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும், அமைதியும் அவளின் உடன் பிறந்ததாக இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான ஆணை கணவராக அடைந்திடுவாள். இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள். வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பாள்.

அதிர்ஷ்டம் தேடி வரும்

அதிர்ஷ்டம் தேடி வரும்

கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும். இடது தாடையில் மச்சம் இருந்தால் ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவள். வலது தாடையில் மச்சம் என்றால் பிறரால் வெறுக்கப்படுவாள். கழுத்தில் வலப்புறத்தில் மச்சம் உள்ளவள் பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தருவாள். பெண்ணின் தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும் நிறைய இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது.

நெஞ்சில் மச்சம்

நெஞ்சில் மச்சம்

பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்குமாம். நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான்.

சிறந்த நிர்வாகி

சிறந்த நிர்வாகி

தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள். தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும். உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக இருக்கும். நிர்வாகத்திறமை சிறப்பாக இருக்குமாம். கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும்.

அந்த இடத்தில் மச்சம்

அந்த இடத்தில் மச்சம்

இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பாள். அதுவே வலது முழங்காலில் என்றால் அவள் பிடிவாத குணம் கொண்டவராகவும் இருப்பாராம். இதே போல இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷ்டப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவார்கள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இருக்கும். பிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் பெண்கள் சிறந்த அதிர்ஷடசாலிகள். எதிர்பாராத நேரத்தில் உயர்ந்த பதவிகள் இவர்களைத் தேடி வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+